Gothapaya Rajapaksa,raam,maaveerar naal,urai
யார் போலி? யார் உண்மை?
ராமின் மா(கா)வீரர் நாள் அறிக்கை சிலருக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அதில் அவர்களே அறியாமல் தாம் யாருக்கு பணிபுரிகின்றோம் என்பதை காட்டிக் கொடுத்துவிட்டார்கள். சிறீலங்காவின் கூலி ஒருவர் அனுப்பியிருந்த ராமின் குரல் பதிந்த ஒலிக்கு “மகாவீர” என்ற சிங்களச் சொல்லை பெயராக கொடுத்துள்ளார்கள். அதைக்கூட கவனிக்காமல் அவர்கள் அனுப்பியிருப்பதானது அவர்களின் எச்சரிக்கையின்மையை காட்டி நிற்கின்றது. வரிக்கு வரி எழுத்துப்பிழைகளுடன், தமிழனின் உரிமையை ராம் விற்றுள்ளார். என்ன செய்வது? எழுதித் தந்ததை வாசித்தது மட்டும் தான் அவருக்குத் தெரியும்.
இவர் அங்கிருந்து தபேந்திரனுடன் இணைந்து சில நாசகார வேலைகளை புலம்பெயர் மண்ணில் செய்ய திட்டமிட்டிருப்பதாக எமக்கு செய்திகள் கிடைத்திருக்கின்றன. அந்த அடிப்படையில் முதலாவது கட்டமாக தம்மிடம் வயப்பட்டுள்ள இளைஞர்களுக்கு தாம் நேரடித் தொடர்பில் இருப்பதாக “பாவலா” காட்டுவதாகவும், அதன்பின்னர் உண்மையாக பணிபுரியும் பணியாளர்களின் விபரங்களை திரட்டுவதாகவும் எமது புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் உள்ள சிறீலங்காத் தூதரகங்களுக்கு இப்படியான திரட்டப்பட்ட தகவல்களை குறிப்பிட்ட நபர்கள் சிலர் வழங்கிவருகின்றனர் என எமக்கு ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இப்படி வழங்கப்படும் தகவல்களால் கிடைக்கப்பெறும் நிதிகள் மற்றும் தமிழர்களிடம் ஏமாற்றிப் பெறப்பட்ட நகைகள், பணங்களைக் கொண்டு வர்த்தக நிறுவனங்களை பிரான்சிலும் பிரித்தானியாவிலும் ஆரம்பித்திருக்கின்றார்கள். ஏமாறும் மக்களும் தாலிக்கொடி முதல் சங்கிலி வரை கொடுத்து “உதவுவதாகவும்” எமது ஆய்வின் புலனாய்வு தெரிவிக்கின்றது. இவர்கள் சில வீடுகளுக்குச் சென்று அடி வேண்டியதும் உண்டு.
கோத்தபாயவின் செல்லப்பிள்ளை ராமின் அடிவருடிகள் பாரெல்லாம் திரிகின்றன. கவனமாக பாருங்கள். காட்டில் நிற்கும் போராளிகளுக்கு “உதவ வேண்டும்” என தெரிவிக்கும் இவர்கள், தற்போது இயக்கத்தின் பெயரில் பற்றுச்சீட்டு அடித்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் பற்றுச்சீட்டை பரிசில் உள்ள தமிழர்களின் பிரபலமான அச்சகத்தில் அச்சடித்திருக்கின்றார்கள்.
இந்த தமிழர்களின் பிரபலமான அச்சகம் வெளித் தோற்றத்தில் தனியாரின் பெயரில் இருந்தாலும், அதற்கு முதலிட்டது வன்னியாம். வன்னியின் நேரடித் தொடர்பில் அச்சகம் இயங்கியதாகவும், முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் அச்சகம் தன்னுடையது என அச்சக நிர்வாகம் தெரிவித்துள்ளதாக அச்சகத்துடன் இணைந்து பணிபுரியும் “வன்னிக்குரியவர்” தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும் தமிழர்களின் பிரபல அச்சகத்தை எப்படி ஆரம்பித்தனர் என்பதை நிர்வாகம் மறந்திருக்க வாய்ப்பில்லை.
பிரான்சின் வெளிமாவட்டமான “செவறன் றிவிறி” என்ற இடத்தில் அண்மையில் தமிழ் வர்த்தகரை மிரட்டி அவ்வர்த்தகருக்கு சொந்தமான கடையை தங்கள் பெயருக்கு மாற்றியதும் இல்லாமல், தமிழ் மக்களுக்கு போக்கு காட்டுவதற்காக அக்கடைக்கு “பொத்தி கமுறூண்” என ஆபிரிக்கப் பெயரில் இயங்குகின்றது. இன்னுமொரு கடை பாரிசுக்கு அண்மையில் உள்ள “மொன்றியல்” என்ற இடத்திலும் திறந்திருக்கின்றார்கள். மேலும் தமிழர்கள் அதிகமாகக்கூடும் லாச்சப்பல் பகுதியில் உணவகம் ஒன்றைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
மக்களே இவையனைத்தும் தப்பிய போராளிகளுக்கும் காயப்பட்டு பராமரிக்கும் போராளிகளுக்கும் என கூறிக்கொண்டு உங்களிடம் பணம், நகையாக பெற்ற நிதிகளிடம் இருந்து ஆரம்பிக்கப்பட்டவை என்பதை மறந்து விடாதீர்கள். மக்களை ஏமாற்றும் சம்பந்தப்பட்வர்களின் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பவற்றை விரைவில் எதிர்பாருங்கள். இன்னும் வரும்…..
-மீண்டும் மீட்கும்வரை புலிகள்
பேஸ்புக்கில் இருந்து தோழர் ஒருவர் அனுப்பி வைத்த தகவல்.
No comments:
Post a Comment