boycott vettaikaran

boycott vijay in vettaikaran






இப்போதெல்லாம் புதிய படங்கள் வந்தவுடன் புறக்கணிப்போம் என்று சொல்லி எமக்குப் பழகிவிட்டது.
நான் இப்பொழுது சொல்கிற இந்தப்புறக்கணிப்பு வெறும் கோபத்தினால் ஆனதல்ல!
மனவருத்தினாலானதும்கூட!!!!

ஊரே எரிய மன்னன் பீடில் வாசித்த கதையாய் இருக்கிறது விஜய் மற்றும் விஜய் அன்ரனியின் கதை!
35 வருட கால விடுதலை வரலாறு அடித்து நொருக்கப்பட்டிருக்கிறது. அரை இலட்சம் மக்களை இழந்துவிட்டோம்
சர்வதேசம் சாக்குக்காகிலும் நிறுத்து! அங்கே குண்டு போடாதே! இங்கே போடாதே! என்று சொல்லிக்கொண்டிருந்த வேளை...

இவர்கள் ( இலங்கை இராணுவம் ) எங்கள் கடவுள்கள் என்ற பாடலுக்கு இசையமைத்தவர் இந்த இராஜ் வீரறட்ணே (Iraj Weeraratne)

http://www.youtube.com/watch?v=LfejJ4BvgZk

இவருடன் சேர்ந்து கைகோர்த்து நிக்கிறது வேட்டைக்காரன் யுனிட்!
இன்னும் சில பாடல்களை விஜய் அன்ரனி இவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளாரம்.
எதுவும் செய்யுங்கள் எங்களிடம் வராதீர்கள்.


வந்தால் புறக்கணிப்போம்...




Vijay has worked with SINGALA man who is the music director IRAJ WEERARATNE of the song SRILANKA {SINGALA} ARMY IS OUR GOD.Singalese have killed about 150,000 Eelam Tamils and raped 1000s of TAMIL WOMEN in 2009 alone.Now 300,000Tamils died in NAZI type camps with no food,no water and no toilets.Women are raped in camps and subjected to rapes and forced abortion if they are.already pregnant .Thearmy strips mom,dad ,son and daughter and makes them to see each other.People suffer in tents in this heavy rains.





அன்புக்குரிய தமிழ் உறவுகளே,

சிங்கள இனவெறியர்களின் இரத்தக்கறைபடிந்த வரலாறு தெரியாமல் ஆயுதங்களை கைவிட்டு போராட்டத்தை மறந்து நட்புவலை வீசும்படி, உண்மையிலேயே இலங்கை அரசியல் வரலாறு தெரியாமல் வடிவேலு கூறுவதுபோல் சின்னப்பிள்ளைத்தனமாக பாடலுக்கு பொருளமைத்துள்ளனர்.

சற்று எண்ணிப்பாருங்கள்,

நாம் கைகோர்கும் விதத்திலா சிங்களம் உள்ளது. பட்டப்பகலில் மக்கள் மத்தியில் தமிழனை அடித்துக்கொல்லும் போது தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்த்து நின்றவர்கள் தான் சிங்களவர்கள். இதுமட்டுமா, நாம் அமைதி வழியில் போராட்டம் நடத்தியபோதெல்லாம் கொடுர ஆயுத வன்முறை திணிக்கப்பட்டுபோது தான் நாம் ஆயுதம் ஏந்தினோம். அதை தற்பொழுது மௌனித்துள்ளோம்.

சர்வதேசம் சரியான தீர்வு வழங்கவில்லையென்றால் மீண்டும் அவ்வாயுதங்களை கைகளில் ஏந்துவோம். ஏனெனில் 21 ஆம் நூற்றாண்டின் இனவழிப்பு வேட்டையாடும் கொடிய சிங்களவர்களிடமிருந்து எம்மைக் காக்க எமக்கு வேறு வழியில்லை. நாம் நிறுத்தவேண்டுமென்றால் நீங்கள் நிறுத்துங்கள். எம்மினத்துக்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளுங்கள்.

மிகப்பெரும் வேதனையுடன் உலகப்பந்தெங்கும் தமிழீழம் எனும் தணியாத தாகத்துடன் போரடிக்கொண்டிருக்கும் மக்களின் மனதில் விஜய் எனும் தமிழ்த்திரையுலக நடிகருக்கு ஓர் இடம் இருந்ததென்றால் மறுப்பதற்கில்லை. ஆனால் பால் குடிக்கும் பிள்ளைகூட விஜய்யை நினைப்பதற்கு முன் எமது தலைவருக்கு வணக்கம் சொல்லி மாவீரர்களை வணங்கித்தான் நடிகர் விஜய்யான உம்மை நேரம் கிடைத்தால் சிந்திக்குமென்பதை நீர் உணரவேண்டும்.

இப்படித்தான் எமது தலைவர் எமது தமிழ்த்தேசியத்தை சர்வதேசமயமாக்கியுள்ளார். உம்முடைய புதிய கூட்டணி உம்மை நேசித்த அனைத்து மக்களின் மனங்களையும் சீற்றத்துக்குள்ளாக்கியுள்ளது. இதற்குப்பதிலாக ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனத்திடமும் நடிகர் விஜய் அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். அத்துடன் வேண்டாத தமிழினவழிப்புக் கும்பலுடனான தொடர்புகளை துண்டிக்கவேண்டும்.

இவை நடைபெறாத பட்சத்தில் வேட்டைக்காரன் கூட்டணிக்கெதிரான புறக்கணிப்புப் போராட்டம் தமிழ் இளையோர்களால் அனைத்துக் கிளைகளையும் ஒன்றிணைத்து சர்வதேசஅளவில் தீவிரப்படுத்தப்படும் என்பதனை அறியத்தருகிறோம்.

செல்வக்குமரன்
ஒருங்கிணைப்பாளர்
(ஐரோப்பிய இளையேர் பேரவை)







pic:stalin

29 comments:

  1. yeahhh fuck vijayy.. their just using us to make money out of it

    ReplyDelete
  2. yee pleasee dont wacht vijay's vettaikaran they are juste using us to make money fuking vettaikaran

    ReplyDelete
  3. vijay is son of bxxxx, he going to drop in filem industrial soon. hope everyone not watch this fxxx movie.

    ReplyDelete
  4. im gonna watch it bootlegg styll

    ReplyDelete
  5. Our tamil ppl are still goin to end up watching this stupid shit and make Vijay live. Like the before me said.

    ReplyDelete
  6. Aren't you guys are all Hypocrites ??... You will let Mutthaia Muralidaran to play with Srilankan Guys ?, but won't let Vijay Anthony to do music with a Srilankan Guy ??.You will watch every cricket match played by Singalese Player (Ajantha Mendis is from Srilankan Army ), but won't watch Vijay's Movie !!!... Where is the fairness ??...

    ReplyDelete
  7. Mutthaia Muralidaran ellam oru tamilanaaga illai illai oru manithanaaga neengal ninatthaal athai vida muttaal thanam veru yethum illai..

    panathirkkaaga ________kooda thinpaargal..

    thiruttu payalgal..

    ReplyDelete
  8. I saw Twenty Twenty match in london, when srilankan team played and 90 percent of the people watched are srilankan tamilians and cheered the singalese players ..so you mean to say that all those tamil guys who watched and supported jayasuriya, jayawardene, dilshan, etc are " panathirkkaaga ________kooda thinpaargal " passangala ??

    I HATE DOUBLE STANDARDS BY SOME TAMILIANS... THEY CAN WATCH SINGALESE PLAYERS, BUT THEY ADVISE OTHER THAT THEY SHOULDN'T WATCH VIJAY OR VIJAY ANTONY MOVIES

    ReplyDelete
  9. 35 warudaa waralaruu..kadasijalii ennaa kilichathuu..ellamm nasamaponathuu..ithuu ..singala makalall ilaa emm tamill makalall thann engalludaija sontha tamil makallall thann engall elamm engalukuu kidaikaa willaii..elathill ulla tamil makalee otrumai illai..ithukull kadal thandii irukumm india engaludann epadii irukaporarhall..awann awann eppadii munneralamm enduu thann josiparhall..namm makall ewann muneruwann awanayy pinnall kuthawenumm enduuthann josiparhall..ithuwee..sharukan saithuu irunthall ennaa saithuu irupijall poi solle porijalee ungadaa movie nange purakanika poromm enduu ..illa..ithukuu maduum enn ipadii enn endrall vetaikaran tamil movie jaa angathanee nangee engadee walee adee mudijumm ..ithan tamilen..

