Manipur Irom Sharmila, Iron Lady Of india
ஷர்மிளா, வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண். அம்மாநிலத்தில் இராணுவம் நடத்திவரும் அட்டூழியங்களுக்குச் சட்டபூர்வ அந்தஸ்தைக் கொடுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் எனக் கோரி பல ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.
ஷர்மிளாவின் கோரிக்கையைப் பரிசீலிக்க மறுத்த அரசு, ""தற்கொலைக்கு முயற்சி செய்ததாக''க் குற்றஞ்சுமத்தி, அவரைக் கைது செய்தது. சிறையில் வலுக்கட்டாயமாக உணவு கொடுக்க முயன்று தோற்றுப் போன அதிகார வர்க்கம், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தது.
1980ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்படி, ஒரு இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். இராணுவம் துணை இராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கூட, தனது மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக் கொல்ல முடியும்; நீதிமன்றத்தின் ""வாரண்ட்'' இல்லாமலேயே, எந்த இடத்திலும்/வீட்டிலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்த முடியும்; சந்தேகப்படும் நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற முடியும்; அழிக்க முடியும்; இராணுவத்தால் கைது செய்யப்படுபவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மணிப்பூரில் கடந்த 26 ஆண்டுகளில், ஏறத்தாழ 26,000 பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சட்டம் கொடுத்திருக்கும் பாதுகாப்பால், இப்படுகொலைகளுக்காக ஒரு இராணுவ சிப்பாய்கூடத் தண்டிக்கப்படவில்லை.
அமைதி வழியிலும் ஆயுதம் தாங்கியும் நடந்துவரும் சுயநிர்ணய உரிமைக்கான அப்போராட்டத்தை கைது, சித்திரவதை இராணுவ ஒடுக்குமுறைகளால் ஒழித்துக் கட்டிவிட முடியாது. ஷர்மிளா கூறுவது போல, ""இன்று இல்லாவிட்டால் நாளை, உண்மை வென்றே தீரும்!''அன்று இந்திய போலி ஜனாயக முகமூடியை கிழித்து எறிந்தான் எங்கள் தமிழ் இனத்தில் பிறந்த மாவீரன் திலீபன் இன்று மணிப்பூரில் பிறந்த ஐரோம் சானு ஷர்மிளா !!
no second word.we will win.
ReplyDelete