தீயாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன்
உறவுகளே,
தீயாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அண்ணாவுக்கு உங்களின் இறுதி வீரவணக்கத்தினை இங்கே செல்லுத்திச் செல்லுங்கள்.......
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா
ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா..
(பாடல் நிறைவு)
ஐந்து அம்சக் கோரிக்கை
1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்''
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
சாவு தின்னுதே
சாவு தின்னுதே
தங்க மேனியை
சாவு தின்னுதே
வந்து பாரடா
வந்து பாரடா
நொந்த மேனியை
வந்து பாரடா.
குரல் எடுத்ததோர் குயில் படுத்தது
குமுறி நின்றதோர் புயல் பட்டுத்தது
தரமறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது
அரிசி கொண்டொரு படகு வந்தது
அடுத்தது ஒரு செஞ்சிலுவை வந்ததது
வரிசை வரிசையாய் கவச வாகனம்
வந்து வாய்க்கரிசி போட்டு நின்றுது..!!
- திலீபன் நினைவாக கவிஞர் புதுவை இரத்தினதுரை வரைந்தது. நினைவில் நின்ற வரிகள் மட்டுமே இங்கே. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
வெல்வோம் தமிழீழத்தை அது அமையட்டும் தலைவரின் காலத்தில்
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
பதிவு: புதிதாய் பிறப்போம்
நன்றி தமிழரசி
No comments:
Post a Comment