poet thamarai

கவிஞர் தாமரை தமிழ் உணர்வாளர்

தாமரை: கண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்!

ஏ இந்தியாவே...!எத்தனை கொடுமைகள்
செய்துவிட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...

எத்தனை
வழிகளில்கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்ந்தாயிற்று...

எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்றுமிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சிக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
களைந்த கூந்தலோடும்
வயிரெரிந்து இதோ விடுகிறேன்..

கண்ணகி மண்ணில் இருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள் நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!

தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்துவிட்டாய்
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ இந்தியாவே!
ஆயுதம் கொடுத்து வேவு விமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போடவைத்த உன்தலை
சுக்குநூறாய் சிதறட்டும்!

ஒரு சொட்டு தண்ணீருக்காய் விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு

உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!
மழைமேகங்கள் மாற்றுப் பாதைகண்டு
மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடி சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்
இனி உன் காடு கழனியெல்லாம் கருகிப்போகட்டும்!
தானியங்கள் எல்லாம் தவிட்டுக்குப்பைகளாய்
அறுவடையாகட்டும்!

மந்தைகளைப் போல் எம்மக்களை துரத்தினீர்கள்
உங்கள் மலைகள் எல்லாம்
எரிமலைக் குழம்புகளைக்
கக்கி சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுவீசிய அரக்கர்களே...
உங்கள் ரத்தம் எல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெலலாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்கள் எல்லாம் குண்டுவெடித்து
சிதறிய உடல்களோடு
சுடுகாடு மேடாகட்டும்!

போர் நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்றுவைக்கட்டும்!

வாய் திறந்தாலே ரத்தவாந்திக் கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகள் மீது
ஏறியமர்ந்து அரசாட்சி செய்தீர்களே...

உங்கள் சிம்மாசனம் வெடித்துத்
தூள்தூளாகட்டும்!

உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்......
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை அலையவீட்டீர்களே...
உங்கள் தாய் தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடையைக் கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!

எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில் பெருமின்னல் பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்விருந்து கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!

உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடி நரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!

இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல் பூண்டு முளைக்காமல் போகட்டும்...

ஆழிப்பேரலை
பொங்கியெழுந்து
அத்தனையும் கடல் கொண்டுபோகட்டும்!

நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்!

..........
பின்குறிப்பு:
உங்கள் குழந்தைகளை சபிக்கமாட்டேன்!
குழந்தைகள் எங்கிருந்தாலும் குழந்தைகளே...
அவர்கள் நீடுழி வாழட்டும்!

எம் குழந்தைகள் அழுதாலும்
உன் குழந்தைகள் சிரிக்கட்டும்! உன் குழந்தைகள் சிரிக்கட்டும்!
-
தாமரை

7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. nichayama, engalukkaga urimai kural kodukkum engal akkavukku nantri.
    balasundaram
    rajapalayam

    ReplyDelete
  3. இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

    இத்தகைய நிலையில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டறிய இந்திய அரசு சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்பி கண்காணிக்க வேண்டும்’’

    இப்படி ஒரு கோரிக்கையை வைத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கலைஞர்.

    இதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்...கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,

    ‘‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது’’ என தனது தலைவர் கலைஞருக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.

    ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்... ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது ஈழத் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

    டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி நம்மிடம் பேசிய கவிஞர் தாமரை, ‘‘தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

    போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

    அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

    வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்ஷவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

    இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே... அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்ல தயாராக இருக்கிறேன்.

    டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?’’ என்று காட்டமாகக் கேட்டார் தாமரை.

    அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    ‘இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு,

    ‘‘ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது’’ என கூறியிருக்கிறார்.

    ‘‘ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்ஷ குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது’’ என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!
    tamilwin

    ReplyDelete
  4. இலங்கையில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்கனவே இந்திய அரசு 500 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ள நிலையில், அங்கு எதிர்பார்த்த அளவிற்கு மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரியதாகும்.

    இத்தகைய நிலையில் இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்ட மறுவாழ்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள உண்மையான நிலைமையையும் கண்டறிய இந்திய அரசு சிறப்பு தூதரை இலங்கைக்கு அனுப்பி கண்காணிக்க வேண்டும்’’

    இப்படி ஒரு கோரிக்கையை வைத்து கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் கலைஞர்.

    இதன்பேரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்...கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி தமிழ் இதழுக்கு, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு அளித்துள்ள பேட்டியில்,

    ‘‘யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்தியா தனது உதவிகளைத் தொடரும். ஆனால், அந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரன் வேலையை இந்தியாவால் செய்ய முடியாது’’ என தனது தலைவர் கலைஞருக்கே பதிலடி கொடுத்திருக்கிறார்.

