Born 5-5-1976 ltte age 36
**Mya West II** :!!: ♥ இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அகவை 36 ♥ :!!: புதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார். இதுபற்றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் “கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார். தமிழீழ விடுதலைப்புலிகளின் உள் கட்டமைப்புகள் கடற்புலிகள் 1)சாள்ஸ் படையணி 2)அங்கைய கண்ணி நீரடி நீர்ச்சல் பிரிவு 3)நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு 4)ஈரூடக தாக்குதல் படையணி 5)கடற்படை படகு கட்டுமான பிரிவு 6)கடற்கரும்புலிகள் அணி 7)கடற்சிறுத்தை படையணி வான்புலிகள் 1)ராதா வான் காப்பு படையணி 2)விமான தாக்குதல் படையணி தரைப்படை 1) சார்ள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி 2) ஜெயந்தன் படையணி 3) இம்ரான் பாண்டியன் படையணி 4) யாழ் செல்லும் படையணி 5) புலனாய்வுத்துறை தாக்குதல் படையணி 6) சோதியா படையணி 7) அன்பரசி படையணி 8)- மாலதி படையணி 9) சிறுத்தை படையணி 10)தரைக்கரும் புலிகள் படையணி 11)பொன்னம்மான் கண்ணி வெடி பிரிவு 12)கிட்டு பீராங்கி படையணி 13)விக்ரர் விசேடகவச எதிர்ப்பு படையணி 14)லெப். கேணல் குட்டிசிறி மோட்டார் படையணி 15)மகளிர் அரசியல் துறை தாக்குதல் படையணி 16)இம்ரான் பாண்டியன் உந்துருளி அணி 17)எல்லை படை 18)துணைப்படை அறிவியல் 1) வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு 2)கணிணி தொழில்நுட்ப பிரிவு 3)இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு 4) போர்கருவி தொழிற்சாலை 5)தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி அரசியல் துறை 1) பரப்புரை பிரிவு 2) தமிழீழ பொறியியல் துறை 3) தமிழீழ விளையாட்டு துறை 4) விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி 5) திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை 6) தமிழீழ விடுதகலைப்புலிகளின் அரசியல் பிரிவு 7) தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம் 8 ) தமிழீழ கலை பண்பாட்டு கழகம் 9) விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு 10)சூழல் நல்லாட்சி ஆணையம் 11)தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு 12)பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம் 13)பொருண்மிய மதியுரைகம் 14)தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம் 15)ஓளிக்கலைப்பிரிவு 16)தமிழிழ தேசிய தெலைக்காட்சி 17)நிதர்சனம் 18)ஒளி வீச்சு ஒலிபரப்பு 19)புலிகளின் குரல் பத்திரிகை 20)புலிகளின் குரல் தமிழீழ வானொலி 21)ஈழநாதம் 22)சுதந்திரப் பறவைகள் 23)விடுதலைப்புலிகள் ஏடு 24)மருத்துவ பிரிவு 25)திலீபன் மருத்துவ சேவை’ தமிழீழ காவல்துறை 1)குற்றதடுப்புபிரிவு 2)விசாரணை பிரிவு 3)வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு 4)தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி தமிழீழ நீதித்துறை *தமிழீழ நீதி மன்றம் *சட்ட ஆக்க கழகம் புலனாய்வுத் துறை நிதித்துறை *தமிழீழ நிர்வாக நிதிபிரிவு *தமிழீழ வழங்கல் பிரிவு *தமிழீழ வங்கி *கொள்முதல் பிரிவு தமிழீழ பேக்குவரத்து கழகம் இதைவிட இரகசியமான சில படைகளும் உண்டு “பிரபாகரம் மறையாது” அது “அகிலம் எங்கும் வியாபிக்கும்”
No comments:
Post a Comment