maaveerar naal 2011,periyar thidal ariyankuppam Pondicherry













மாவீரர் வீரவணக்க நாள்,
தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த புலி மாவீரர்களுக்கு வீரவணக்க நாள் புதுச்சேரி அரியாங்குப்பம் பெரியார் திடலில் 27.11.2011 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாலை 06.11 மணிக்கு நடைபெற்றது.
வீரவணக்க நாள் புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் லோகு.அய்யப்பன் சுடர் ஏற்றித் துவக்கிவைத்தார். இந்நிகழ்விற்குப் பெருந்திரளாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்கள் என ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வீரவணக்க முழக்கமிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.
தமிழ் உணர்வாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வீரவணக்கம் செலுத்தியது பொதுமக்களிடையே மற்றுமல்லாது புதுச்சேரி காவல்துறையினரின் கவனத்தை ஈர்த்தது. அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தியது ஈழ விடுதலைக்கான வித்து முளைத்து தமிழ் நாட்டில் மரமாகிக்கொண்டிருப்பதைக் காட்டியது.
வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்ட தோழமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள்: மக்கள் சனசக்தி தோழர். புரட்சிவேந்தன், கிராமப்புற சுற்றுச்சூழல் இயக்கம் தோழர் சந்திரசேகர், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை தோழர். சி.மூர்த்தி, மதிமுக தோழர். செல்வராசு. மாணவர் கல்வி அறக்கட்டளை தோழர். வேல்முருகன், பியுசிஎல் தோழர் அபிமன்னன், தமிழினத் தொண்டியக்கம் தோழர் அரிமாப்பாண்டியன், எழுத்தாழர் சங்கம் தோழர். சீனு தமிழ்நெஞ்சன், செந்தமிழர் இயக்கம் தோழர் ந.மு. தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கியப்பாசறை தோழர் தமிழ்ச்செல்வன், மற்றும் பெரியார் திக செயலாளர் தோழர் விசயசங்கர் , அமைப்பாளர் தோழர் தந்தை பிரியன், துணைத்தலைவர் தோழர். வீராசாமி, தோழர்கள்: ராசேந்திரன், சார்லஸ், ரவிச்சந்திரன், இளங்கோ, எத்திராஜ்.

வீரவணக்க நிகழ்ச்சி இரவு பத்துமணிவரை நடைபெற்றது.

No comments:

Post a Comment