பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய், release innocent perarivalan,murugan and santhan

















பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய்ய தமிழக அரசை தீர்மானம் நிறைவேற்ற மாபெரும் போராட்டம் சென்னையில் ஆகஸ்ட் 20 தேதி நடைபெற்றது . இதில் திரு . வைகோ , கொளத்தூர் மணி, பேரா.சரஸ்வதி, டிஎஸ் எஸ் மணி , அற்புதம் அம்மாள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டனர் . தோழர்கள் குடும்பமாக வந்திருந்து கையில் பேரறிவாளனை விடுதலை செய் என்னும் பதாதையுடன் , வீர முழக்கங்கள் செய்தனர். திரு வைகோ அவர்கள் ஒரு மணி நேரம் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இந்த மூவரை விடுதலை செய்யும் கோரிக்கை முழக்கங்கள் முழங்கிக் கொண்டே இருந்தார். அவரை பின்பற்றி தோழர்களும் முழக்கமிட்டனர் . பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டு தமிழர்கள் மூவரின் விடுதலைக்காக எழுச்சியுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment