மாவீரர் நாள் 2010


உயிரோடு உயிராகிய உத்தம வீரர்களே..

நீங்கள் உங்களை கரைத்தது எங்கள் உதிரத்திலா

பயிருக்கு வேராகி நமக்கும் வீரத்தை ஊட்ட..

விதையாக விழுந்த கண்மணிகளா

எனக்கு மட்டும் நலம் தேடி நான் வாழ…

பிறர்க்காகவும் வாழும் எண்ணம் படைத்தீரே

நீங்கள் தினம் எழுந்து கண் விழித்தது

இனமான தாய் முகத்திலா

உன் அயலவனாகத்தனே நானும் வாழ்ந்தேன்..

உன்தன் எண்சான் உடம்புக்குள் மடடும்

என்சனத்தின் உணர்வு விண்ணாக உயர்ந்தது எப்படி

நாற்திசை எங்கும் நெருப்பு இருப்பினும் கீழ்த்திசை வெளிக்கும் என்ற உறுதியுடன்

போர்த்திசை மேவிய புண்ணியர்களே

வீரம் விளைந்த மண்ணில் செங்குருதி

தெளித்து புது வேதம் படைத்துச் சென்றவரே.

ஈரமற்ற என் இதயத்தை ஏன் இப்படி மாற்றி

இரவு பகலாய் அழச் செய்தீர்

தாரமும் சேயும் கண்ணில் நீர்மல்க

பேழைக்குள் விதையான முத்துக்களே

சொந்தங்கள் வீசும் சுகந்தங்களுக்குள்

நாங்கள் மெய் மறந்து கிடக்க விடுதலை

தீயில்

வெந்தெங்கள் வாழ்வுக்காய் எப்படிச் சென்றீர்

அனலாகிக் கொதித்த தாய் மண்iணில்

புனலுடன் கலந்த செந்நீர் வரைந்த

வரளாற்றின்

நாயகர்களே

மணலாகிய கல் தோன்ற முன் இந்த இனம்

தோன்றியதை நிருபிக்க தாய்

மண்ணோடு கலந்தவரே

எங்கள் உடலோடு உறைகின்றது உங்கள் உணர்வு..

அது நரம்போடு இணைந்திட உயர்கிறது தாய்மண் ஆர்வு

உங்ளைத் தேடி தினம் கடக்கும்; பல கோடி

முகங்கள் பார்த்தும்.. கணாது அகம் வாடி

வாழும் வாழ்வு எமக்கு

எங்களை விடடுச் சென்று எங்களை எமக்கு தொட்டுக் காட்டியவரே..

அடிமையென்றும் ..அகதியென்றும்.. நாடற்றவர்..கோழை..

துரொகியென்றும்.. என்றும் எம்மை வகைப்படுத்தியவரே..

பாதை வகுத்து தந்தவரே பயணத்தை நெறிப்படுத்தியவரே..

தடைகளை உடைக்கும் உறுதியை தந்து நாட்டுப் பற்றாளராக

எம்மையும் மாற்றிட செய்தவரே..

மாற்றத்து ஏற்றமாகி விடுதலைப் பயிருக்கு செங்குருதி

இறைத்தவரே.. தோற்றமடைந்தது சுதந்திரச் செங்கொடி உலகச்

செவ்வாணத் தமிழன் கையுயர

போர் ஓயும் காலம் ஒன்றின் கட்டாயம் வல்வினை வல்லரசுகளின்

கூட்டுபாயத்தால் வலிக்க

வேரகழா மதியுபாயம் மிக்க சரணடைவுத் தற்கொடைக்கு புது

விதிமுறை தந்தவரே

இன வெறியர் முன் வெள்ளைக் கொடியுடன் நீங்கள் நின்ற உறுதி

என்றும் வாழ்கிறது..

பிணந்தின்னி சிங்களநரிச் செயலை இப்பருதிக்கு வெளிச்சமாக்கிய

சூரியர்களே

இனவெறி ஆட்சியாளனின் கொட்டம் அடக்க புதுவழி தந்த

புண்ணியர்களே

பிஞ்சுகளின் வதனம் சிதைய வஞ்சிகளின் உயிரும் துடிக்க நடக்கும்

கொடுமை தாங்காது ரத்தம் கொதிக்கிறது.. வித்தாகி விழுந்தவih

சாட்சியாக்கி பெற்ற எங்கள் அகதிவாழ்க்கை சுடுகிறது

குருதியின் சேற்றில் உயிருடன் இழுத்து வந்து.. முதுகில்

உதைந்து தமிழனின் பின்புறம் நின்று சுட்ட கோழைச் சிங்களனை எப்படி நான்

சகித்துக் கொள்வேன்..

அடக்கு முறைக்குள் என் உறவின் இரத்தம் குடிக்கும் ஆட்சியாளனை

எப்படி நான் கட்டித் தழுவுவேன்

கூட்டினில் உறங்;கிய காலம் போதும் புலியென போற்றப் படுபவனே

சிறுநரிகள் வேட்டை உன்னை அழிக்குமா

பூனையும் சூடுபட்டு புலியாகும் ..புலியே நீ புயலாக மாறவேண்டாமா..

