maaveerar naal 2010 tanjore

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டதில் நடைபெற்ற 2010 மாவீரர் தின வீரவணக்க நிகழ்வுகளின் ஒரு பகுதி



கார்த்திகை பூக்கள்
.
அழகான கார்த்திகை பூக்கள்
பறிக்கப்படுகின்றன.
பறிக்கபட்ட பூக்களுக்காக
......
இத்தனை வண்ண மொட்டுக்கள்
விளைந்துகிடக்கின்றன.
பறிக்கப்படுவதற்காய்

இந்த பிஞ்சு விதைகள்
புதைந்துகிடக்கின்றன
விருட்சத்திற்காய்

இன்னும் அமைதியாய்
இரவுகள் காத்திருக்கிடக்கின்றன
விடியலுக்காய்

உன் உணர்வுகள்
உதிரமாய் போகின்றன..
காயங்கள் ஆவனமாகின்றன

அந்த வதைகள்
வரலாறாகின்றன
மனிதசோகம் மலராகின்றன

வலிகளை மறக்க
பாதச்சுவடுகளை
உறவுகள் தேடுகின்றன

இரவில் கனவில்
பகலில் நிழலில்
பச்சையாய் தெரிவது

பசும்புல் இல்லையே
உரமாய்போன உன்
உறவுகள் அல்லவா

காலம் அவனைபோல் ஓடுகின்றன
நீயும் ஓடுகிறாய் உன்னை துரத்துவது
அழகான கார்த்திகை பூக்கள்

காலம் உனக்காக காத்திருக்காது
உன் காலத்திற்காய் காத்திரு
அது உனக்காக வட்டமிடும் அந்தநாள்......?

நேசவன் தவக்குமார்

1 comment:

LinkWithin

Related Posts with Thumbnails