sanchi nayagan vaiko


சாஞ்சி சென்று திரும்பும் தலைவர் வைகோவை வரவேற்க
கழகக்கொடி ஏந்தி அணிவகுத்து வாரீர்!

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாஞ்சியில், சிங்கள அதிபர் இராஜபக்சேவுக்கு எதிரான கருப்புக்கொடி அறப்போராட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி, சென்னை அண்ணா சதுக்த்திலிருந்து 21 பேருந்துகளில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், ஆயிரக்கணக்கான கழகத் தோழர்கள் புறப்பட்டுச் சென்றனர். செப்டம்பர 19 ஆம் தேதி அன்று மாலை 4 மணி அளவில் மத்தியப் பிரதேச மாநில எல்லையில், வைகோ தலைமையில் சென்ற அனைவரும் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மத்தியப் பிதேச மாநிலம், விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சாஞ்சியில் நடைபெற்று முடிந்த புத்தமத கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற் வந்த சிங்கள அதிபர் இராஜபக்சே, இலட்சக் கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்து, மனித சமுதயாத்தின் குற்றச்சாட்ட
ிற்கு ஆளானவர்.
எனவே சாஞ்சியில் அறப்போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என்று, சாலை ஓரத்திலே கடந்த 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி காலை 11 மணி வரை, அமைதியான வழியில், ஜனநாயக முறையில் அறப்போராட்டத்தில் வைகோ தலைமையில் ஆயிக்கணக்கானோர் ஈடுபட்டனர்.
கடுமையான வெயிலையும் கொட்டும் பணியையும் பொருட்படுத்தாது, இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, சாலை ஓரத்திலே உண்டு, உறங்கி 21 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தடையை மீறி கைதாகி, மாலையில் விடுதலை செய்யப்பட்டு, தற்போது சென்னையை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். தலைவர் வைகோவும் பேருந்திலேயே தனது சகாக்களுடன் பயணித்து வருகின்றார்.
அறவழியில், அமைதியான வழியில், தமிழ் சமுதாயமே பெருமைப் படும் வகையில் மாற்றார், காண்போர் பாராட்டும் வகையில், தமிழ் நாட்டு எல்லையைத் தாண்டி இப்படி ஒரு மாபெரும் போராட்டம் நடைபெற்றுள்ளது என்ற பெருமையோடு திரும்பி வருகின்றார்கள்.
தமிழகத்திலும் உணர்வலைகள் ஓயவில்லை. இராஜபக்சேவுக்கு எதிர்ப்பே கிடையாது என்ற செய்தியை முறியடித்து, இன்னல்களைப் பொருட்படுத்தாது, இன்முகத்தோடு தமிழகம் திரும்பி வரும் தமிழினத் தலைவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா சதுக்கத்திற்கு 23 ஆம் தேதி காலை 7 மணி அளவில் வந்து, அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தகிறார்.
போராட்டக் களத்திற்கு சென்று வெற்றியோடு திரும்பும் தலைவர் வைகோவையும், அவரது சகாக்களையும் வரவேற்க செப்டம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை 7 மணி அளவில் அண்ணா சதுக்கத்தை நோக்கி கழகக் கொடி ஏந்தி அணி அணியாகத் திரண்டு வர அன்புடன் வேண்டுகிறேன்.





‘தாயகம்’ சீமா பஷீர்
சென்னை - 8 அமைப்பு செயலாளர்,
22.09.2012 மறுமலர்ச்சி தி.மு.க

No comments:

Post a Comment