katcha tivu meetpu,porattam,alangudi naam tamilar

ஆலங்குடியில் மாபெரும் கண்டனபொதுக்கூட்டம்



சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு இலங்கை இனவெறியர்களின் தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்தும் அதை தட்டிகேட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாவீரன் செந்தமிழன் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நகரம் நாம் தமிழர் பேரியக்கத்தின் சார்பில் மாபெரும் கண்டனபொதுக்கூட்டம் நடைபெற்றது.

இடம்: வட்டங்கட்சேரி ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டம்
நாள்: 18.09.2010, சனிக்கிழமை மாலை 6 மணி

கண்டன உரை வீச்சு: இனப்போராளி பட்டுக்கோட்டை திலீபன்
தலைமை நிலைய பேச்சாளர் நாம் தமிழர் பேரியக்கம்

தோழர் திரு. இராசேந்திரன், மீனவர் பேரவை தலைவர்
தோழர் திரு. அருள்மொழி, பொதுவுடைமை போராளி

மற்றும் பல இன போராளிகள் சிறப்புரை ஆற்றினார்கள்.

பொதுக்கூட்ட அமைப்பாளர்: சரவணக்குமார் Bsc

போராளிகள் சகோதரர் முத்துக்குமார், சத்யா, நார்த்தாமலை சிவா, லெட்சுமி நாராயணன் Msc, ஓவியக்கூத்தன், ஆலங்குடி உதயா மற்றும் கருணாகரன் MPED, Mphil அவர்கள் முன்னிலையிலும் மேற்பார்வையிலும் நடைபெற்றது.

மாவட்ட இனமான போராளிகளே மற்றும் அன்னை தமிழினமே அழியும் தமிழினத்தை காக்க அலைகடலென திரண்டு வந்திருந்தனர்...
நாம் தமிழர் பேரியக்கம், புதுக்கோட்டை மாவட்டம்.

1 comment: