தமிழீழ மருத்துவமனை

தமிழீழத்தில் புலிகளால் நடத்தப்பட்ட மருத்துவமனைகளில் இரண்டு புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும்.அதில் ஆண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களும் பெண் குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் பெயர்கள் சூட்டப்பட்ட குழந்தைகளுக்கு புலிகளின் நிதி செயலகத்தின் மூலம் இலங்கை பணம் ரூபாய் 5000 வைப்பு நிதியாக செலுத்தப்பட்டு அதற்கான பத்திரம் வழங்கப்படும்.அந்த குழந்தைகளின் 18 ஆவது வயதில் கிடைக்குமாறு அந்த தொகை முதலீடு செய்யப்பட்டிருக்கும்.

தமிழகத்தில் தமிழில் பெயர் சூட்டப்படும் படங்களுக்கு தமிழக அரசு நிதிசலுகை செய்கிறது.ஆனால் இந்த சலுகையை பெறும் படங்களில் பெயரை தவிர வேறு எதிலும் தமிழ் இருப்பது இல்லை.இப்படி தேவை இல்லாமல் மக்களின் வரிபணத்தை வீணாக்காமல்.தமிழீழத்தை பின்பற்றி தமிழக அரசு தமிழில் பெயர் சூட்டும் குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கலாமே.

dont fly in sri lankan airlines


ஸ்ரீலங்கா பொருட்களை வாங்குவதை நிறுத்துவோம் ஸ்ரீலங்கா விமானத்தில் பயனிக்க மாட்டேன் என சபதம் ஏற்போம்..
நாம் வாங்கும் ஒவ்வொரு ஸ்ரீலங்கா பொருட்களும் ஒருவகையில் எம் மக்களை சிங்கள காடையர்கள் கொல்வதற்கு நாம் கொடுக்கும் ஆதரவு தான் என்பதை உணருவோம்..










"SAVE TAMILS" இயக்க தோழர்களால் டிசம்பர் 19 -ஆம் தேதி சென்னையில் நடத்தப் பட்ட இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் பிரசாரம்.

protest against sri lanka government

ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள்..









தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்...

Ellalan

எல்லாளன் - தமிழீழ விடுதலை போராட்டத்தின் வரலாற்று பதிவு.முழுமையான,கற்பனை கலப்பில்லாத வரலாற்றுத் திரைப்படம். உலகிலேயே ஒரு விடுதலை போராட்டத்தை நடத்துபவர்களே.. தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தாங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம்.











save tamils organization protest

"SAVE TAMILS" இயக்க தோழர்களால் டிசம்பர் 19 -ஆம் தேதி சென்னையில் நடத்தப் பட்ட இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு ஆதரவு கோரும் பிரசாரம்.









தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்.

sivaraj thiruvannamalai,angels raja junior nammalvar

சிவராஜ் திருவண்ணாமலை, எங்கெல்ஸ் ராஜா..

agaraathi madurai,agaraadhi

அகராதி மதுரை..

போராடிகொண்டு இருப்பது ஒன்று தான் இந்த சமுதாயத்தில் நேர்மையாக வாழ்வதற்கான வழி..


இளம் சமுதயத்தின் எழுச்சியே உண்மையான எழுச்சி..

prabhakaran

இந்த பதாகையை அடித்த சகோதரர்கள் தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும் என்று அடிப்பதற்கு பதிலாக தமிழன் வெல்வான் தமிழினம் மலரும் என அச்சடித்துள்ளார்கள்..

ஒருவேளை இந்த தமிழன் வென்றால்தான் தமிழினமே மலரும் என்று தெரிந்து தான் அவ்வாறு அச்சடித்தார்களோ என்னவோ..


தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்

politicians human rights activists killed by sri lanka

ஈழத்திற்க்கு ஆதரவான போராட்டங்கள்..







தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்...

indian poor family



விவசாயிகள் உற்ப‌த்தி செய்த‌ பொருட்க‌ளை அந்த‌ நாட்டின் அர‌சு தான் கொள்முத‌ல் செய்ய‌ வேண்டும்,விநியோகிக்கவேண்டும். விலைவாசியை குறைப்பதற்கும்,விவசா‌ய‌ உற்ப‌த்தியை பெருக்குவ‌தற்குமான‌‌ வ‌ழிமுறைக‌ளை அந்த‌ அரசு தான் திட்டமிட‌ வேண்டும். ஆனால் இந்த‌ வெத்து வேட்டு இந்திய‌ அரசு, தனது கடமையை க‌மிச‌ன் ம‌ண்டிக்கார‌ர்களும்,த‌ர‌கு முத‌லாளிகளும் தாரைவார்த்து விட்டது ,

ந‌ம் நாட்டில் ம‌க்க‌ள் உண்ண உணவில்லாமல் சாகும் போது,சோயாவையும்,பாமாயிலை‌யும் இன்ன‌ பிற‌ உண‌வுப்பொருட்க‌ளையும் உயிரி எரிபொருள் [BIO FUEL] என்ற வக்கிரமான திட்ட‌த்திற்காக‌ குறைந்த‌ விலையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றும‌தி செய்கிற‌து .

ம‌ற்ற‌ நாடுக‌ளிலிருந்து அதே உணவுப்பொருட்களை அதிக விலை கொடுத்து இறக்குமதியும் செய்கிறது

இந்த‌ போலி ஜ‌ன‌நாயக அடிமை அர‌சும், அத‌ன் மாமாக்களையும் ஒழித்துக்கட்டும்‌ வ‌ரை விலைவாசி குறைவதைப் கனவில் காணலாம் !

WORLD TAMIL CONFERENCE

புது எழுச்​சி​யோடு பிர​பா​க​ரன் மீண்​டும் வரு​வார்.​ முன்​னை​விட அதி​நுட்​ப​மாக ஈழப் போரை அவர் வழி​ந​டத்​து​வார் - தமி​ழீழ குடி​ய​ரசு ஒன்றே இறுதி இலக்கு: வைகோ


"சுதந்​திர இறை​யாண்மை உள்ள சம​தர்ம தமி​ழீழ குடி​ய​ரசு ஒன்றே ​ஈழத் தமி​ழர்​க​ளுக்​கான இறுதி இலக்​காக இருக்க வேண்​டும்.​ அதி​லி​ருந்து வில​கி​வி​டக் கூடாது' என்று வலி​யு​றுத்​தி​னார் மதி​முக பொதுச் செய​லர் வைகோ.​

தஞ்​சா​வூ​ரில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் 7-வது ஆண்டு நிறைவு விழா மற்​றும் ஈழத் தமி​ழர் வாழ்​வு​ரி​மைக்​கான உல​கத் தமி​ழர் மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்​சி​யின் இறு​தி​யாக ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற பொது அரங்​கில் மேலும் அவர் பேசி​யது:​

விடு​த​லைக்​கான போர் தோற்​ற​தாக உல​கச் சரித்​தி​ரம் இல்லை.​ ஈழப் போரில் தற்​போது ஏற்​பட்​டுள்​ளது சிறு பின்​ன​டை​வு​தான்.​ தமி​ழர்​க​ளின் வர​லாற்​றில் துன்​ப​மும்,​​ துய​ர​மும்,​​ அழி​வும் முற்​று​கை​யிட்​டுள்ள கால​மிது.​

இந்த மாநாட்​டில் கலந்து கொள்ள வந்த இலங்கை எம்.பி.​ சிவாஜி​லிங்​கத்​துக்கு அனு​மதி மறுத்து,​​ அவரை திருப்பி அனுப்​பி​விட்​ட​னர்.​ ஆனால்,​​ லட்​சக்​க​ணக்​கான அப்​பாவி ஈழத் தமி​ழர்​க​ளைக் கொன்று குவித்து மாபெ​ரும் இனப் படு​கொலை நிகழ்த்​திய ராஜ​பக்ஷ,​​ திருப்​ப​திக்கு வந்து சாமி தரி​ச​னம் செய்ய இந்​திய அரசு அனு​மதி அளித்​தது.​

இலங்​கை​யில் தமி​ழர்​க​ளுக்கு நேர்ந்த கொடு​மையை போல வேறு எந்த இனத்​த​வ​ருக்​கும் நேர்ந்​த​தில்லை.​ இந்​தத் தமி​ழி​னப் படு​கொ​லைக்கு இந்​திய அரசு துணை நின்​றது.​ திமுக அரசு வேடிக்கை பார்த்​தது.​

