
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 24 வது ஆண்டின் நினைவு வணக்க நிகழ்வும், அடையாள உண்ணாவிரதமும்
05 09 2011
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 24 வது ஆண்டினை முன்னிட்டு நினைவு வணக்க நிகழ்வும், அடையாள உண்ணாவிரதமும் பிரித்தானியாவில் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள சிவயோகம் மண்டபத்தில் எதிர்வரும் 26-09-2011 திங்கட்கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை நடைபெறவுள்ளது.
பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் தாயகத்து உறவுகளின் இன்றைய அவல வாழ்வை நீக்கும் பொருட்டு சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அடையாள உண்ணாவிரதம் நடாத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் அடையாள உண்ணா நிலைப் போராட்டம் ஒருபுறம் நடக்கும் அதே வேளை பாடசாலைப் பிள்ளைகளின் ஆக்கங்களான கவிதைகள், பேச்சுக்கள், எழுச்சிப் பாடல்கள், எழுச்சி நடனங்கள் போன்றனவும் இடம்பெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் சிறார்கள் மற்றும் ஆர்வமுள்ளோர் 19-09-2011 செவ்வாய்க்கிழமைக்கு முன்பதாக britishtamilsunion@gmail.com எனும் மின்னஞ்சலூடாக அல்லது 07877204123 / 07400219654 எனும் கைத்தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்புகொண்டு எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment