kittu mama



வங்க கடலின் நடுவே – தமிழீழவரலாற்றை எழுதிச் சென்ற சரித்திர நாயகனே!,தலைவரின் சுமைகளைச் சுமந்து – தமிழீழதலைவரால் தம்பியாக தளபதியாக நேசிக்கப்பட்டவரே!எங்கள் தமிழீழ கனவு வளர்த்த – கனவு உலகமேஎங்கள் கிட்டு மாமா….முதற்களத்தையே தனிமனித சாதனையாக நிகழ்த்தி – தலைவரிடம்முன்னுரிமை பெற்ற தனிமனித சரித்திரமே!கிட்டுவின் பெயரைக்கேட்டால் – சிறிலங்காகிடுகிடுத்த காலமது 1987…மக்களின் மனதினிலே மூன்றெழுத்து மந்திரமாகமக்கள் தலைவனின் சிந்தனையை பிரதிபலித்தஒப்பற்ற போராளியே கிட்டு மாமா….அமெரிக்காவுக்கு வியட்நாமாம்இந்தியாவுக்கு தமிழீழமாம் – எனவல்லரசுகள் கதிகலங்கிய காலமதுவும்வல்லமை பொருந்திய உங்களின் காலமே கிட்டு மாமா…புலம்பெயர்ந்த மக்களிடம் – தமிழுணர்வுபுலம்பெயராமல் புலம்பெயர்ந்த தேசமெங்கும்தமிழ்ப் பணி செய்து…நான் போகும் இடமெல்லாம் – என்தமிழிருக்கும் என அடையாளம் தந்ததமிழீழ வித்துவானே கிட்டு மாமா….இந்தியரசின் சதிவலையில் அன்று நீங்கள் – இந்தியஇறையாண்மை சதிவலையில் இன்று நாங்கள்தமிழீழ தன்மானம் காக்க தீயினில்தவழ்ந்தது உங்கள் படகு – அந்ததீயினில் எரிந்தது தமிழீழ மக்கள் மனது….புலிகளும் மக்களும் ஒன்று என – உலகம்புலம்ப காரணமான விருட்சமே!சிறியரக ஆயுதத்தால் சாதனை பெற்ற – உங்களுக்குசிங்களம் பிதுங்கும் கிட்டு பீரங்கிப் படையே வந்துவிட்டது.ஊடகங்கள் மூலம் பயங்கரவாதியாகஊதித்திரிந்த ஊடகங்கள் மத்தியில்உண்மை செய்திகளைஉலகமறிய தமிழீழ ஊடகங்கள் வளர்ச்சி பெறஉத்தம பங்காற்றிய ஊடக வழிகாட்டியே!

No comments:

Post a Comment