சுதந்​திர இறை​யாண்மை உள்ள,​​ மதச்​சார்ப்​பற்ற தனி ஈழ தேசம் வேண்​டும் என்று 1976-ம் ஆண்டு,​​ வட்​டுக்​கோட்​டை​யில் செல்வா தலை​மை​யில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.​ இந்​தத் தீர்​மா​னத்தை நிறை​வேற்​று​வ​தையே நமது இறுதி இலக்​கா​கக் கொள்ள வேண்​டும்.​ இந்​தத் தீர்​மா​னத்​துக்கு நார்வே,​​ கனடா நாடு​க​ளில் உள்ள ஈழத் தமி​ழர்​கள் வாக்​கெ​டுப்பு நடத்தி பெருத்த ஆத​ரவு அளித்​த​னர்.​ எனவே,​​ இந்த வாக்​கெ​டுப்​பின் நோக்​கத்தை நிறை​வேற்ற இலங்​கை​யி​டம் ஐ.நா.​ சபை வலி​யு​றுத்த வேண்​டும்.





"Ulaga Thamizhar Manadu" held in Thanjavur on 26 & 27 December. The conference was presided by Iyya Nedumaran, Vaiko of MDMK, Nallkannu & Tha.Pandiyan of Communist party, Dr.M Natarajan,P Maniyarasan of Thamizh Desiya Pothudamai party,Vaithiyalingam of BJP & Poet Kasi Ananthan.
Sivajilingam MP, who the main guest was denied entry and he was sent back from the airport.


ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் - உலகத்தமிழர் மாநாட்டில் பழ.நொடுமாறன்

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் என்று உலகத்தமிழர் மாநாட்டில் பழநொடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழகம் தஞ்சாவூரில் தமிழ் வாழ்வுரிமைக்காக நடத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டின் நிறைவு நாளில் சிறப்புரை ஆற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.


இம்மாநாட்டில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன் அவர்கள் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்தஅநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிவந்துள்ளார்கள். இந்தபோராட்டத்தில் பலஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பன்நாடுகளில் வாழ்கின்றார்கள்.


ஆனால் தமிழர் வாழ் மண்ணில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அதிகளாக்கப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஸ்ரீலங்காஅரசின் இறுதிக்கட்ட போரின் போது வன்னி மண் பிணக்காடாக காணப்பட்டது. பலஆயிரக்கணக்கான மக்கள் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகளும் பெற்றோர்களும் வெவ்வேறு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். ஸ்ரீலங்காப் படையினரின் இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


இவை அனைத்து பன்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படவேண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு மீது இவ்விவகாரம் தொடர்பில் பன்நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அனைத்து உரிமைகளுகம் வழங்கப்படவேண்டும்.


தற்போது வாழும் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து ஐக்கியநாடுகள் அமைப்பினையும் பன்நாடுகளையும் வற்புறுத்தி செயற்படவைக்கவேண்டும் என்றும் தெரிவித்த அவர், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையினை மீட்க பன்நாட்டு தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறான செயல் மூலமே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை உணரவேண்டும்.


பன்நாடுகளில் உள்ள ஜனநாயக சக்த்திகள் சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அனைவரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும் பன்நாட்டு தமிழர்கள் அனைவரும் அவரவர் நாடுகளில் உள்ள மக்களையும் அரசுகளையும் வலியுறுத்தி ஈழத்தமிழர் பிரச்சனையினை தீர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றவேணடும் என்று உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் கருத்துரைத்தார்.

pashilan missile

பசிலன் கணை..





தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

thesathin puyalgal 2005

கலைஞர்கள் கவுரவிப்பு விழா...






ananda vikatan prabhakaran 25


தலைவர் பிரபாகரன்

விகடன் இந்த வாரம் வெளியிட்டிருக்கும் பிரபாகரன்-25 குறிப்புகள், நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும். இந்த விஷயங்கள் அனைத்துமே, தமிழர்கள் பெரும்பாலானோருக்குத் தெரிந்த உண்மைகள்தான்.

ஆனாலும், மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும்.

தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…


தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். ”போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, ”எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, ”யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”

”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!

ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். ”தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!

தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், ”நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!

மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர் பிரபாகரன்!

jayasurya dilshan in kolkata night club

முன்னே புட்டி பின்னே குட்டி இது தான் எங்கள் வாழ்க்கை...





கொல்கொத்தா இரவு விடுதிகளில் ஜெயசுரியா தில்சன் மற்றும் பலர் சேர்ந்து ஆடிய அதிரடி ஆட்டங்கள்..