    ReplyDelete
  10. WTF is wrong with these retards...no more tamil itiger flag to carry around so this is there new thing. This boycoot bulllshit is only the tiger supporters which is like 30% of the tamil pop.....300 000 tamils in toronto and only 50 00 showed up for the stupid protests. Tigers killed more thamilans than they did sighalese when wll you idiots learn ..... faaaakkkk....start a new boycott ... whoevers holdina tiger flag seripaala podu....unity will reviv the tamils and instead of working towards that they wanna go ahead and cause another 40 years of seperation and distraught. If you dont wanna see it dont...thats your wish but this is absolute bullshit.

    ReplyDelete
  11. இவர்(vijay) படத்தை சும்மாவே எவனும் பார்க்க மாட்டனுக..
    இதில இவரு சிங்கள காடையன் கூட வேற கூட்டு வச்சுருக்காரா..
    கிழிஞ்சுது போ...
    வேட்டைக்காரன் கையில் எங்கள் தமிழ் ரத்தம் உள்ளது..
    அதை பார்த்தால் நிச்சயம் நான் தமிழனே அல்ல..

    ReplyDelete
  12. hmm...ningaa parkadijumm tamileenn illai..ipadii tamil elathinn rethamm irunthall enn inngaa irukijaall elathulaa poi irukalamee..ningalumm walee madijall walrawanaijumm widaa madijall..santhosham..muthalee engadaa nadill nadakumm..mosadihalaii olikaa papomm athukuu apuramm matraijee nadaii thirthuwomm....engadaa nadill enngall sonthaa tamilen saijumm kuthai widee vettaikaren ewalawoo parawaii illai

    ReplyDelete
  13. Why you wast your time on useless things!!!!!!! artist are artist!!!! just leave them out of politics you guys dont understand what happening the producer of Vettaikaran are Sun pictures and who are Sun pictures!!! politics are useing your and you dont understand that instead of boycotting sports and talents of people just stand up agaisnt what happening in our coutry bloody loosers

    ReplyDelete
  14. கொலை செய்கின்ற அரசாங்கத்தை ஊக்கப்படுத்தி, பல கொலைகளை செய்ய உதவிய
    இந்திய காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த
    படமாகிய....
    காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய
    வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை
    இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம் என தமிழ் பல்கலைக்கழகப்
    பட்டதாரிகள் அமைப்பு - கனடா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள்து.

    அன்பான உறவுகளே!
    உங்களோடு சில நிமிடங்களை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றோம். நாம் கடந்த
    காலங்களில் புறக்கணிப்பு போராட்டங்களை பெருமளவில் நடத்துவதற்குத் தயக்கம்
    காட்டி வந்திருக்கின்றோம். எம் தயக்கத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட
    ஸ்ரீலங்கா அரசு தட்டிக் கேட்பாரற்ற நிலையில் எம் மக்களைக்கொன்றொழித்தது.
    வதை முகாம்களில், சிறைகளில் அடைத்துச் சித்திரவதை செய்கின்றது. நாம்
    எதையும் ஆழமாக சிந்தித்துச் செயற்படுவதில்லை. பொதுநோக்கில் ஆழமான
    செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. உணர்ச்சி வேகத்தால் அவ்வப்போது கூடிக்
    கலைந்திருக்கின்றோம். நாம் புறக்கணிப்பு போராட்டங்கள் குறித்து நிறையப்
    பேசுவோம். களங்களையும் குறிப்போம்.
    ஆனால் களமிறங்கும்போது பின்வாங்கிவிடுகின்றோம். ஈடுபாடின்மை பயம் இவை
    போன்றவையே நாம் ஒப்புக்கொள்ள மறுக்கின்ற காரணங்கள். புறக்கணிப்புப்
    போராட்டம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும்; அங்கீகரிக்கப்பட்ட சனநாயக
    உரிமை. அந்த சனநாயக உரிமையினைக் கையிலெடுத்து எம் உறவுகளைக் காப்பதற்காக
    போராடியிருக்க வேண்டிய நாம் காலங்கடந்தும் அதை உணராமல் இருப்பதுதான்
    வேதனைக்குரியது.
    ஆரம்ப நாட்கள் முதல் நாம் ஸ்ரீலங்கா பொருட்களையும், சன் ரீவி (Sun TV)
    போன்ற தொலைக்காட்சிகளையும் பெரும் முனைப்போடு புறக்கணித்திருந்தால்@
    சிலவேளை எம் உறவுகளை நாம் காப்பாற்றியிருக்கக் கூடும். இன்று உறவுகளை
    இழந்து, அழது புலம்புகின்றோம்.
    முள்ளியவாய்க்கால் கொலைக் களத்தில் எஞ்சிய எமது மக்கள்
    சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்து விட்டன. இன்றும் தமிழர் வணிக
    நிறுவனங்களில் குவிந்து கிடக்கிக்கின்ற ஸ்ரீலங்கா உற்பத்திப் பொருட்கள்
    எதைப் புலப்படுத்துகின்றன?
    அந்தச் சுவைகளைத் துறக்க நாதியற்று, அவற்றை நுகர்ந்துகொண்டிருக்கின்றோமே
    நாம் இன்னும் புறக்கணிப்பின் உண்மையான போராட்டக்களத்துக்குள்
    இறங்கியிருக்கின்றோமா? இல்லை என்பதுதான் வெளிப்படையான விடை.
    இதன் ஊடாக, தொடர்ச்சியான புறக்கணிப்பு போராட்டத்தால்
    விளைந்திருக்கக்கூடிய நன்மைகளை நாம் அறிய முயற்சிக்கவில்லை என்பதுதான்
    கசப்பான உண்மை. சனநாயக வழிப்பட்டதும் பெரு வெற்றியைத் தரக்கூயடியதுமான
    புறக்கணிப்பு போராட்டத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்வது,
    எதிர்காலத்தில் நாம் அதனைக் கையில் எடுக்க வேண்டியதன் அவசியத்தை
    உணர்த்தும்.IRISH நாட்டில் ஏற்பட்ட நிலச் சண்டையில் (Land War) Captain Charles
    Boycott அவர்களினால் பறிக்கப்ட்ட நிலப்பிரதேசங்களும், அவருடைய தேவையற்ற
    பண அறவிடல்களுக்கும் எதிராக கிழந்தெழுந்த விவசாயிகளின் போராட்டமே
    பின்னால் Boycott என்ற போராட்ட வடிவம் உருவாகுதற்கு காரணமாக
    இருந்திருக்கின்றது.
    ஒரு மனிதன் சுவாசிப்பதற்கும், இதர மக்களுக்கு நடக்கின்ற அநியாயங்களைத்
    தட்டிக்கேட்பதற்கும் புறக்கணிப்பு போராட்டம் ஒரு கருவியாக பல நாட்டு
    மக்களால் இற்றைவரைக்கும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. சனநாயகத்தின்
    அடிப்படை உரிமையின் ஒரு அங்கமாகவே இந்தப்போராட்டம் இருப்பதை உணர
    வேண்டியது தமிழர்களின் முக்கிய கடமையாகும்.
    மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சூழல், மற்றும் விலங்குகளுக்கும் தீங்கு
    ஏற்படுகின்ற போது, அந்த தீங்கைச் செய்கின்ற நிறுவனங்கள், தனியார் மற்றும்
    அரசாங்கங்களுக்கு எதிராக தொடர் போராட்டமாக இருக்கக்கூடியது இந்தப்
    போராட்டமே!தீங்கு செய்பவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், அவர்களைச்
    சட்டத்தின் முன்னால் நிறுத்தவும், அவர்களின் மமதைப்போக்கை நிறுத்தவும்
    இந்தப் போராட்டம் மிகப்பெரும் கருவியாய் இருந்திக்கின்றது.....

