thiruvengadam velupillai


எமது தந்தை வேலுப்பிள்ளை அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...




உயிரிலும் மேலான,,
உன்னத தலைவனை,,
தாரை வார்த்து கொடுத்த,,
தானைப்பெரியோனே....!!!

உலகமே ,,
உங்களை, வாழ வைக்க காத்திருந்த போதும்,,
உயிரை துச்சமாய் எண்ணி,,
வன்னி மண்ணிலே,,
வாழ்ந்த மாமனிதனே...!!!

எம்மை காத்தருளிய,
எம் தலைவனின்,,
பெற்றோர் உம்மை,
காக்க முடியாப்பாவியானோமே...!

தள்ளாடும் வயதோடும்,,
தாங்கொணாத்துயரோடும்,,
தனி மரமாய் நின்று,,,
தத்தளித்த தெய்வமே...!!!
உங்கள் உடலமதை, தன்னும்,,
உற்று நோக்கி,,
உணர்வுகளை,,
உதிர்த்திட முடியாதோ...??
என்ன கொடுமை இது...!

கண்ணீரையும்,,
கவிதையையும்,,
தவிர வெறென்ன
தர முடியும்??
தற்போது...இந்த
தமிழினத்தால்....

உயிர் கொடுத்த உதிரங்கள் நான்கினைப் பிரிந்து..
உற்ற துணையோடு,, ஒரு சித்திரவதைக்கூடத்தில்..
ஆறு மாதங்களாய்,,,என்ன துயர் பட்டீரோ ஐயா...
உங்கள் உயிர் பிரிந்த போதிலே...
உங்கள் உதிரங்களை நினைத்தீரோ..??
உருக்குலைந்து பொய் விட்ட,
மண்ணை எண்ணினீரோ..??

தமிழினத்திற்காய்...
அன்றிலிருந்து இன்று வரை...
நீங்கள்,, பட்ட துன்பங்கள் சொல்லிலடங்கா..
அகவை எண்பதிலும்...அரை உயிராய்,,,
அப்பா என்ற உறவை காரணம் காட்டி..
அல்லல் படுத்தினரோ....??
ஆக்கினை தந்தனரோ....??

பொன்னுடலுக்கு, அஞ்சலியாவது செய்திட,,
பொல்லாத சிங்களம்,, இனியாவது தந்திடுமோ?? உம்மை
பொங்கி எழுந்திட, பொருமுகின்றது...நெஞ்சம்..!!!
பொய்யர்களின் கழுத்தை அறுக்க, துடிக்கின்றது..கரங்கள்..!!

விடை பெற்று சென்று விட்ட உத்தமரே...!!
விடுதலை வேட்கை கொண்டு எழுந்திட்ட,
வீரப்புதல்வனை வித்தாக்கிய விருட்சமே..!!
விழுந்து நிற்கின்றோம் ஐயா...இன்று நாம்...
விரைவிலே...உங்கள் தாகம் தீர்ப்போம்...!!!
விண்ணுலகம் நோக்கி....
விரைந்து வரும் ஒரு செய்தி...!!!

பெருந்தகையே....!!!
உங்கள் பூதவுடலுக்கு...
மானசீகமாய்,,
மலர் தூவி,,
கண்ணீரை காணிக்கையாக்கி,,
எம் இதயமதில்,,,
விதைக்கின்றோம்...!!!
வித்துடலை...!!!


தமிழீழத்திலிருந்து.
ஒரு தமிழிச்சி...

2 comments:

  1. பெரியவருக்கு கண்ணீர் அஞ்சலி..

    தமிழ் நாட்டு M.P களின் அடுத்த srilanka உல்லாச சுற்றுலா எப்போது என யாராவது கேட்டு சொல்லுங்கள்.

    ReplyDelete
  2. ganapathi gunasingamJanuary 7, 2010 at 10:46 PM

    நம் இனத்திற்கான அடையாளத்தை, வீரனை, ஒரு ஒப்பில்லா தலைவனை, தமிழனை நமக்கு பெற்றுத் தந்த தந்தை என்றும் நம் மனதில் வாழ்வார். ஈழம் மலர்ந்த பிறகே அவரின் ஆத்மா சாந்தி அடையும்.

    ReplyDelete