மே18 தமிழர்களின் கருப்பு நாள்
ஈழத்து அகதியாய்...
எதுவுமே
தெரியவில்லை நண்பனே
கனவிலும் கேட்க்கும்
உறவுகள் ஓப்பாரி
குருதி அறியா
என் குழந்தைகள்
குருதியாய்
அழுது அழுது
காய்ந்த விழிகள்
குதறிக் கிளிபடும்
என்சகோதரி உடல்கள்
சர்வதேசமே காப்பாற்று
கடைசி நிமிடம்வரை
கதறிய குரல்கள்
நந்திக்கடல் சாட்சியாக
தீயுள் மண்ணுள்
புதைக்கப்பட்டதை
எரிக்கப்பட்டதை
பாராமல் இருந்த
கொடிய மனிதர்களை
முடியவில்லை நண்பனே
ஓடிவிழையாடி
இயற்க்கையைத் தின்று
நேரங்கள் மறந்து
குலாவித்திரிந்ததும்
என் அன்னையின்
உடல் சங்கமமானதும்
வன்னிமண்ணில்
யாரும் நினைத்திரா
பொழுதொன்றில்
அன்னியர் புகுந்து
கால் பதித்ததில்
அமைதி அழிந்து
குருதி ஓடுகிறது
பாடித்திரிந்த பறவைகளும்
கனவுகள் வளர்த்த
இழயவர்களும்
கூச்சல்போட்ட சிறுவர்களும்
குலாவித்திரிந்த பெண்களும்
கூடிப்பேசிய வயதினரும்
காணாமல்போயினர்
அள்ளி அள்ளி
வழங்கிய மக்கள்
கை ஏந்தித்
தவிப்பதை
முடியவில்லை நண்பனே
புதைகுழிகள் இப்போ
நவீனமாகி
தடயங்கள் அழிக்கும்
எரிகூடங்களாகிறது
கருகிய மனிதர்கள்
கடலில் கரைகிறார்
காற்றில் இப்போ
நறுமணம் இல்லை
கடல் இப்போ
நீலமும் இல்லை
வானத்தில் இப்போ
வர்ணங்கள் இல்லை
முடியவில்லை நண்பனே
எதுவும்
இன்று என்னிடம்
எஞ்சியிருப்பது
ஈழத்து அகதியின்
வலிகள் மட்டுமே.
மீள் பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
Very Nice. Kavethai
ReplyDeletemeendum namadhu thambi varuvar nanba kathiru
ReplyDeleteஎன் தமிழ் உறவுகளே!
ReplyDeleteஇந்தக்கொடுமைகளுக்கு நீதி எப்போது?
மண்ணில் விதைந்த நமது செல்வங்களுக்கு
நாம் என்ன செய்யப்போகிறோம்?
Sudar oli Neenka enna seiythinka
ReplyDelete