    ReplyDelete
  15. ......வெற்றியீட்டிய புறக்கணிப்புப் போராட்டங்கள் சில:
    • 1830 இல் நடந்தேறிய நிக்கரோ மாநாட்டில் (National Negro Convention)
    ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானம் அடிமைகளை வைத்து
    உருவாக்கப்படும் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை
    அடிப்படையாகக் கொண்டது. அத்துடன் அடிமைத்தனத்தை ஊக்கப்படுத்துவதையும்
    தடைசெய்யுமாறு அத் தீர்மானம் கேட்டுக்கொண்டது.
    • அமெரிக்காவில் நிற வேறுபாடு உச்சம் தொட்ட காலத்தில்; வெள்ளை
    இனத்தவர்களால் நடத்தப்படும் பேருந்துகளில் கறுத்த இனத்தவர்கள் பயணிப்பதை
    புறக்கணிக்கும்மாறு வேண்டிக்கொள்ளப்பட்டார்கள். பேருந்துகளில்
    கறுப்பர்களுக்கான தனியான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
    • அமெரிக்காவின் விடுதலைக் காலத்தில்; பிரித்தானியா அரசாங்கத்துக்கெதிராக
    போராட்டம் நடந்துகொண்டிருக்கும் போது பிரித்தானியாவில் இருந்து
    இறுக்குமதியாகும் அனைத்தையும் புறக்கணிக்குமாறு அமெரிக்க விடுதலைப்
    போராளிகள் அமெரிக்க மக்களுக்கு மிகவும் கடுமையான கட்டளையொன்றை
    பிறப்பித்திருந்தார்கள்.
    • இந்திய சுதந்திரக்காலத்தில் பிரித்தானியாவுக்கு எதிராக காந்தியடிகள்
    தலைமையில் பல புறக்கணிப்புப் போராட்டங்கள் நடந்தேறியது.
    • யூதர்களின் வன்முறை அழிவுக்கு அவர்களே காரணம் என கருத்துப்பட தெரிவித்த
    Henry Ford அவர்களுக்கெதிராக, அவருடைய நிறுவனம் தயாரித்த கார்களை
    வாங்கவேண்டாம் என யூதர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தில்
    இறங்கியிருந்தார்கள்.
    • 1980 இல் ரஸ்ஸியாவில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியினை
    புறக்கணிக்க வேண்டி அமெரிக்க அரசாங்கமே முன் நின்று புறக்கணிப்புப்
    போராட்டத்தை நடத்தியது.
    இத்தகையபோராட்டங்களூடாகவே போராடிய இனங்கள் விடுதலை பெற்றிருக்கின்றன
    அல்லது விடுதலைக்கு வலுவேற்றியிருக்கின்றன. புறக்கணிப்பின் தாக்கமே எம்
    மக்களின் சுதந்திரத்தை வெற்றியாக்கித் தரும்.
    புறக்கணிப்புப் போராட்டத்திலே நாம் தேடும் பல விடைகள் மறைந்திருக்கின்றன.
    இந்தவகைப் போராட்டமே தமிழர்களில் விடிவை எடுத்துவரும் என்பதற்கு மேலே
    சொல்லப்பட்ட உதாரணங்கள் போதுமானவை.
    இலங்கையின் பொருளாதாரத்தையும், இன்னும் புதியதாக உருவாகிக்கொண்டிருக்கும்
    தமிழ் விரோத சக்திகளையும் கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வருவதற்கு
    தமிழர்கள் நாம் முன்வந்தால் மட்டுமே முடியும். அப்போதுதான்
    தேடிக்கொண்டிருக்கின்ற விடிவை நம் மக்கள் அடையலாம்.
    நாளை நாங்கள் இலங்கையில் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கும் போது, செத்து
    மடிந்த எங்கள்; மொழி பேசுகின்ற மக்களையும், கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டு
    காடுகளில் வீசப்பட்ட எங்கள் உறவுகளையும், கொடுரமாகப் பாலியல் பலாத்காரம்
    செய்யப்பட்ட எங்கள் பெண்மணிகளையும், பிஞ்சுகளிலே உயிரைக் கொடுத்த எம்
    பச்சிளம் பாலகர்களையும், காணாமல் போய்க்கொண்டிருப்போரையும் மனதில் கொண்டு
    வாருங்கள்.
    உங்களால் முடியும்!
    நீங்களும் மனிதர்கள் தான். நீங்கள் வாங்கப்போகின்ற ஒவ்வொரு பொருளிலும்
    எம் உறவுகளின் சோகமும் இரத்தக் கறையும் கலந்திருப்பதை உணருங்கள்.
    புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது எந்தவொரு பங்களிப்பையும் விட மிக
    இலகுவானதாக செய்யக்கூடியது.
    இதைக் கூட நாம் செய்யத் தவறினால், தமிழர்களாக அல்ல, மனிதர்களாக
    பிறந்ததில் பயன் உண்டா என்பதை உங்கள் மனச்சாட்சியிடம்
    கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.
    வேட்டைக்காரன் படப் புறக்கணிப்பு!!!
    கொடுமைகளை செய்கின்ற இலங்கை இராணுவத்துக்கு இசை அமைத்தவர்@ இப்போது
    வரப்போகின்ற வேட்டைக்காரன் படத்துக்கும் இசை உதவி செய்திருக்கிறார். கொலை
    செய்கின்ற அரசாங்கத்தை ஊக்கப்படுத்தி, பல கொலைகளை செய்ய உதவிய இந்திய
    காங்கிரசு கட்சியில் உறுப்பினராகிய திரு.விஐய் அவர்கள் நடித்த படமாகிய
    வேட்டைக்காரனையும் நாம் புறக்கணிப்பதிலும் ஓரு ஆணித்திரமான செய்தியினை
    இந்தியாவில் இருப்போருக்கு நாம் அனுப்பலாம்.
    நீங்கள் பணம் கொடுத்துப் பார்க்கப்போகின்ற படத்துக்குப் பின்னால் ஒரு
    இரத்தக் கதையொழிந்திருப்பதை உணருங்கள். பொழுதுபோக்குக்காக மற்றைய படங்களை
    பாருங்கள். ஆங்கிலப்படங்களை ஊக்கப்படுத்துங்கள். குற்றம் செய்தவர்களை
    இன்னும் பணம் கொடுத்து ஊக்கப்படுத்தாதீர்கள்.
    மக்களுக்காக கண்ணீர் சிந்தும் மற்றய தமிழர்கள் நடித்த படங்களை பாருங்கள்.
    எமக்கான ஆதரவுக் குரல்களைத் தரும் கலைஞர்களை ஆதரியுங்கள்.
    பாசத்துக்குரிய தமிழர்களே!!!
    புறக்கணிப்பு போராட்டங்களையும் வெற்றியடைய வைப்பீர்களா?
    அல்லது மீண்டும் தலையைச் சுற்றி வந்து மூக்கைத் தொட முயற்சிப்பீர்களா?
    எம் விடிவுக்கான வாசலின் திறவுகோல் உங்கள் ஒவ்வொருவரிடமும்; தான்
    உள்ளது!!!

    ReplyDelete
  16. யார் இந்த இராஜ் வீரறட்ணே? சிங்கள அரசுடன் சேர்ந்து அவர்கள் இராணுவத்தினை தெய்வம் என்று வணங்கும் பாடலை உருவாக்கியவர் அத்துடன் அதில் நடித்தவர். அதுமட்டும் அன்றி "கொத்து" என்ற பாடலில் எங்கள் தேசியத்தலைவரை நையாண்டி செய்தவர். (தலைவர்போல ஆடிப் பின் வெடித்துச் சிதறுவார்}

    ReplyDelete
  17. நடிப்பு: விஜய் , அனுஷ்கா, சலீம் கவுஸ், ஸ்ரீஹரி, ஷாயாஜி ஷிண்டே
    ஒளிப்பதிவு: கோபிநாத்
    இசை: விஜய் ஆண்டனி
    இயக்கம்: பாபு சிவன்
    தயாரிப்பு: ஏவிஎம்

    மாஸ் மசாலா என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர முடியாத அல்லது விருப்பமில்லாத விஜய்யின் மற்றுமொரு வழக்கமான மசாலா வேட்டை இந்த வேட்டைக்காரன்.