Bank of Tamil Eelam


தமிழீழ வைப்பகம்..

தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

tamilnadu separation bala cartoons

தமிழ்நாட்டை பிரித்து தர வேண்டும் பாலா கார்டூன்கள்..




MGR,M.G.Ramachandran avargalukku veera vanakkam thiruparankundram naam tamilar


எம் ஜி ஆர் அவர்களுக்கு வீரவணக்கம்..


தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

puthandu valthukkal,happy new year vaalthukkal

ஆங்கில புத்தாண்டு கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

ulagam ullavarai unakku vayathu puthuvai ratnadurai

உலகம் உள்ளவரை உனக்கு வயது - புதுவை ரத்தினதுரை..



தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..



tsunami 5th anniversary 2009,sunami ninaivu anjali


சுனாமியால் உயிரிழந்த மக்களுக்கு 5ஆம் அண்டு நினைவு நாள் கண்ணீர் அஞ்சலி..



தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

tamil properties are in sri lanka government

சிங்கள ஆட்சியில் எம் மக்களின் பொருட்களை பாருங்கள்..



எம் அண்ணனின் ஆட்சிக்கும் சிங்களர்களின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள் உறவுகளே..

tamil people are in sri lanka govt

சிங்கள காடையர்களின் ஆட்சியில் எம் மக்கள் படும் துன்பங்களை பாருங்கள்..
உலக சமுதாயத்திற்கு ஆயுதங்கள் கொடுத்து எம் மக்களை கொல்ல சொல்ல மட்டும் தான் தெரியுமோ..



எம் அண்ணனின் ஆட்சிக்கும் சிங்களர்களின் ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள் உறவுகளே..

pulamaipithan Agni Subramaniam released tamilina padukolaigal book

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய ஆவணநூல் சென்னையில் வெளியீடு

சிறிலங்கா அரச பயங்கரவாதத்தினை உலகுக்கு எடுத்துரைக்கும் தமிழ் இனப் படுகொலைகள் பற்றிய விபரம் அடங்கிய ஆவணப் புத்தகத்தின் வெளியீடு இன்று (24-12-09) மாலை சென்னையில் வெளியிடப்பட்டது.




1956 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறிலங்கா அரசால் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளின் விபரங்கள் அடங்கிய ‘தமிழினப் படுகொலைகள் : 1956 - 2008’ என்ற தலைப்பில் புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

சென்னை நகரின் மத்தியில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் தமிழக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிப்பிக்கப்பட்ட இரு புத்தகங்களும் வெளிடப்பட்டன. சென்னையைச் சேர்ந்த 'மனிதம் அமைப்பு' புத்தகத்தை பதிப்பித்திருந்தது.


கிளிநொச்சியில் இருந்து செயற்பட்ட வடக்கு-கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தினால் சேகரிக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களே தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளன.

புத்தக வெளியீட்டு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற சட்டவாளர் அமைப்பின் தலைவர் பால் கனகராஜ், பி.யூ.சி.எல். மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சட்டவாளர் திருமதி சுதா ராமலிங்கம், ‘தி வீக்’ ஆங்கில வார ஏட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் திருமதி கவிதா முரளிதரன், ஓவியர் புகழேந்தி, ஈழ ஆர்வலர்கள் ஜனார்த்தனன், கிருபானந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.


“இந்தப் புத்தகத்தில் 150 படுகொலைகள் பற்றிய விபரங்கள் இருக்கின்றன. அவற்றில் நான்கைந்தைப் படித்தாலேயே ஈழத்தில் இளைஞர்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு கதைகளும் எமது இரத்தத்தைக் கொதிக்கச் செய்யும் ஆத்திரமுறச் செய்யும். அந்தளவிற்கு அங்கு அரச பயங்கரவாதம் நிகழ்ந்துள்ளது” எனத் தெரிவித்தார் ‘மனிதம்’ மனித உரிமைகள் அமைப்பின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம்.

ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய புத்தகம் இது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இந்த நூல் வெளியிடப்பட்டாலும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் ஒவ்வொன்றும் அந்தந்த மொழிகளில் தனித் தனியாக எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்ப் புத்தகத்தில் அதிகளவான விபரங்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளதாக அக்னி சுப்ரமணியம் தெரிவித்தார்.

விரைவில் ஜெர்மன், பிரெஞ், இத்தாலி, டச் ஆகிய மொழிகளில் இந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.











தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..