ratha sarithiram,ரத்த சரித்திரம்,boycott vivek oberoi


ரத்த சரித்திரம், எம் மக்கள் தினம் தினம் பார்த்து வரும் அன்றாட வாழ்க்கை..
இதை தியட்டருக்கு போய் பார்த்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமா?..







ரத்த சரித்திரம் தமிழர்களின் வாழ்க்கையோடு தொடர்ந்து வரும் ஒரு பெயர்..
எம் ஈழத்து சகோதரனின் அன்றாட வாழ்க்கை..
அதைப்போல் அதில் நடிக்கும் நடிகர் மதிப்பு மிகு ராஜபக்சேவின் விருந்தாளி விவேக் ஓபராய் என்பதும் ஒரு வகையில் மற்றுமொரு தொடர்பினை ஏற்படுத்துவதை போலவே தோன்றுவது இயல்புதான்..

ஆம்,இந்த விவேக் ஓபாரய் தான் இலங்கையில் ராஜபக்சேவின் இனபடுகொலை மறைப்புக்கு பிராண்ட் அம்பாசிட்டர்..
அவர் மகன்களின் ** நண்பர், என்பது தமிழர்கள் அனைவரும் அறிந்த உண்மையே..
(**=நல்ல)
இன்னும் குறிப்பிட்டு சொல்லப்போனால் தமிழர் இனப்படுகொலைகளை மறைப்பதில் ராஜபக்சேவின் ஏஜண்ட் போல செயல்பட்டு வருபவர் என்று சொன்னால் அது மிகையாகாது..

அப்படிப்பட்ட இந்த விவேக் ஒபாராயின் படங்களை புறக்கணிப்போம்..
அந்த வகையில் ரத்த சரித்திரத்தையும் புறக்கணிப்போம்..

ஆனால் எம் தமிழர்களின் உண்மை இரத்த சரித்திரத்தை யாரலும் புறக்கணிக்கவோ மறைக்கவோ முடியாது..

No comments:

Post a Comment