    கதைப்படி ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்) ஒரு தூத்துக்குடி பையன். ப்ளஸ்டூவை நான்காவது அட்டம்டில் தாண்டும் சராசரி மாணவரான அவருக்கு, பெரிய லட்சியம் ஒன்று உண்டு. அது தனது ஆதர்ஸ நாயகனான தேவராஜ் ஐபிஎஸ் (ஸ்ரீஹரி) மாதிரி பெரிய போலீஸ் ஆ...பீஸர் ஆவது.

    தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் சென்னையில் கல்லூரியில் சேர்ந்து படிக்க ரயிலேறுகிறார். அப்போதுதான் அனுஷ்காவைச் சந்திக்கிறார்.

    வழக்கம்போல அந்தக் கணத்திலேயே விஜய்யின் கனவு நாயகியாகி விடும் அனுஷ்கா, வழக்கம் போல டூயட்டெல்லாம் பாடி ஓய்கிறார்.

    அப்போதுதான், செல்லா என்ற மோசமான வில்லனைச் சந்திக்கிறார் விஜய். அழகான பெண்ணைப் பார்த்த கணத்தில் படுக்கைக்குத் தூக்கிச் செல்லும் சைக்கோ கேரக்டர் இந்த செல்லா. தன் வகுப்புத் தோழி ஒருத்திக்கு இந்த சோகம் நிகழ, நாயகன் விஜய் பொங்கியெழுந்து போட்டுப் புரட்டியெடுத்து கொன்று விடுகிறார் செல்லாவை.

    இந்த செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பெரிய டான். மகனைக் கொன்ற விஜய்யை போட்டுத் தள்ள போலீஸ் அதிகாரி சாயாஜி ஷிண்டேக்கு அஸைன்மெண்ட் தருகிறார். ஆனால் அதை உதாசீனப்படுத்தும் சாயாஜி, 'நீயென்ன பெரிய மந்திரியா, எனக்கு உத்தரவு போட' என திருப்பிக் கேட்க, அப்போதே மகன் கொலையை மறந்து, மந்திரியாகும் வெறியில் அரசியல் காய் நகர்த்துகிறார் வேதநாயகம்.

    ஒரு கட்டத்தில் விஜய்யின் ஆதர்ச நாயகனான தேவராஜ் ஐபிஎஸ், இந்த வேதநாயகத்தால் பாதிக்கப்பட்டு கண் பார்வை போய், வேலையையும் இழக்கிறார்.

    விஜய்யின் கோபம் இப்போது இன்னும் பல மடங்கு பெருக, வில்லனை வேட்டையாட புறப்படுகிறார்... (ஹை... டைட்டிலுக்கு காரணம் கண்டுபிடிச்சிட்டோம்)வேதநாயகத்தை அழிக்கிறார்...

    இதிலென்ன புதுசா இருக்கு என்கிறீர்களா... இந்தக் கேள்வி விஜய் அண்ட் கோவுக்கு போக வேண்டியது. எனவே படத்தில் கலைஞர்களின் பங்களிப்பைப் பார்க்கலாம்.

    கஷ்டப்பட்டு நடிக்க விஜய்க்கு இதில் ஒன்றுமில்லை. காமெடி என்ற பெயரில் ஏதோ செய்கிறார். சத்தியமாக சிரிப்பு வரவில்லை. அதுக்குதான் வடிவேலு, சந்தானம் போல நிறை இருக்கிறார்களே... இவருக்கு ஏன் இந்த வேலை என்று தெரியவில்லை.

    கவுண்டரை காப்பியடித்தார் சந்தானம். இப்போது சந்தானத்தை காப்பியடிக்கிறார் இந்தப் படத்தில் விஜய்யுடன் ஒட்டிக் கொண்டே வரும் ஸ்ரீநாத். சகிக்கலை!

    படத்தில் அட பரவாயில்லையே என்று சொல்ல வைப்பவர் ஸ்ரீஹரி என்ற தெலுங்கு பார்ட்டி. இவர்தான் தேவராஜ் எனும் நல்ல போலீசாக வருகிறார். ஆனால் கொடுமை என்னவெனில், இதே கேரக்டரை நாம் தரணியின் தில் படத்தில் பார்த்து விட்டோம் (இயக்குநர் தரணியின் உதவியாளர்தான் வேட்டைக்காரன் இயக்குநர் பாபு சிவன்!).

    அனுஷ்கா அம்சமாக இருக்கிறார். அவரிடமிருந்து நமது ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது நிச்சயம் நடிப்பை அல்ல என்று நன்றாகத் தெரிந்து கொண்டு, தனது அழகால் அசரடித்து விட்டுப் போகிறார்.

    முதல் பாதியில் காட்சிகள் பழசாக இருந்தாலும் உட்கார்ந்து பார்க்க முடிகிறது. இரண்டாம் பாதியில் ரொம்ப்பக் கஷ்டம்!

    கோபிநாத்தின் ஒளிப்பதிவில் பெரிய சாகஸங்கள் எதுவும் இல்லை.

    விஜய் ஆண்டனி... பாடல்களைக் கேட்ட பிறகு, அவரிடம் 'ஏன் இந்த கொல வெறி' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. அப்படி ஒரு அதிவேகம்.

    நல்ல ஸ்கிரிப்ட் என்றால், ஏற்கெனவே ஹிட்டான படங்களின் சீன்களை உருவி புதுசாக உருவாக்குவதுதான் என யாரோ தவறாக சொல்லிவைத்திருக்கிறார்கள் போல, இயக்குநர் பாபு சிவனிடம்.

    படத்தில் விஜய் ஆண்டனியின் பாடலில் நிக்காம ஓடு ஓடு ஓடு என்று ஒரு வரி அடிக்கடி வருகிறது. அனேகமாக படத்தைப் பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் இந்த வரியை தங்கள் நண்பர்களிடம் சொல்லக் கூடும்!

    thatstamil vimarsanam

    ReplyDelete
  18. nakkeeran vimarsanam

    சூப்பர் ஸ்டாரின் சூப்பர் படம் பாட்ஷா. அதை எப்படி சுமாராக கொடுப்பது என்று ரொம்ப யோசித்து ’வேட்டைக்காரன்’ ஆக்கியிருக்கிறார்கள்.


    அப்படியே பாட்ஷா மாதிரி இருக்கு என்று சொல்லிவிடக்கூடாது என்றும் யோசித்திருக்கிறார்கள். அதனால் தெலுங்கில் ரவிதேஜா-அனுஷ்கா நடித்த விக்ரமாகுடு படத்தில் கொஞ்சம் சுட்டிருக்கிறார்கள். அபோகலிப்டா படத்தில் இருந்துகொஞ்சம்(என்கவுண்டரில் இருந்த தப்பிக்க அருவியில் குதிக்கும் காட்சி) சுட்டிருக்கிறார்கள்.

    அப்புறம், வழக்கமாக மசாலாப்படங்களில் பார்த்து வரும் பல காட்சிகள்தான் திரைக்கதை. முப்பது வருசத்துக்கு முன்பு எடுத்த மாஸ் ஹீரோ அறிமுகமாகுற காட்சியை இன்னமும் எடுத்துக்கிட்டு இருக்குறாங்க. விஜய் அறிமுகமாகும் காட்சியும்அப்படித்தான்.

    முதல் நாள் முதல் காட்சி. ஒரு பாட்டுக்கு கூட ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்கவில்லை. கரிகாலன் காலப்போல....என்று பாட்டுவருவதற்குள்ளாகவே தம்மடிக்க கிளம்பிட்டாங்னா.

    நான் அடிச்சா தாங்கமாட்ட..என்று விஜய் பாடுவது பொறுத்தமாக இல்லை. அவர் உடல் வாகுவிற்கு இந்த பாடலைப்பாடுவது தமாஸ் ரகம்ங்னா. இதுல வேறு அவரது மகன் அந்த பாட்டைப்பாடி கொஞ்சம் ஆடுகிறார். அவருக்கே பொறுத்தமா இல்லேன்னா இவருக்கு?

