thamil thesiya maaveerar thinam







மானம் காத்த எங்கள் மாவீரர் துயிலும் இல்லங்களை மாவீரர்கள் புதைந்த இடங்களாக நாம் எண்ணக் கூடாது. அவை உறுதியின் உறைவிடம், உன்னதமான மனிதப் பிறவிகள் மாவீரத் தெய்வங்களாகிய புனிதமான கோயில்கள் அவை. அந்தப் புனிதர்கள் துயில் கொள்ளும் அப்புனித இடத்தில் பூக்கள் வைப்பது மட்டுமல்ல எங்கள் கடமை. கூப்பிய கரங்களுடன் விழி சொரிவது மட்டும்தான் எங்கள் பணியென எண்ணுவதும் கூடாது. எந்த நோக்கத்திற்காக, எந்த மண்ணின் விடுதலைக்காக அவர்கள் உயிர்த் தியாகம் புரிந்தார்களோ அதை உணர்ந்து அதற்காக அயராது உழைத்து இறுதி மூச்சுள்ளவரை போராடி தமிழீழத் தாயகத்தை மீட்டெடுத்து உயர்ந்த, உன்னதமான அந்த மாவீரர்களின் புனிதத் திருவடியில் காணிக்கையாக்குவதே நாங்கள் அவர்களுக்குச் செய்யும் வரலாற்றுக் கடமையாகும் - தோழன் மருதவாணன்

No comments:

Post a Comment