தமிழ் அகமே எழுந்துவா.. நாம் தமிழர் அணிசேர்வோம்.. நீ துணிந்தாள்

மலையும் கடுகாகி ஓடும்

கடமை பெரிது பயணம் பெரிது தலைவன் ஆணைவர சேனைதிரண்டு

வா

வேற்றிடம் தேடி வந்து குளிர் வெப்பத்துள் இன்னும் எங்கள் இருப்பு

வேண்டுமா

போர்ப் பறை முழக்கம் உலகம் சேர்ந்து கொட்டியபோதும் வாய்ப்பு

ஒன்றை பெற்ற தமிழர்; வீரம் உலக வானை முட்டியது

நீங்கில் உயிர் உடல் விட்டு போகட்டும்.. தமிழ் வாழ சாவினில்

கலந்தான் இத்தமிழன் வாழ்வதற்காக வீழ்ந்தான் என்றதுதான் எங்கள்

வரலாறு

தீவினில் இருநாடுகள் தோன்றி தீந்தமிழ் ஓங்கும் காலம் கூடும்

திக்கெங்கும் தமிழன் புகழ் ஓங்கப் புறம் பாடு

நாங்கள் இருக்கின்றோம் வாருங்கள் நீங்களும் என்று வேங்கைகள்

குரல் கேட்கும்

தாங்கும் துயர் எதையும் தாங்குவோம் தமிழ் வாழ.. எம் மண்மீள களப்

புண் பல நூறாயினும் வாங்குவோம்

பன் நெடும்காலம் காத்து வந்த மரபு மண்ணோடு புதைந்து போகாது

நிலைக்க

கண்ணோடு மைதடவி வாழ்ந்த பொண்கள்.. களப் புண்ணோடு

கிடக்கும் காட்சி கண்டோம்

தென்நாடு எங்கும் தமிழன் வாழந்த அந்த பொன்னாடு இன்று எங்கே

மண்ணாளும் உரிமை தமிழனுக்கில்லை என்று நாயைப் பின்னாலும்

தொடர்ந்து வந்தவன் சொன்னான்..

விண்ணாளப் பிறந்து மலைத் தோள் சுமந்தவனே பின்னாலே பிறந்த

மொழிக்கெல்லாம் நாடுண்டு

இந்நாளும் பொழிவோடு வாழும் மூத்த மொழிக்கு உன்னால்தான்

முடியும் எந்நாளும் தமிழ் வாழ மகுடம் சூட்டு

வாடுதல் சோர்தல் தளர்தல் நீக்கம் கண்டு தேடுதல் வேண்டும்

கூடித் தொழில் செய்வோரெல்லாம் தமிழ் வாழப் பாடவேண்டும்.

நாடெங்கும் அலைந்தாலும் வீடு ஒன்று சொந்த மண்ணில்

நிறுவவேண்டும்.

தன்மானத்தோடு நீயும் நானும் தமிழன் பெயர் பொறித்த வீதியில்

உலவவேண்டும்..

தாயகத்த்தில் பிறந்தவர்களில் ஆயிரத்தில் ஒருவன் நீ..

மரமிருந்து விழும் கனிகள் வேருக்குத் தூரமமாய் விழுவதில்லை

மண்பிரிந்து நீ வாழ்ந்தாலும் உன் நினைவுகள் தாயகத்தை

மறப்பதில்லை

சும்மா விட்டு விடமுடியாது.. வக்கிரகங்களை புதைத்துவிட்டு

வாழ்க்கையை தேடு;

ஆக்கிரமிப்புகளை மீறி நாம.;.. தொலைத்த எங்கள் புண்ணிய பூமியை

நாடு..

சரியாக எதையும் செய்ய தெரியாத உனக்காக இன்னும் எத்தனை

தமிழன் வித்தாகவேண்டும்..

பிறந்தபோது உன் உடலில் ஒட்டிய மண்ணை நீ தட்டிவிட்டாலும்

இன்னும் உன் இதயத்தில் எங்கோ ஒட்டிக் கிடக்கிறது

ஒரு வக்கிரமான மனித குலத்தில் இருக்கக் கூடிய அத்தனை

உக்கிரமான குணங்களால் உன் மனம் உக்கிப் போனாலும்

உன் பசுமையான தேச நினைவுகள் சுதந்திரத் தளிரை துளிர்த்துவிடச்

செய்துவிடும்

அணல் பூத்த நெருப்பே உன்கையில்தான் உன் இருப்பே.. மண்ணை

மறக்க முடியாமலும் அதற்காக இறக்கமுடியாமலும் உன்னைப் போல்

இங்கு பல உணர்வுகள் புழுங்கித் தவிக்கிறதே.. எரிமலையெ உன்

வீச்சு தமிழ் மூச்சென்று குமுறு…

1 comment:

  1. MANAM ALIYAVELAIYADE EELA TAMILANUKUM ULAGA TAMILANUKUM, TENATU TAMILANAI TAVERAI.

    SOON LTTE MEMBERS REGROUP, WITH SUPPORT OF WORLD TAMIL DIASPORA TAMIL EELAM WILL FLOURISHED. TAMIL EELAM MALARUM

    ANAITU VESI TAMILNADU MAKKAL NASAMAGE, MANUDE MANAI ALINDE POGUNOM.

    MOTHER FUCKER RAJAPAKSE AND ALL HIS BOTHER WILL BLOW OFF...........................SOON

    ReplyDelete