    பின்னனி இசையின் போது விஜய் ஆண்டனிக்கு என்ன நடந்திருக்கும்? மனுசர் ஏன் இப்படி சொதப்பியிக்கிறார். சண்டைக்காட்சியில் சோக கீதம் வாசிக்கிறார்.

    ’உலகம் எப்பவும் பயப்படுவதற்கு தயாராக இருக்கு..பயமுறுத்தவன் இருந்துகிட்டுதான் இருப்பான்’, ’இது அரசு முத்திரை..இதுல மை தடவி பேப்பர்ல குத்துங்க..மக்கள் வயித்துல அடிக்காதீங்க’, என்று நச் வசனங்கள் இருக்கு.

    ஆனால் வெகு நீ..................ளமான வசனங்கள் தான் அதிகமாக இருக்கிறது.

    அந்த வசனத்திற்கெல்லாம் வாயை ஆ!என்று பிளக்கிறார்கள். வசனத்திற்கு மட்டுமல்ல நிறைய காட்சிகளுக்கும் கொட்டாவி பறக்கிறது.

    விஜய் ரொம்ப இளமையாக தெரிகிறார். அதனால்தான் அனுஷ்கா விஜய்க்கு அக்கா மாதிரி தெரிகிறார். ஆனால் இவரின் கிளாமர்தான் வறண்ட பாலைவனத்தில் ஆறுதலான நீறூற்று.

    கொச்சின் ஹனிபா டயலாக் டெலிவரியில் கொஞ்சம் கலகலக்க வைக்கிறார். மனோபாலா சாஜிஷிண்டேவிடம் பேட்டி எடுத்து கலகலக்கவைக்கிறார். பள்ளித்தோழன் சத்யன் கொஞ்சம் கடிக்கிறார். கல்லூரித்தோழன் ஸ்ரீநாத் கடித்து குதறுகிறார்.......

    ReplyDelete
  19. ....பல அட்டம்ப்ட்டுக்கு பிறகு +2வில் பாசாகி அப்புறம் காலேஜூக்கு விஜய் போகும் போதுதான் தியேட்டரே கலகலக்கிறது. ஆனால் கதைப்படி இது சீரியஸான காட்சி.

    பாட்ஷாவில் ரஜினி ஆட்டோ ஓட்டுவது போல் இதிலும் ஆட்டோ ஓட்டுகிறார் விஜய். ரஜினி ஆட்டோ ஓட்டி தங்கைகள், தம்பியை படிக்க வைப்பார்.

    இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதற்காகத்தான் விஜய் ஆட்டோ ஓட்டி அந்த வருமானத்தில் தானே படிக்கிறார்.

    பாட்ஷா படத்தில் ஏ பாட்ஷா பாரு பாட்ஷா பாரு பாடலுக்கு படிக்கட்டுகளில் இருந்து ஸ்டைலாக இறங்குவார் ரஜினி. காரில் ஒருஓரமாக ஸ்டைலாக அமர்ந்து சாலையை லுக் விடுவார்.

    இதிலிருந்து வித்தியாசம் காட்டனுமே. அதனால்தான் புலி உறுமுது புலி உறுமுது பாடலுக்கு படிக்கட்டுகளில் ஸ்டைலாகஏறுகிறார் விஜய். காரில் நடுவில் அமர்ந்து லுக் விடுகிறார்.

    போலீஸ் அதிகார் ஷாயாஜிஷிண்டே, வில்லன் ஜிந்தா கலக்கியிருக்கிறார்கள். தன் சின்ன வீட்டை ஜிந்தாவின் மகன்அபகரித்துவிட அதுவரை ஜிந்தாவுக்கு ஜால்ரா அடித்தவர் விஜய் பக்கம் வந்துவிடுகிறார்.

    ஏகப்பட்ட ரவுடிகள், ஏகப்பட்ட அடிதடிகள் இருந்தாலும் அரிவாள், ரத்தம் இல்லாதது ஆறுதல் (இருக்கு ஆனா இல்ல). சத்யனை கொன்று அட்டைப்பெட்டிக்குள் வைத்து அனுப்பினாலும் அவ்வளவாக நெஞ்சை பிசையவில்லை.

    வேட்டைக்காரன் நல்ல கதைதான். ஆனால் வேட்டையாடிய விதம் சரியில்லை. நேர்மையான போலீஸ் அதிகாரி தேவராஜ் மாதிரி தானும் ஆகவேண்டும் என்று லட்சியம் வளர்க்கிறார் விஜய். தேவராஜ் எப்படியெல்லாம் உயர் அதிகார் ஆனாரோ அதே மாதிரி தானும் வரவேண்டும் என்று துடிக்கிறார் விஜய். அவர் மாதிரி ஆகும் வரை பொறுத்திருக்காமல் நல்ல விசயங்களை அங்கங்கே தட்டிக்கேட்கிறார்.

    ரவுடிகளை என்கவுண்டரில் போட்டுத்தள்ளும் தேவராஜ் குடும்பத்தை அவரின் கண்ணெதிரிலேயே எரித்துவிடுகிறார்கள்.

    இத்தீவிபத்தில் தேவராஜின் கண்பார்வையும் போய்விடுகிறது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கிறார்.

    அதனால் சென்னையில் வழக்கம் போல் ரவுடியிசம் தலைதூக்கிறது. அதை தட்டி தரைமட்டமாக்கும் விஜய்க்கு ’எனக்கொருமகன் இருந்தால் என் பதவி அவனுக்கு கிடைக்கும்.

    உன்னை என் மகனாக நினைக்கிறேன். நீ இனிமேல் பதவியில் இருந்துகொண்டு தைரியமாக தட்டிக்கேள்’ என்று விஜய்க்கு பதவி கிடைக்க செய்கிறார் தேவராஜ்.க்ளைமாக்ஸ்.

    பால் அபிஷேகம், சரவெடி, குதிரையில் ஊர்வலம், கரகாட்டம், கச்சேரி என்று தியேட்டருக்கு முன்பு அமர்க்களப்படுத்தியரசிகர்கள் தியேட்டருக்குள் ஒரு சில (இடங்களைத் தவிர) கடைசி வரை கப்சிப் என்று இருந்தார்கள். கொட்டாவியின்அடுத்தகட்டத்துக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது.

    அரசியல் பிரவேச நேரத்தில் அதிரடியாய் வந்து ரசிகர்களை உசுப்பேத்த வேண்டிய விஜய், ஏன்

    இப்படி சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்றுக்கினார்.

    -வடபழனிவாலு

    ReplyDelete
  20. jokes..

    2. Bharathiyar Feelings

    In heaven:
    chellama - Aiyaiyo..!! ennanga panringa?
    Bharathiyar - patha theriyala thooku mattikren
    chellama - Naamthan already sethutome!!
    Bharathiyar - kanda naai ellam enna mathri vesham potukutu
    villu powerfullu nu punch dialogue pesumpothu ennaku marupadiyum
    savanum polla iruku

    Records:

    Russians: We are living in 48 deg cool temp we are great

    Africans: We are living in 48 deg heat v are great

    Tamilan: We are living even after seeing 48 vijay films. Goyala yarkitta......
    3.Blue cross:

    Blue cross has put enquiry on vijay because lot of kuruvi has
    attempted suicide for mis using their name.

