நம் தமிழினம் வீழ்ந்தமைக்கு காரணம் என்ன ?



நம் தமிழினம் வீழ்ந்தமைக்கு காரணம் என்ன ?

"ஒரு போராளியின் உண்மையான வெற்றியென்பது என்ன ?


தான் எகற்காக போராடினானோ அந்த இலக்கை அடைவது ஒரு போராளியின் உண்மையான வெற்றி அல்ல.

அவன் எந்த மக்களுக்காக போராடினானோ அந்த மக்களிடம் இருந்து அவனுக்கு கிடைக்கும் அங்கீகாரமே அவனது வெற்றி.

அதுவும் அந்த அங்கீகாரம் தன்னுடைய வாழ்நாளிலேயே கிடைக்கமாயின் அதுவே அவனது உண்மையான வெற்றியாகும்."

- அல்பெர்டோ கிரனாடோ*

(அல்பெர்டோ கிரனாடோ - சேகுவேராவின் அந்த புகழ் பெற்ற
லத்தின் அமெரிக்க மோட்டார் சைக்கிள் பயணத்தின் போது
பயணத்தோழராக உடன் சென்றவர்.

கியுபாவின் முன்னனி உயிர்வேதியல்(Bio Chemistry) மற்றும்
மரபியல் (Genitics) ஆராய்ச்சியாளர்.)

ஆக தமிழர்களாகிய நாம் குறிப்பாக தாய்தமிழகத்தில் உள்ள மக்கள் நமக்காக போராடிய போராளிகளை அங்கீகரிக்க தவறினோம், புலம் பெயர் தமிழர்களோ அவர்களை அங்கீகரித்த பொழுதினும் நமது போராட்டத்தின் நீதிகளை, நமது உரிமைகளை, நமது போராளிகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல தவறினோம்.

நம்முடைய இந்த இயலாமைக்கு கிடைத்த பரிசே நம் இனம் கண்ட இந்த வீழ்ச்சி.

இன்று நம் தலைக்குமேல் வெள்ளம் கடந்து சென்ற பிறகு நாம் ஆத்திரத்திலும் ஆதங்கத்திலும் பிதற்றி்கொண்டு இருக்கிறோம்.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் நடந்து அரங்கேரிய பிறகும் கூட "பிரபாகரன் இலங்கையில் என்ன செய்தார்" என்று கேட்கிற நண்பர்களும் தாய்தமிழகத்தில் உண்டு. இதை கேட்கும் உள்ளம் மிகவும் வேதனை அடைகின்றது.

சில நாட்களுக்கு முன்புவரை நீங்கள் கவனித்திருப்பீர்கள் அல்லது நீங்களே நேரடியாக தொடர்பு பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ஒரு சாதாரண உண்மையில்லாத - ஒரு நிழலுக்கு உயிர்கொடுக்கும் ஒரு நடிகன் நடிக்கும் ஒரு திரைப்படத்தை வெளிவரும்முன்பே புறக்கணிப்பதா ஏற்றுக்கொள்வதா என்று தேவையில்லாத விவாதஙகளில் ஈடுபடும் நம் மக்கள்.

சிங்களர்கள் கிளினொச்சியை கைபற்றும் வரையிலும் கூட மிகவும் அலட்சியமாகவே சுற்றித்திரிந்தனர்.

ஒரு சாதாரன திரைப்படத்திற்கு கொடுக்கும் இந்த முக்கியத்துவத்தை நாம் அன்றே நமது போராளிகளுக்கும் நம் தேசத்திற்கும் தந்திருந்தால்,அன்றே பொதுமக்கள் கலத்தில் இறங்கி நம் உரிமைகளுக்காக உலக அளவிலே குரல் கொடுத்திருந்தால்இவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டிருக்காது.

இனி வரும் காலங்களிலாவது இதுபோன்று அறியாமையிலிருந்து விழித்துக் கொள்வோம் நம் மக்களுக்காக போராடும் போராளிகளை அங்கீகரிப்போம். நமது தமிழீழத்தை பெற்றிடுவோம்.

அ.க.இராஜதாசன்

No comments:

Post a Comment