
படை தலைவன் வருவான்!!
குருதித் துளிகள்
அணி வகுக்கும்
அன்னியனுக்கெதிராய்.
பகைவனே - உன்
பஞ்சணையின்கீழ்
எம்மின பிஞ்சுக்
குழந்தைகளின் சதைகள்
புதைக்கப்பட்டிருக்கிறது.
எமது மாவீரர்
எலும்புகளால்
பூட்டப்பட்ட
உம் கட்டிலின்
கால்களுக்கு
இறுதிக் கதை
எழுதப்படும்.
புரிந்துக்கொள்!
விம்மி அழுத
எம் குலப்பெண்களின்
அழுகைச் சத்தம்
உம் அழிவுக்கு
விடுத்த எச்சரிக்கை.
களமாடிய
எம் தீப்பந்தங்களின்
நெருப்புத் துளி
உன்னை எரிக்கும் காலம்
நெருங்குகிறது.
அடங்க மறுக்கும்
புலிகளின் கூட்டம்
உம்மை எதிர்க்கத்தான்
விரும்புகிறது.
இரவை விழுங்கும்
பகலைப் போல
எம் பகையை விழுங்கும்
தலைவர் படை.
புதைத்த இடத்தில்
துளிர்விடுவோம்.
நாங்கள்
இருளை கிழித்து
ஒளி விடுவோம்.
அடக்குமுறைக்கா
பயப்படுவோம்?
அடடா... எழு
நாம் புறப்படுவோம்.
வலியும், அழுகையும்
நமக்கு தவம்.
விடுதலையும்
மகிழ்ச்சியும்
அதன் வரம்.
விடுதலை
கரு சுமந்த
தாயாய்
எம் தலைவன்,
எம் இனத்தின்
வலி சுமந்தான்.
காலங்களின் வரிசையில்
அவன் நிகர் ஒப்பார் யார்?
நம்மை, நமக்கு
அடையாளம் காட்டியவன்.
நமக்கு விடுதலையை
பாலாய் ஊட்டியவன்.
அச்சத்தை வீழ்த்தி,
அரணாய் நின்றவன்.
அரக்கர் படைக்கு
எமனாய் ஆனவன்.
மிச்சமாய் ஒரு தமிழன்
இருக்கும் வரை
நிச்சயமாய் எமது போர்
தொடரும்.
பகைவனுக்கு மொழி
பெயர்த்துச் சொல்லுங்கள்.
எம் படை தலைவன்
வருவான் என்ற சேதியை...!!
உருவாக்கம் : கண்மணி
மீள் பதிவு: கரும்புலிகள் உயிராயுதம்
No comments:
Post a Comment