    4. Bus comedy:

    Doctor - Ennappa eppadi adi pattuch
    patient - Bus-la porappa 'vijay' padam pottanga,
    Theatre-nu ninachu velia vanthutten
    Doctor-??\

    5. CSK intro

    vijay wants intro with CSK players.
    vijay: Hai i am one of the top actor in tamil cinema.
    Hyden: Ah Gud joke...Appa macha ntini neeyum hero thanda
    Dhoni: Machi... ntiniku santhosatha paaru... balaji do u know him??
    Balaji: Theriyala machan theatrela tea kudukara payan mari irukan..
    Vijay: sathiyama naan actor than da.
    Morkel : Thambi joke adichacu podum.... poi tea eduthukutu vaa.
    Fleming : Enaku sakara jasthia.
    vijay(crying) : Dai naan actor than da nambunga da... Appa paru pa
    naba matrenganunga.
    SA: Vidu magesh babu padathaium un padathium pottu kattu kandipa
    nambuvanunga

    6. Chess comedy:

    Ajit - chess vilaiyaada povom varingala?
    vijay - neega pou ground la wait pannunga naan shoe pottutu varean
    vijay rocks

    7. Pava manipu:

    Reporter: Oru padam mudicha piragu neenga enna pannuveenga?
    vijay: Simple chruchla poi pava manipu kaepean.

    ReplyDelete
  21. jokes conti......

    8. Best comedy:

    Vadivel : Nan than periya comedian
    Vivek: Ella nan than periya comedian
    Santhanam: Dai methuva peasunga pakkathula "vijay" irukkaru

    9. National anthem:

    Viajy to prabhudeva: Indha patu superah Iruke idha Namba Padathula
    Remake panalama
    Prabu Deva: Dei nasama ponavane Adhu Desiya Geetham da

    10. Easy way to die:

    Easy way to die:
    1. Smoke daily - u will die 10 years early
    2. Drink Daily - u will die 30 years early
    3. Love a girl truly - u will die daily
    4. But see vijay poster u will die suddenly
    Yena koduma sir ithu

    11 Diff between kamal and vijay

    Difference between kamal & vijay:
    Kamal acts in 10 diff role in one film(original).
    but vijay acts in same role in 10 different dupping films.

    12. Director comedy:

    Director comedy :

    Director - Vadivelu podalama, Illa karunas podalama

    Vijay - Comedy kuda nane pannuran sir

    Director - Comedy neenga than panringa nan hero yara podalamnu think panran
    13. Doctor vijay:

    Dr. vijay sslc goes 2 a shop & shouts where is the free gift with this
    mineral water.
    Seller: There is no free gift with this
    Vijay: But on the lable its written bacteria free. I am doctor u can't cheat me
    Enjoy non stop doctor vijay comedies

    Driver - Sorry sir petrol mulusa dry aagidichi , inimel oru adi kuda munnadi nagarathu
    Dogtor vijay - Hmm.. sari reverse edu veetukavathu pokalam

    14. Exam hall:

    Ajith & vijay writing semester exam:
    vijay : Thala konjam answer kattunga
    Ajit: Hindi paper da idhu unnaku tamil exam da
    vijay: Parravala adha kattunga na tamila remake pannikuraen
    Thala: Idhuku picha edukalaam
    vijay: yevalavo panrom idhu panna maatomaa......

    15. Exclusive vijay comedies

    Exclusive vijay comedies:
    1. How a police can wear boot cut and have style hair?(pokiri)
    2. How to go to final match after losing semi finals?(Gilli)
    3. How to become boxer in 1 day & 1 song? (badri)
    4.How to do uncle job perfectly?(shajahan)
    5.How to come alive even after dying?(puthya geethai)
    6. And finally having a long jump record for a half a KM in kuruvi....
    Still to be continued :-) enna koduma sir idhu....

    16. TV special:

    Customer. Intha TV velai enna?

    Salesman: 1,00,000 sir

    Cus: Appadi enna special?

    Salesman: Tv la "vijay" program vanda aduve thana vera channel maridum

    17. Suntv:

    vijay : Namma suntv mela case podanum

    Manager : Ethukku sir

    vijay : Ennoda aduthapadam hit aagumnu sonnatha vilayatu seithil la pottu irukanga



    Doctor 1 : enna aachu?
    case failure'ah?

    Doctor 2: Yes! suicide atmpt.
    poison ah irunda kooda kaapathirukalam but payan vivarama "vijay" padatha fulla pathu irrukan :)




    1. Life history of vijay

    Totally 47 films
    20 films REMAKE
    5 films - Telgu movies utter flop
    8 films - story copied
    1 film - pokiri Xerox copy
    5 films - Malayalam remake
    39 films remake out of 47
    Only 8 films had original script in which 5 were flop
    He is the one & only copy star of Indian cinema
    Inda naiku Doctor pattam vera
    Illaya THALAVALI vijay, don't delete immediately

    ReplyDelete
  22. விஜய் ஒரு வேட்டைக்காரர். மான் வேட்டைக்காக காட்டுக்குப் போகிறார். அங்கே புலியின் குகையில் மாட்டிக் கொண்டிருக்கும் அனுஷ்காவைப் பார்க்கிறார். காப்பாற்ற முயலுகையில் புலி அவரைத் துரத்த ஆரம்பிக்கிறது. விஜய் தப்பிப்பதற்காக டிவிஎஸ் சாம்பில் ஏறிப் பறக்கிறார். (இங்கே தான் புலி உறுமுது பாட்டு..) புலியிடம் இருந்து தப்பிக்க வேண்டும். லெப்ட் இன்டிகேடரைப் போட்டு வண்டியை வலது பக்கம் திருப்புகிறார். புலி குழம்பிப் போய் வேறு வழியில் போய் விடுகிறது. வண்டியில் போகும்போது ஒரு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விஜய் தலையில் விழுகிறது. (இங்கே என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாட்டு..) திடீர் என்று புலி ஷார்ட் ரூட்டில் வந்து விஜயை மடக்கி விடுகிறது. வேறு வழியின்றி விஜய் பாட ஆரம்பிக்கிறார்.(நான் அடிச்சா தாங்க மாட்ட..) கேட்கும் புலி செத்துவிழுகிறது. அனுஷ்காவைக் காப்பற்றுகிறார் விஜய். கடைசியாக இரண்டு பேரும் சேர்ந்து "கரிகாலன் காலைப் போல' என்று பாட படம் முடிகிறது. எப்பூடி?

    மக்கள் அனைவரும் உடனடியாக "2012 ருத்ரம்" என்னும் படத்தை பார்க்கும்படி கேட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஏன் என்றால்..
    ....
    ....
    ....
    ....
    வேட்டைக்காரன் படம் ரிலீஸ் ஆனால் என்ன நடக்கும் என்பதை வெள்ளைக்காரங்க படமாஎடுத்திருக்காங்க..

    போஸ்டர் பார்த்தா தாங்க மாட்ட..
    டிரைலர் பார்த்தா தூங்க மாட்ட..
    படம் பார்த்தா முழுசா வீடு போய் சேர மாட்ட..

    ***************

    ஹட்ச் - இப்போ.. வோடபோன்

    மெட்ராஸ் - இப்போ.. சென்னை

    பாம்பே - இப்போ.. மும்பை

    கல்கத்தா - இப்போ கொல்கத்தா

    சர்தார் - இப்போ.. விஜய்..

    ReplyDelete
  23. விகடன் விமர்சனம்
    பாட்ஷா + பகவதி + திருப்பாச்சி +சத்யம் = வேட்டைக்காரன்.

    நான்காவது அட்டெம்ப்ட்டில் பிளஸ் டூ பாஸ் செய்யும் தூத்துக்குடி மாணவன் ரவியாக விஜய் (அடேங்கப்பா!). நேர்மையான என்கவுன்டர் போலீஸ் ஸ்ரீஹரியைப்போல போலீஸ் ஆக வேண்டும் என்பது அவரது கனவு. சென்னை கல்லூரிக்குப் படிக்க வந்த இடத்தில் ரவுடிகளின் அட்டகாசம் (விஜய் படக் கதை வந்துவிட்டதா?). ஊரையே உலையில் அடித்துப் போடு கிறார்கள் ஒரு அப்பா, மகன் கம் வில்லன் கோஷ்டி. விஜய் அவர்களோடு மோதுகிற சூழல் வருகிறது. ''கிரி மினலுக்கு போலீஸ் வரணும். மிருகத் துக்கு வேட்டைக்காரன்தான் வரணும்'' என்று தொடை தட்டுகிறார் விஜய் (டைட்டில் வந்துவிட்டதா?). சவால், சவடால், டாடா சுமோ, கத்தி, ரத்தம், இத்யாதி... இத்யாதிதான் மீதிக் கதை.

