balachandran prabhakaran
வீழ்ந்து கிடந்தாலும் உன் விழிகளின் வழியே
ஆவணப்படங்களை உருவாக்கி இருக்கிறாய்,
மாய்ந்து கிடந்தாலும் உலகின் மனசாட்சியை
உலுக்கி உலுக்கி ஓலமிட வைத்திருக்கிறாய்...
என்றெல்லாம் எழுதி கிழித்து நிமிர்கையில்
ரொட்டித் துண்டுகளை கையில் ஏந்தியபடி
அப்பா என்றழைக்கிறாள் அன்புக் குழந்தை....
மொழியும், கவிதைகளும் அழிந்து ஐயகோ
காலத்தின் இறுகிய வெளியெங்கும் பரவிக்
கொடுந்தீயாய் வழிகிறது இனத்தின் ஓலம்...
மலத்தில் நெளியும் புழுவாய், மரணத்தின்
பிச்சையாய் ஒடுங்கி உள்வாங்குகிறது உயிர்.
மன்னித்து விடு மகனே, நாங்கள் உனைக்
கொன்றவனை விடவும் கொடும்பாவிகள்....
ஆவணப்படங்களை உருவாக்கி இருக்கிறாய்,
மாய்ந்து கிடந்தாலும் உலகின் மனசாட்சியை
உலுக்கி உலுக்கி ஓலமிட வைத்திருக்கிறாய்...
என்றெல்லாம் எழுதி கிழித்து நிமிர்கையில்
ரொட்டித் துண்டுகளை கையில் ஏந்தியபடி
அப்பா என்றழைக்கிறாள் அன்புக் குழந்தை....
மொழியும், கவிதைகளும் அழிந்து ஐயகோ
காலத்தின் இறுகிய வெளியெங்கும் பரவிக்
கொடுந்தீயாய் வழிகிறது இனத்தின் ஓலம்...
மலத்தில் நெளியும் புழுவாய், மரணத்தின்
பிச்சையாய் ஒடுங்கி உள்வாங்குகிறது உயிர்.
மன்னித்து விடு மகனே, நாங்கள் உனைக்
கொன்றவனை விடவும் கொடும்பாவிகள்....
Arivazhagan Kaivalyam
Subscribe to:
Posts (Atom)