    ஆயிரக்கணக்கான கோடிகளை இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கைக்கு வாரியிறைத்திருக்கும் நிலையில்... ‘அந்த பணத்தை எப்படி வேண்டுமானாலும் சிங்களன் செலவழிக்கட்டும். அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை’ என்கிற ரீதியில் பாலு சொன்னது ஈழத் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.

    டி.ஆர்.பாலுவின் இந்த பேட்டி பற்றி நம்மிடம் பேசிய கவிஞர் தாமரை, ‘‘தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தமிழரா, இந்தியரா என்ற குழப்பம் அவருக்கே இருக்கும். இதில் எந்தக் குழப்பமும் தேவையில்லை. அவர் தமிழரோ, இந்தியரோ அல்லர், அசல் சிங்களவர் என்பதைத்தான் அவர் அளித்துள்ள பேட்டி வெளிப்படுத்துகிறது.

    ReplyDelete
  5. போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா வழங்கும் உதவிகள் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் போலீஸ்காரனாக இந்தியா செயல்பட முடியாது என்றும், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் சிங்கள இராணுவ குடியிருப்புகள் அமைப்பது தொடர்பாக ஆதாரமில்லாமல் குறைசொல்ல முடியாது என்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

    அவரது இந்த பேட்டி நமக்கு மட்டுமல்ல, அவர் சார்ந்திருக்கும் தி.மு.க. தலைமைக்கே வியப்பை அளித்திருக்கக் கூடும். அப்படி இல்லையென்றால் எல்லோரும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும். இந்திய உதவிகளை கண்காணிக்க சிறப்பு தூதரை அனுப்பவேண்டும் என தமிழக முதல்வர் வலியுறுத்துகிறார். ஆனால் இது போலீஸ்காரன் வேலை என டி.ஆர்.பாலு சொல்கிறார்.

    வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ குடியிருப்புக்கள் அமைக்கப்படுவதை நடுநிலையாளர்கள் பலரும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழர் பகுதிகளில் புதிய புதிய இராணுவ பாசறைகள் அமைக்கப்பட்டு வருவதையோ, பழைய உயர் பாதுகாப்பு வலயங்கள் நீடித்து வருவதையோ சிங்கள அரசே மறுக்கவில்லை. ஆனால் டி.ஆர்.பாலு இதற்கு ஆதாரம் வேண்டுமென்று கேட்கிறார். இவரும் இவரது குழுவினரும் ராஜபக்ஷவின் விருந்தாளிகளாக இலங்கை சென்றபோது போய்ப் பார்த்திருந்தால் ஆதாரங்கள் கிடைத்திருக்குமே?

    இப்போதும் கூட சுயேச்சையான ஒரு ஊடகவியலாளர் குழுவை எவ்வித தடையும், தணிக்கையுமின்றி தமிழர் பகுதிகளை சுற்றிப் பார்க்க அனுமதி வாங்கித் தரட்டுமே... அப்படி அனுமதி வாங்கித் தந்தால், நானே நேரில் சென்று உண்மைகளைக் கண்டறிந்து மக்களுக்கு சொல்ல தயாராக இருக்கிறேன்.

    டி.ஆர்.பாலுவின் கூற்றுப்படி இந்தியாவால் போலீஸ்காரனாக செயல்பட முடியாது என்றால், கொலைகாரனாக மட்டும்தான் செயல்பட முடியுமா?’’ என்று காட்டமாகக் கேட்டார் தாமரை.

    அதே பேட்டியில், டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கும் இன்னொரு கருத்து ஈழ உணர்வாளர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    ‘இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள டி.ஆர்.பாலு,

    ‘‘ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது’’ என கூறியிருக்கிறார்.

    ‘‘ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்ஷ குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது’’ என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!
    tamilwin

    ReplyDelete
  6. anbu akka thamaraiku:
    ungal medhu enakulla anbu tamil in paal vandhadhu. tamil mel ungaluku ulla anbudhan enaku ungal mel mariyadhaiyai kondu vandhadu. ipadiye endrum tamiluke undana miodukkum thimirudan irungal, aiya suba vee aditha under baltiyal nondhu poi irukum ennai pol tamil nesargaluku neengale aarudhal. dhayavu seidhu kudumba aatchiku edhuir aniyal irungal. ungal tambiyin anbu vendukol idhu.
    KABILAN,

    ReplyDelete
  7. en guru thamarai akka avargalin saabam palikkattum...........en eazham malarattum.......
    -tamilar kalam ilingar iyakkam (tkii)

    ReplyDelete