nimalaruban kanner anjali


வவுனியாச் சிறைச்சாலைச் சம்பவத்தின் பின்னர் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டதும், அதில் அடிகாயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட க. நிமலரூபன், ராகம வைத்தியசாலையில் மரணமான செய்தி கேட்டு தமிழினமே அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தது.

மீண்டும் 1983 இல், யூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவுகளும், இனவெறித்தாக்குதல் காட்சிகளும் கண்முன்னே வந்துபோனது.

ஏதோ ஒரு வகையில் சிறையிலாவது தமது மகன் உயிருடன் உள்ளார் என்ற சிறிய நம்பிக்கையில் இருந்த பெற்றோருக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில், பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியமும் உணர்வுபூர்வமாக பங்கு கொள்கிறது.

நிமலரூபனின் பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர் மற்றும் சமூக நண்பர்களின் கரங்களை இறுகப் பற்றி எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே வேளை அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கிறோம்.

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

No comments:

Post a Comment