tamil amma pathippagam chinnappa and Rajkumar Palaniswamy


சென்னையில் தமிழ் மொழியே தனது மூச்சாகவும் பேச்சாகவும் கருதும் ஒரு தமிழர் ! நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தமிழம்மா பதிப்பகத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிப்பகத்தை நடத்துபவர் சின்னப்ப தமிழர் (படத்தில் இருப்பவர்) . இவர் நிறைய புத்தகங்கள் எழுதி வெளியுட்டுள்ளார் . அனைத்தும் தமிழ் மொழிக்கு அவர் செய்த தொண்டுகள் தான். தமிழ் தேசியத்தை மூச்சாகவும் , தமிழ் மொழியை உயிராகவும் கருதி தன வாழ்கையை நடத்தும் ஒரு எளிய மனிதர். இந்த புத்தகங்கள், நாட்காட்டிகள் முதலியவற்றை தமிழர் நிகழ்வுகளுக்கு சென்று விற்று வருவார். இவரை அறியாத தமிழுணர்வு கொண்ட தலைவர்களே இல்லை என்று கூட சொல்லலாம் . அத்தனை தமிழ் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துள்ளார். தமிழ் நாட்டை பற்றியும் , தமிழர் பண்பாட்டை பற்றியும் இவரோடு பேசும் போதெல்லாம் , அவர் கடையில் இருக்கும் பல புத்தகங்களை எடுத்து மேற்கோள் காட்டுவார். அந்த அளவிற்கு தமிழ் தேசியத்தை பற்றியும் தமிழர் பண்பாட்டை பற்றியும் அலசி ஆராய்ந்து இருக்கிறார். இவரோடு நம் தமிழர் பண்பாடு , தமிழ் தேசியத்தை பேச தொடங்கியதும் நேரம் போனதே தெரியவில்லை. ஒருவரை ஒருவர் ரசிக்கத் தொடங்கினோம். இவர் கடையில் ஏராளமான தமிழ் தேசிய சிந்தனையுள்ள புத்தகங்கள் நிரம்பி இருந்தது. புது வரவாக சில வந்திருந்தன. மணிக்காட்டிகள், நாட்காட்டிகள், திருக்குறள் நாட்காட்டிகள், தமிழர் பண்பாட்டுப் படங்கள் என நிறைய காணப்பட்டது . கூடவே நாம் மிகவும் விரும்பும் தமிழ் மணிக்காட்டிகள் புதிய பொலிவுடன் இருந்தது. சுவர் கடிகாரங்கள் அய்யன் திருவள்ளுவர் படத்துடன் , தலைவர் பிரபாகரன் படத்துடன், அய்யா பெரியாரின் படத்துடன் புதிதாக வந்திருந்தது. இவைகளை விற்பனை செய்வதுடன் தமிழர் பண்பாடுகளை தமிழ் நாடெங்கும் எடுத்துச் செல்லும் இவரை தமிழர்கள் நாம் பாராட்டியே ஆக வேண்டும். நமக்கு அன்பளிப்பாக ஒரு மணிக்காட்டியை கொடுத்தார் . அய்யனின் படம் போட்ட ஒரு மணிக்காட்டியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து விடைபெற்றோம். சென்னையில் உள்ள தமிழர்கள் ஒரு முறையாவது இவர் கடைக்கு செல்ல வேண்டும். இவரை போன்ற உணர்வாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

3 comments:

  1. tamilamma pathipagam yenga eruku address anupunga

    ReplyDelete
    Replies
    1. In arumbakkam near 100ft road . from coimbate to vadapalani road . from cmbt bustand signal take straight and second singalan right there is a small street from left side you can find the shop

      Delete
    2. In arumbakkam near 100ft road . from coimbate to vadapalani road . from cmbt bustand signal take straight and second singalan right there is a small street from left side you can find the shop

      Delete