தமிழ் தேசியத்தலைவரின் 57வது பிறந்தநாள் வைகோ குறிப்புகள்..



இன்று தேசியத்தலைவர் மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் .... ஞாயிறு மாவீரர் தினம். தோழர்களுடன் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதோடு , ஒரு செய்தியையும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வைகோ என்கிற மகத்தான உண்மை உணர்வாளரை அடையாளம் கண்டுகொண்ட பல தருணங்களில் இதுவும் ஒன்று .................... அவர் சொன்னது .... '' ஈழம் என்பது என் இருதயத்திலிருந்து பீரிட்டு வந்த சத்திய வார்த்தைகள். நான் பொது வாழ்க்கை போராட்டக் களத்திற்கு வந்து 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. ஈழம் என்பது காலத்தின் கட்டாயம். அது பிறந்தே தீரும். அதை யாரும் தடுக்க முடியாது. தம்பி பிரபாகரன் மீது நான் உயிரையே வைத்துள்ளேன்.......... பீஸ் பீசா போயிருப்பேன்......... அன்றைக்கு இந்திய ராணுவ தாக்குதலில் துண்டு துண்டாய் சிதறி இருப்பேன். நான் ஈழத்தில் இருந்து திரும்பி வரும் போது தம்பி பிரபாகரன்.... பானு, பால்ராஜ் முதலான முக்கிய தளபதிகளை சேர்த்து 57 பேரை எனக்குத் துணையாக அனுப்பினார். அவர்களிடம் , ஒரு குழுவினர் முன்னே சொல்லுங்கள், நீங்கள் தகவல் சொல்ல சொல்ல பின்னால் உள்ள குழு நகருங்கள்.. பக்கவாட்டில் இருந்து சினைப்பர் அடிக்கக் கூடும், ஆகவே பக்கவாட்டிலும் ஒரு குழு செல்லுங்கள், என்று மிகுந்த அக்கறையுடன் என்னை அனுப்பி வைத்தார். கிளம்புவதற்கு முன், நான் அவரிடம் கேட்டேன், தம்பி, இங்கு எல்லோரிடமும் குப்பி இருக்கிறது, என்னிடம் மட்டும் இல்லை. ஒருவேளை நடக்கக் கூடாதது நடந்து ராணுவம் சுற்றி வளைத்துவிட்டால் அவர்களின் சித்திரவதைக்கு என்னால் ஆளாக முடியாது, எனவே எனக்கு ஒரு குப்பி தாருங்கள் என்றேன். அதற்க்கு அவர் '' என்ன அண்ணே , இப்படி சொல்றீங்க. அதுபோல் எதுவும் நடக்காது அண்ணே '' என்றார். '' பிரக்டிகலா யோசிங்க, ஒருவேளை நடந்தால் ?'' என்று நான் வர்ப்புறுத்தியதும் , சற்று யோசித்த அவர், பொட்டு அம்மானிடம் ஒரு கயிறு கொண்டு வரச் சொல்லி , தன் கழுத்தில் இருந்த இரண்டு குப்பிகளில் ஒரு குப்பியை கழற்றி , அதை எனது கழுத்தில் அவரே அணிவித்தார். அவர் எத்தனையோ பேருக்கு குப்பி அணிவித்திருக்கலாம், ஆனால் அவர் கழுத்தில் இருந்த குப்பிகளில் ஒன்றை எனக்கு அவர் கையாலேயே அணிவித்தது என் வாழ்வில் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். இதை நான் யாரிடமும் சொல்லிக்கொண்டதில்லை , எந்த விளம்பரமும் இதில் தேடிக் கொண்டதில்லை. அவர் அணிவித்த அந்தக் குப்பியை இன்னும் பொக்கிசமாக பாதுகாத்து வைத்துள்ளேன்'' என்றார் அவருக்கே உரித்தான உணர்ச்சிபொங்க ....
-தோழர் இல கோபால்சாமி

No comments:

Post a Comment