    பேரரசு டைப் கதை. இம்மி மாறாமல் விஜய் புகழ் பாடி ஆக்ஷன் உறுமி வாசித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் பாபுசிவன். அறிந்த காட்சிகள், தெரிந்த திருப்பங்கள் எனப் படத்தில் எல்லாமே பழசு (டைட்டில் உட்பட!) படத்தில் செம ஃப்ரெஷ் விஜய். காதலில் குழைகிறார். நட்பில் நெகிழ்கிறார். ஆக்ஷ னில் உறுமுகிறார். ஆனால், அலுத்துச் சலித்த அதே ரவுடி வேட்டையை எத்தனை முறை பார்ப்பது? போதாக்குறைக்கு விஜய் நடித்த பல படங்களின் ஸீன்களே இதில் ரிப்பீட். ஆக்ஷன் போர்ஷன் முழுக்க விஜய் நடக்கிறார், பறக்கிறார், சட்டையை உதறுகிறார், பஞ்ச் அடிக்கிறார், சவால்விடுகிறார்... றார்... றார்!

    ReplyDelete
  24. சின்ன போர்ஷனில் பெரிய பொண்ணு... அனுஷ்கா! முதலில் காதலிக்கிறார். பிறகு, ஆரோக்கி யமான இடைவெளிவிட்டு மீண்டும் காதலிக்கிறார். அப்புறம் ஹீரோயினை வில்லன்கள் கடத்த வேண் டுமே? எல்லாம் இருக்கிறது. அழகான அனுஷ்கா இதில் ஆன்ட்டி மாதிரி தெரிகிறாரே... என்ன பிரச்னை?

    சாயாஜி ஷிண்டேவுக்கு 32-வது தடவையாக வில்ல போலீஸ் வேடம். கடைசியில் வழக்கம்போலத் திருந்துகிறார். சாயாஜியை வில்லன் பழி வாங்க வேண்டுமே? அவரது சின்னவீட்டை அப்படியே அலேக் பண்ணுகிறார். பிரமாதம்... 'கீப்' இட் அப்!

    படத்தின் மூன்று வில்லன்களில் சலீம் கோஸ் மட்டுமே அடக்கி வாசிக்கிறார். மற்றவர்கள் ஸ்பீக்கருக்குப் பக்கத்தில் நின்று பேசுவது மாதிரி கத்தித் தீர்க்கிறார்கள். படத்தில் வில்லன்களை இவ்வளவு சோப்ளாங்கி ஆக்கியிருக்க வேண்டாம். எக்கச்சக்க பில்டப்கள் கொடுத்து அறிமுகம் ஆகும் படா வில்லன்கள் 'அவனைத் தடுக்க முடியாது' என்று விஜய் முன் வாலன்ட்டரி கைப்புள்ள ஆகிறார்கள். கொசு மாதிரி பொசுக் என்று உயிரை விடுகிறார்கள். இருப்பதில் கொஞ்சமாவது ஆறுதல் தருவது சத்யன்தான். காதலித்த பெண்ணைக் கல்யாணம் பண்ணும் இடத்தில் ரசிக்கவைக்கிறார்.

    வேட்டை படத்தில் லாஜிக்கைக் கோட்டைவிட்டு விட்டார்கள். தமிழ்நாட்டுக்கே பிரபலமான என் கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டின் குடும்பமே கொல்லப் படுவதும், அவருக்குப் பார்வை பறிபோவதும் யாருக்கும் தெரியாதாம்! லூசுத்தனமாக நண்பனின் கடையையே தீவைத்துக் கொளுத்துகிறார் சலீம் கோஸ். எம்.எல்.ஏ-கூட இல்லாத சலீம் கோஸ் நினைத்த அன்றே மந்திரியாகப் (?!) பொறுப்பேற்கிறார். விஜய் ஊரையே கலக்கிக்கொண்டு இருக்க அவரைப் பற்றித் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறார் அனுஷ்கா.

    கேமராமேன் கோபிநாத் கேமராவின் வேலை எல்லாம் விஜய்யைப் பல கோணங்களில் சுற்றிச் சுழல்வதுதான். விஜய் ஆண்டனியின் இசையில் அனைத்துப் பாடல்களும் தாளம் போடவைக் கின்றன. குறிப்பாக 'கரிகாலன் காலைப் போல' பாடல் மெலடியும் துள்ளல் இசையும் கலந்த அழகிய கலவை. வழக்கமாக விஜய் நடனங்களில் தெரியும் எனர்ஜியான துள்ளல் வேட்டைக்காரனில் இல்லையே... ஏங்ணா?

    பார்த்துச் சலித்த பழைய புலி. அதனாலேயே உறுமவதெல்லாம் இருமுவது மாதிரி கேட்கிறது!

    -விகடன் விமர்சனக் குழு

    ReplyDelete
  25. வேட்டைக்காரன் வெற்றியா?-சில உண்மைகள்..

    வேட்டைக்காரன் வெளியான அன்றே, 'இது சரித்திர வெற்றி, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத வெற்றி' என்றெல்லாம் அடித்துவிட்டனர் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும்.

    இந்த 'மா...பெரும்' வெற்றிப் படத்தை மேலும் பெரிய வெற்றிப் படமாக்க விஜய் இந்த வாரம் முதல் நகரம் நகரமாக சுற்றுப் பயணம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

    இந் நிலையில் படத்தின் உண்மையான வசூல் நிலவரம் என்ன... இன்றைய நிலவரம் என்ன என்பது குறி்த்து ஒரு அலசல்.

    இந்தப் படத்தைப் பொறுத்த வரை அதன் ஒரிஜினல் தயாரிப்பாளரான ஏவிஎம் பாலசுப்ரமணியம், கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சன் டிவியின் பப்ளிசிட்டி மேல் நம்பிக்கை வைத்து வாங்கிய விநியோகஸ்தர்கள்தான் மாட்டிக் கொண்டவர்கள்.

    முதல் மூன்று தினங்கள் படத்துக்கு ஓப்பனிங் சிறப்பாக வந்திருந்தாலும், திங்கள்கிழமையே டிராப் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார் தமிழ்நாடு என்டர்டெயின்மெண்ட் ஆசிரியரும், பாக்ஸ் ஆபீஸ் விவரங்களை சேகரித்து வருபவருமான ராமானுஜம்.

    அவர் கூறுகையில், 'இந்தப் படம் நிச்சயம் வெற்றிப் படம் என்று சொல்ல முடியாது. அப்படி சொல்லி தவறான ட்ரெண்டுக்கு வழிகாட்டவும் கூடாது. விஜய் நடித்த வேட்டைக்காரன் வெற்றி என்றால், ஒரிஜினல் வெற்றிப் படங்களை என்னவென்று சொல்வது...

    மதுரை, சேலம் பகுதிகளில் 50 சதவீத்துக்கு மேல் 'அடி' விழுந்திருக்கிறது இந்தப் படத்துக்கு. திருச்சி, திருநெல்வேலியில் மட்டும் தப்பித்திருக்கிறது' என்றார்.

    ReplyDelete
  26. சென்னையைப் பொறுத்த வரை, விஜய் தன் வெற்றியின் அளவுகோலாகக் கருதும் கமலா தியேட்டரிலும் கூட 30 சதவீதத்துக்கும் மேல் ரசிகர்கள் வருகை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சத்யம் போன்ற திரையரங்குகளில் இப்போது கெளன்டரிலேயே டிக்கெட்டுகள் கிடைப்பதாக சத்யம் இணையத் தளம் தெரிவிக்கிறது.
    வேட்டைக்காரனின் ஒரு நகர வினியோக உரிமையை ரூ 3.5 கோடி கொடுத்துப் பெற்றுள்ள பிரபல வினியோகஸ்தருக்கு மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
    பொங்கல் சீஸனில் இந்தப் படம் தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் என்பதால், இந்தத் தொகையை அவரால் மீண்டும் பெற முடியாத நிலை.
    மதுரையில் 50 சதவீதத்துக்கும் அடி என்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால், நஷ்டத்தை கூட
    இவர்களால் வாய்விட்டு வெளியே சொல்ல முடியாத நிலை. மறைமுகமாக அல்லது தெரிந்த நபர்களிடம் சொல்லி தங்கள் குமுறலைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
    "விஜய்க்கு இந்தப் படம் தோல்வியாக அமைய வேண்டும் என்று நாம் கூறவரவில்லை. நிச்சயம் அவரைப் போன்ற நடிகர்களுக்கு இந்த நிலை வரக்கூடாது. காரணம் ரஜினிக்கு அடுத்து அல்லது இணையான மாஸ் ஹீரோ விஜய்தான்.
    ஆனால் இன்று உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராகத் திகழும் விஜய், தனது சராசரிக்கும் குறைவான ஒரு படத்தை, வெற்றிப் படம் என்று பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான காரணங்களைச் சிந்திக்க வேண்டும்" என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத, வேட்டைக்காரன் படத்தின் முக்கிய விநியோகஸ்தர் ஒருவர்.
    இனிமேல் கதை அம்சம் இல்லாவிட்டால் யாருடைய படமாக இருந்தாலும் தப்பாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். இனியாவது விஜய் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க வேண்டும் என்கிறார் அவர்.

    ReplyDelete
  27. படத்தின் இயக்குனர் பாபுசிவன், விஜய்யின் பரம ரசிகராக இருந்திருப்பார் போலிருக்கிறது. விஜய் படத்தின் கதைகளையே சுட்டு விஜயிடமே கதை சொல்லியிருக்கிறார். 'பழைய சட்டை, பளபள பட்டன்' என்று காட்சிகள் அங்கங்கே கண்ணடிப்பதால் ரசனையும் அலுப்பும் ரவுண்டு கட்டி அடிக்கிறது.
    +2 வில் பலமுறை பெயிலாகி, கடைசியில் பாஸாகிற விஜய்க்கு, அசிஸ்டென்ட் கமிஷனர் ஆக வேண்டும் என்பது லட்சியம். அவர் தாய் தந்தையாக வருவோர் படத்தின் முதல் காட்சியில் வந்தது தான், பின்னர் அவர்களைப் பற்றி பேச்சே இல்லை. இடையில் ஒரு காட்சியில் கூட வரவில்லை என்பது மிகுந்த ஆச்சரியம். பின்பு சென்னைக்கு வருகிறார் விஜய், புதிதாக சென்னை வரும் விஜய்க்கு அனைத்து சந்து பொந்துகளும் தெரிகிறது, உடனே ஆட்டோ ஓட்ட ஆரம்ம்பிக்கிறார், அது தான் எப்படி என்று தெரியவில்லை, கொஞ்சம் இயக்குனரிடம் கேட்கவேண்டும், ஒரு வேளை அவர் ஆட்டோவில் சட் நவ்( டாம் டாம் ) யூஸ்பண்ணி இருப்பாரோ என்று தோன்றுகிறது.
    கமெரா ஒரு சதத்திற்கு உதவாவு, காட்சிகளைப் படம் பிடித்த விதம் படுகேவலம். அத்துடன் விஜய் அணியும் உடைகள் படுமோசம், விஜய்க்கு தொப்பை(வண்டி) இருப்பது இவர் போடும் இந்த உடுப்புகளால் தெளிவாக காட்டப்படுகிறது. அதாவது இவரை ஒரு மாணவன் எனச் சித்தரிக்க முயலவில்லை இயக்குனர், ஒரு அப்பாவைப் போலச் சித்தரித்துள்ளார் என்பதே உண்மை.
    சென்னைக்கு வருகிறார் விஜய். வந்த இடத்தில் வம்புசண்டை. மெயின் வில்லன் சலீம் கோஷின் மகனை துவையல் ஆக்கி ஆஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கிறார். "யார்ரா அவன்? அவன் எனக்கு வேணும்?" என்று தேட ஆரம்பிக்கிறார்கள் சலீம் கோஷ்டியினர். தாறுமாறாக ஒரு வார்... (நார் நாராக கிழிவது நம்மை தவிர வேறு யார்?) இடது கையில் இந்திய ராணுவத்தையே மறைத்து வைத்திருப்பாரோ என்று ஐயுற வைக்கிற அளவுக்கு 'தடி தாண்டவராயன்'களை துவைத்து தொங்க போடுகிறார் விஜய். இதற்கிடையில் இவர் ஆதர்ஷ அதிகாரியாக நினைத்திருக்கும் ஸ்ரீஹரி, இதே வில்லன் கோஷ்டிகளால் என்னவானார் என்பதையும் அறிகிற விஜய், அதற்கும் சேர்த்து தனது நரம்பை புடைக்க, இடி, மழை, மின்னல், இன்னல் என்று கலவையாக அடிக்கிறது தியேட்டரில்!
    நடுநடுவே வரும் விஜய்-அனுஷ்கா காதல் மட்டும் பூக்களின் சந்தை!
    தமிழ்நாடே வியக்கும் ஒரு உதவி கமிஷனர், நடுரோட்டில் குருடாக்கப்படுவதும், அவர் குடும்பம் உயிரோடு தீக்கிரையாவதும், அதை ஒரு ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை என்பதும், திரைக்கதைக்கு மட்டுமே சவுகர்யமான மிஸ்டேக்! அந்த உதவி கமிஷனர் ஸ்ரீஹரி, திரையில் தோன்றும் போதெல்லாம் அதிர வைக்கிறார். பொறுத்தமான தேர்வு.
    அதிரவே அதிராமல் வில்லத்தனம் செய்கிற சலீம் கோஷம் இன்னொரு அசத்தல். அதற்காக படத்தில் அவர் செய்கிற காரியங்களும், விஜய்யை அழைத்துக்கொண்டு போய் தன்னுடைய பராக்கிரமங்களை விவரிப்பதும் பேத்தல்! பயம்... பயம்... என்று காதருகில் கிசுகிசுக்கிறாரே, இன்னொரு முறை சொல்லித் தொலைப்பாரோ என்ற பயமே வருகிறது! இவர் எம்.எல்.ஏ ஆகாமலே மந்திரியாகி விடுகிறார் என்பது ஸ்கிரிப்ட்டில் விழுந்த ஸ்கிராட்ச்!
    மொத்தத்தில் வேட்டைக்காரனுக்கு வேட்டு விழுந்துள்ளது அவ்வளவுதான். இதில் விஜய் என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கே தெரியாது என்றால் பாருங்களேன் !
    இதைவிட சுவாரசியமான விடயம் என்னவென்றால், பல கொலைகள் மிகுந்த படமான பேராண்மைக்கு 18 வயதுடையவர்கள் மட்டும் பார்க்கவேண்டும் என்று கொடுப்பதற்குப் பதிலாக 12 வயதுடையவர்கள் பார்க்கலாம் என ஐரோப்பாவில் சான்றிதழ் கொடுத்துவிட்டு, வேட்டைக்காரனுக்கு 15 வயதுடையவர்களே பார்க்கலாம் எனச் சான்றிதழ் வழங்கியுள்ளனர் ஐரோப்பிய சென்சர் போர்ட், இதனால் ஐரோப்பாவில் உள்ள பல தமிழர்கள் தமது பிள்ளை குட்டியுடன் சென்று படம் பார்க்க முடியாமல் திரும்பியுள்ளனர்.
    சன் பிக்சர்ஸ் மற்றும் B4U அமைப்பும் மொத்தத்தில் இப்படத்தை எடுத்து ஐரோப்பாவில் நட்டத்தை சம்பாதித்திருப்பதாக அறியப்படுகிறது. படம் ஐரோப்பாவில் ஊத்திகிச்சு என்பதே உண்மை... இதில் சில அனுபவம் உங்களுக்கும் இருக்குமில்ல, வேட்டை ஆராம்பிச்சுடுத்துடோ......... ஊ ஊ ஊ ஊ ஊ ஊஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ...
    -athirvu.com

    ReplyDelete
  28. I jst can tell tht u all are mad ppl cuz it doesnt matter who sang tht song it jst matter if the movie is gud or not... u ppl dnt hav anything in ur head... fuck it sucks mayn....

    ReplyDelete