thiruvarangulam, naam thamilar,pothukoottam







கண்டன பொதுக்கூட்டம் மிக சிறப்பாக அமைந்து இருந்தது. கூட்டம சிறப்பாக அமைய உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. முகம் தெரியாத பல இணைய தள நண்பர்களும் வாழ்த்தினார்கள், தங்களால் இயன்ற சிறு சிறு பொருளாதார உதவிகளை செய்தார்கள். அவர்களுக்கு கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் பல கோடி.

கூட்டம் மிக பெரிய உணர்ச்சி பிழம்பாக இருந்தது. போராளி திலீபனின் உரை ஆலங்குடி சுற்று வட்டாரத்தை தீக்கணையாக தாக்கியது. கூட்டத்தின் எண்ணிக்கையை கண்டு திலீபனும் வெகு நேரம் வார்த்தைகளை தீயாய் கக்கினார்.

கூட்டம் அப்படி இருந்தது இப்படி இருந்தது என்பதை விட ஒரே வார்த்தையில் அந்த சுற்று வட்டார மக்களே ஏற்று கொண்ட வகையில் ''அந்த இடத்தில் அப்படி ஒரு கூட்டத்தை கூட்டி இப்படியான ஒரு பிரம்மாண்டமான கூட்டத்தை எந்த ஒரு ஆளும் கட்சியும் நடத்தியதில்லை'' என்பதே சான்று.

நன்றி: தினத்தந்தி
Daily Thanthi news

1 comment: