செம்மொழிகொண்டான் கலைஞர் கருணாநிதிக்கு ஒரு வேண்டுகோள்..


முள்ளிவாய்க்காலில் தப்பி……. முள்வேலி முகாம்களில் சிக்கியவர்களைப் பற்றி மட்டுமே எங்களைப் போன்றவர்கள் பேசத் தொடங்கினோம்…..
அப்படியாயின் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த அந்தப் பனிரெண்டாயிரம் போராளிகள்?
தன் வீடு….
தன் குடும்பம்….
தனது கல்வி…..
தனது காதல்… என சகலத்தையும் துறந்து இந்த மக்களின் விடிவுக்காகவும் இந்த மண்ணின் விடுதலைக்காகவும் ஆயுதம் தரித்தார்களே…..
அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?
மக்களையே சிங்கள அரசு சின்னா பின்னப்படுத்தும்போது அந்தப் போராளிகளை எந்தெந்தவகைகளில் எல்லாம் சித்ரவதை செய்வார்கள்?
சுயநலமற்ற அந்த ஜீவன்களின் விடுதலைக்காக யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?
போரில் சரண் அடைந்த எந்தப் போராளியாக இருந்தாலும் அவர்கள் கண்ணியத்துடனும், மனித மாண்புடனும் நடத்தப்பட வேண்டும் என்கிற ஐ.நா.வின் அடிப்படை விதிகள் ஆகட்டும்…… ஜெனிவா உடன்படிக்கைகள் ஆகட்டும்…… போரியல் நியதிப்படி சிங்கள அரசு கடை பிடிக்கிறதா இல்லையா என்பதை யார் கண்காணிக்கிறார்கள்?
மக்கள் இருந்த முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு “பாலும் தேனும் இருபுறமும் பெருக்கெடுத்து ஓடுகிறது” எனச் சொல்கிற மனித உரிமைப் புடுங்கிகள் எவராவது சரணடைந்த போராளிகள் இருக்கும் முகாம் பக்கமாவது எட்டிப் பார்த்தார்களா?
ரத்தமும் சிறுநீரும் மலமும் ஒரு சேர ஓடும்…… ஓலங்கள் ஓயாத அந்த சித்ரவதைக் கூடங்கள் குறித்து சிந்தித்தாவது பார்த்தார்களா?
அவர்கள் கிடக்கட்டும் நாமாவது சிந்தித்தோமா?

அவர்கள் யாருக்காக போராளிகள் ஆனார்கள்?
நாம் பாதுகாப்பாக பிறந்தநாள் கொண்டாடுவதற்காக பதுங்கு குழிகளுக்குள் நின்று பாதுகாத்தவர்களல்லவா?

நாளை நமது முழக்கம் :
ஒன்று விசாரணை செய்.
அல்லது விடுதலை செய் என்பதாக இருப்பது மிக நல்லது.
அதுதான் எஞ்சியிருக்கும் உயிர்களையாவது காப்பாற்ற நம் முன்னே உள்ள ஒரே வழி.


அவர்கள் செய்த குற்றம் ஒன்றே ஒன்றுதான்:
அது : தன்னைத் தொலைத்து இந்த மண்ணை மீட்க நினைத்ததுதான்.

இவர்களை மீட்க முதல் தமிழன் என்றும் செம்மொழிக்கொண்டன் என்றும் தமிழர்களுக்கான கட்டுமரம் என்றும் இன்னும் பிற அடைமொழிகளால் சிலரால் அழைக்கப்படும் கருணாநிதி அவர்கள் ஆவன செய்யகோருவோம்..
அதே வேளையில் அவர் வழக்கம் போல் கண்டன அறிக்கையோ..
கபட கடிதமோ எழுதாமல் உண்மையிலே அவர்களை மீட்க எதேனும் முயற்சி எடுக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டுவோம்...


குறிப்பு: இந்தியாவிலிருந்து சிலர் கொடுத்த உத்திரவாதத்தின் பெயரில்தான் வெள்ளைக்கொடியுடன் வந்து சரணடைந்ததாக அப்போது செய்திகள் வந்தன..

1 comment:

  1. anbu nanbaare ungal korikkaiyai naan (ELAVAZHAGAN)VAZHIMOZHIGIREN,AANAAN ARASIYAL VAATHIGAL NITCHAYAM ATHIL THALAIEDA MAATTARGAL.......
    PURATCHI YENBATHU MAKKALAAL YERPADUTHTHAPPADA VENDUM,ITHU SAMBANTHAMAGA UNGALUDAN NAAN THODARBU KOLLA NINAIKIREN,
    THIS IS MY MOBILE NO:9787087990

    ReplyDelete