Rani Velu Nachiyar,ராணி வேலுநாச்சியார்


தமிழர்களுக்கு பெருமை சேர்த்த வீரமங்கை வேலுநாச்சியார்

the robot, endhiran, poster, cutout,palabishegam


குடிக்க பாலின்றி
குமறிக் கொண்டிருக்கிறது
குழந்தை...!

பாலாபிசேகம் செய்து
கொண்டிருக்கிறான்
தலைவனின் கட்டவுட்டுக்கு
தகப்பன்...!

By ஜெகதீஸ்வரன்

Tamilar kalam,Tamilar nadu,Tamizhar peruvizha,Karur





தமிழர் களம் நடத்தும் தமிழர் பெருவிழா, கரூர்..

genocide sri lanka and fake ambassadors









பல தூதர்கள் சென்றார்கள்..
தமிழர் துயரங்களை துடைப்பதற்கு அல்ல..
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதை உலகுக்கு பறைசாற்றவும்..
ராஜபக்சேவுடன் ஜோக் அடித்து மகிழவும்..
பசில் பக்சேவை "கிங்" என சொல்லவும்..
மற்றும் உல்லாச சுற்றுலாவுக்காகவும்்..

tamilar kalam cartoon about eelam issue

அனைத்தையும் வாங்கிதருகிறேன் கருணா..




கருணா மக்களைப் பார்த்து: அனைத்து உரிமைகளையும் வாங்கி தருகிறேன்..
ராஜபக்சே கருணாநிதி மற்றும் மன்மோகனை பார்த்து: ஏற்க்கனவே பேச்சு வார்த்தைக்கு வரும் எம்.பி மற்றும் தூதுவர்களுக்கு வழக்கம் போல் வெய்ட்டான் பரிசு பொருட்களை வாங்கி வைத்து விட்டேன் வந்தால் வாங்கி செல்வதுதான் பாக்கி..

இத்தாலி, தியாகதீபம் திலீபன், கேணல் சங்கர் நினைவு நாள் - 2010



இத்தாலி பலெர்மேவில் தியாகதீபம் திலீபன் அவர்களின் 23ம் ஆண்டு வணக்கநிகழ்வும், கேணல் சங்கர் அவர்களின் 9ம் ஆண்டு வணக்கநிகழ்வும் 26.09.2010 ஞாயிற்றுக்கிழமை தமிழர் ஒருங்கிணைய்புக்குழு பணிமனையில் இரவு 9 மணிக்கு நடைபெற்றுது.

உணர்வு பூர்வமான மக்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தி அஞ்சலித்தனர்.

Malethi,Victor,Santhosam,along all the freedom stars & lights of Oct.month



♥ ஒக்டோபர் மாதத்தில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு ♥

Be who you are and say what you feel because those who mind don't matter and those who matter don't mind

Kumarappa| Pulenthiran| Malethi| Victor| Santhosam| along all the freedom stars & lights of Oct.month

♥ மாண்டவர் எல்லோரும் மலரட்டும் பூக்களாய் ♥
♥ அஞ்சலிக்க மலர் கொண்டு வாருங்கள் ♥
5:30PM SUNDAY 03.09.10MERTON HALL78 KINGSTON ROADSW19 1LA

the ayodhya verdict,theerpu,bala cartoon

அயோத்தி தீர்ப்பு பாலா கார்ட்டூன்

டெல்லி காமன்வெல்த் பிபிசி புகைப்படங்கள்,CWG,BBC photos,

சில கருங்காலிகளால் கப்பலேற்றப்படும் காந்தி தேசத்து மானம்..



















தேசத்தின் மானத்தில் கூட ஊழல் செய்ய மனம் வரும் சிலரின் நிலையை என்னவென்று சொல்வது..

உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவிற்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவு ஒரு சிலரின் சுயநலத்தினால் நிகழ்ந்தது என்றால் அது மிகையல்ல..

பிபிசி இணையத்தில் 23-9-2010 அன்று வந்த படங்கள்

vote for madurai narayanan krishnan,AKSHAYA TRUST

தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன் கிருஷ்ணன்

http://heroes.cnn.com/vote.aspx





ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரை யைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3 வேளை உணவளித்து வருகிறார்.

இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது போட்டிக்கு இவரை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சி.

பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார். அதேபோல நாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார். இந்த காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின் லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது அல்லவா?.

இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன். நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்தில் செஃப் ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன். ஆனால் சமுதாயத்தால் கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய் திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும் பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும் தானே உணவு தயார் செய்து அவர்களது பசியை போக்கி வருகிறார். தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு அளித்து வருகிறார்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப் வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில். இதற்கான நேர்முகத் தேர்வுக்காக சுவிஸ் சென்றார். பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை திரும்பினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி நிறுத்திப் போட்டது. சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.

இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க முடிவு செய்தேன்.

முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த பணி.

பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல் வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன்.

நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக் கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட வைக்கின்றனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப் பெறுகின்றனராம்.

இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக் கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும் கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.

அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும் தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன்.
பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில் அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும் பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக விநியோகித்துள்ளாராம் நாராயணன்.

நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக் கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன். நான் சமைப்பதை விட அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில் பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார் கண்களில் நீர் துளிர்க்க.

உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள் வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம் சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.

இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று வாக்களிக்கலாம்.
http://heroes.cnn.com/vote.aspx

yalpanam fort,யாழ்ப்பானம் கோட்டை, தமிழர் தேசம்



நிலை மாறும் தமிழன் வெல்வான் தமிழீழம் மலரும்..

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்..

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்..
இந்திய மக்களின் வரிப்பணத்தை ஒரு சிலர் கொள்ளையடிக்க உதவும் ஒரு தளமாக உள்ளது என்றால் அது மிகையல்ல..

கிடங்குகளில் வீணாய் போகும் உணவு தானியங்களை ஏழை மக்களுக்கு கொடுக்க மனம் இல்லாத இந்திய அரசு,
இந்திய மக்களின் வரிபணத்தில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டு வரி விலக்குகளைப் பெற்றுக்கொண்டு இந்திய மக்களை அயல்நாட்டவன் (hooper) அவமானப்படுத்தி பேசிய நிகழ்வுகளை அனுமதிப்பதையெல்லாம் பார்க்கும் போது இது தேவையற்ற ஒன்றோ என்று எண்ணத் தோன்றுகிறது.










Pic:NDTV

tamilaga arasiyal vaathigal,viyaparigal,viyaathigal











கடவுள் ஏன் கல்லானான்.. கல்லாய் போன தமிழ்நாட்டு தமிழர்களின் இன உணர்வைப் பார்த்து..
ஈழ தமிழர்களின் துயரங்களை வைத்து அரசியல் நடத்த தெரிந்த சில தமிழ்நாட்டு அரசியல்வா(வியா)திகளுக்கு அவர்களை காக்க வேண்டும் என்பது உணர்வு பூர்வமாக இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை..

agrinaigal,Aavanapadam,kurumpadam

அஃறிணைகள்...? குறும்படம்


கண்ணியமாய் வாழப் போராடிக் கொண்டிருக்கும் இரு திருநங்கைகளின் உண்மைக்கதை..

அஃறிணைகள்.....? ஆவணப்படம் பார்த்த பிறகு அதன் இயக்குனரும் சகோதரருமான இளங்கோவன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் நண்பர் ஒருவர் எழுதிய கடிதம்.

மனதை தொட்டதை முதலில் சொல்லிவிட்டு ஆரம்பிப்பது முறை ...
அற்புதமான பதிவு...
இது ஆவண படம் என்ற உணர்வு எங்கேயும் எனக்கு எழவில்லை ....உங்கள் மூலம் எனக்கு இரண்டு தோழிகள் கிடைத்திருப்பது குறித்து மிக்க மகிழ்கிறேன்...
ஸ்மைலி மற்றும் க்ளாடிக்கு என் அன்பு உரித்தாகட்டும் ..
ஆவண படத்தை கதை வடிவில் சொல்லியிருப்பது நேர்த்தியாக இருக்கிறது அண்ணா...
தங்களின் நேர்மையான படைப்புக்கு தலைவணங்குகிறேன்.....
தயாரிப்பாளர் அவர்களுக்கு என் அன்பை சொல்லவும் .

kovai k.selvaraj congress,vilamparam,tamilnadu congress koshti


pic: dinamalar

தமிழ்நாடு காங்கிரஸ் ஒரு கோஸ்டியினரை மற்றொரு கோஸ்டியினர் காரிதுப்பி வரவேற்ற நிகழ்வு..

துரோகத்தின் மறுஉருவமே..அசிங்கத்தின் அவதாரமே என போஸ்டர் அடித்து காரி துப்பினார்களாம்..

அவர் மட்டுமா அப்படி..?

jayavardhana eela oppantham, madan cartoon



ஈழப் பிரச்சணைக் குறித்தும் ஜெயவர்த்தனாவின் ஈழ ஒப்பந்தம் குறித்தும் மதன் அவர்கள் அன்று வரைந்த கருத்துப்படம்..

jaffna hindu college, JHC, ஈழம் யாழ்ப்பானம் இந்துக் கல்லூரி..


தமிழன் வெல்வான்.. தமிழீழம் மலரும்..

mupperum vizha,DMK

குஷ்பு,ஸ்டாலின்,கனிமொழி,ஹார்லிக்ஸ்.


தி.மு.க முப்பெரும் விழா, சுவற்றில் ஒட்டப்பட்டு இருக்கும் கார்ட்டூன்..
எப்படியெல்லாம் ஓ(ஒ)ட்டுராங்க..

kutty puli,r.jenith,ambattur,thiruvallur,naam thamilar



ராஜா ராஜா சோழன் கொடுத்தாண்ட புலிக்கொடி .
தொடுத்தான் என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை.
என் அண்ணன் மறுபடியும் வருவான்ரா
தமிழ் ஈழம் வென்று தருவான்ரா
தளராதே தமிழா தளராதே...

தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா .
முப்படையும் வரும் மும் முனையிலும் மோதும் .
பண்டாரவன்னியன் ஆண்டவன்னி மண்ணடா.
என் அண்ணன் ஈழமண்ணில் எதிரிகள் யாவரையும் விடப்போவதில்லை .
எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா வன்னிமண்ணிலே.
தளராதே தமிழா தளராதே...
நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா.
அண்ணன் விடப் போவதில்லையடா .
இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா .
அண்ணன் படை விரட்டுமடா .
இங்கு தமிழன் ஆளுவானடா .
தளராதே தமிழா தளராதே..

அண்ணன் சொல்லில் அண்ணன் படை தமிழீழம் படைக்குமடா
காலம் வரும் நல்ல நேரம் வரும் .
கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் படை பாயும் .
எதிரி கண்ணில் ஈழமண்ணை துவுமாடா .
தளராதே தமிழா தளராதே .

அண்ணன் படை தமிழீழம் வென்று தரும்.
மகிந்தாவின் மானம் தெருவெங்கும் நாய் இழுக்கும் .
தமிழனின் வீரம் புலிக்கொடியாய் வானில் பறக்குமடா .
சோனியாவின் துண்டு சாணியாக மாறும் .
தளராதே தமிழா அண்ணனின் கையில் இன்னும் வீரமுண்டு .
தளராதே தமிழா தளராதே தமிழா தளராதே தமிழா.. -தமிழன் சிவா

ullasa azhagigal,kuthattam,vilai magal,night club parties,namal



உல்லாச அழகிகளுடன் நாமல் ராஜபக்சே போடும் குத்தாட்டங்கள்..
அமெரிக்க சென்றுள்ள ராஜபக்சேவின் மகன் நாமல் அங்கும் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இவரது தம்பி யசந்தாவும் இதே போல் பலருடனும் உல்லாசமாக இருக்கும் படங்களை காண இங்கு கிளிக் செய்யவும்..

தமிழ் மொழி கொலைகாரர்கள்..



தமிழ் கொலைகாரர்கள்..
தூய தமிழ் என்றால் கண்ணை முடிக்கொண்டு அது ஈழத்தமிழ் தான் என்று சொல்லலாம் அதை மாற்ற வேண்டும் என்று சிங்களவர்களால் முனைப்புடன் எழுதப்பட்ட வரிகள்..
மக்களை கொன்றவனின் அடுத்த இலக்கு மொழி தானோ..

demolished by sinhala kaadayargal











சிங்கள காடையர்களால் சிதைக்கப்பட்ட தமிழர் பகுதிகள் கிளிநொச்சி தமிழீழம்.

தீயாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன்


உறவுகளே,
தீயாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அண்ணாவுக்கு உங்களின் இறுதி வீரவணக்கத்தினை இங்கே செல்லுத்திச் செல்லுங்கள்.......

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
உன் இறுதிப்பார்வையை பகையைவெல்லும் உன் துணிவை
எவருமே காணாத உன்னிரு துளி கண்ணீரை
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
தப்பியோடும் உன்விருப்பை தனித்து நிற்கும் தீர்மானத்தை
உன்தோழன் இருகூறாய் துண்டாடப்பட்டதனால்
உன் துன்பம் என்னவென்று நான் அறிந்து கொள்வதற்கு...

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உன் வீட்டு முகவரியை இறுதி மூச்சில் எனக்குத் தா
எஞ்சிய வீடுகளில் பிழைத்தவர்கள் மத்தியிலே
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
உற்றாரைக் கண்டுபிடித்து உன்னைப் பற்றிச் சொல்வதற்கு
இன்னுயிரை உவந்தளித்த உன் துணிவைப் போற்றுதற்கு
வார்த்தைகள் போதவில்லை வரலாறு பாடுமுன்னே.

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா

ஓ மரனித்த வீரனே!
உன் சீருடைகளை எனக்குத்தா
உன் பாதனிகளை எனக்குத்தா
உன் ஆயுதங்களை எனக்குத்தா..

(பாடல் நிறைவு)

ஐந்து அம்சக் கோரிக்கை

1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்''

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

சாவு தின்னுதே
சாவு தின்னுதே
தங்க மேனியை
சாவு தின்னுதே

வந்து பாரடா
வந்து பாரடா
நொந்த மேனியை
வந்து பாரடா.

குரல் எடுத்ததோர் குயில் படுத்தது
குமுறி நின்றதோர் புயல் பட்டுத்தது
தரமறுத்திடும் உரிமை பெற்றிட
தன் வயிற்றிலே போர் தொடுத்தது

அரிசி கொண்டொரு படகு வந்தது
அடுத்தது ஒரு செஞ்சிலுவை வந்ததது
வரிசை வரிசையாய் கவச வாகனம்
வந்து வாய்க்கரிசி போட்டு நின்றுது..!!

- திலீபன் நினைவாக கவிஞர் புதுவை இரத்தினதுரை வரைந்தது. நினைவில் நின்ற வரிகள் மட்டுமே இங்கே. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

வெல்வோம் தமிழீழத்தை அது அமையட்டும் தலைவரின் காலத்தில்

புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

பதிவு: புதிதாய் பிறப்போம்
நன்றி தமிழரசி