maaveerar naal 2011,belgium




தமிழீழ மண்ணில் சிங்களப்பேரினவாதத்தால் அழித்தொழிக்கப்பட்ட மாவீரர்துயிலுமில்லங்களை புலம்பெயர் நாடுகளில் மீள நிறுவும் பணி, பரவலாக மேற்கொள்ளப்படுகின்றது. அந்த வகையில், பெல்ஜியம் அன்ர்வேர்பேன் நகரத்தில் தமிழர் பண்பாட்டு கழகத்தின் செயற்பாட்டினால் நிறுவப்படவிருக்கும் மாவீரர் துயிலுமில்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடை பெற்றது

maaveerar naal 2011, germany dortmund






தமிழினத்தின் விடுதலை ஒன்றையே மூச்சாக்கி ஒப்பற்ற தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் "தேசத்தின் சொத்து" மேதகு வே.பிரபாகரன் வழிகாட்டுதலில் தாயகத்தை ஆக்கிரமித்து நின்ற சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை கொன்று வீழ்த்தி வீரச்சாவடைந்த மானமறவர்களான மாவீரர்களை போற்றி வணங்கி நிற்கும் நிகழ்வு யேர்மனியில் டோர்ட்முன்ட் நகரில் ஒழுங்குபடுத்தப்பட்ட இடத்தில் எழுச்சியுடன் மாவீரர்தின நிகழ்வுகள் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் தமது உறவுகளிற்கு அஞ்சலி செலுத்துவதற்கு ஒன்று கூடியுள்ளனர்.

maaveerar naal 2011,swiss



மாவீரம் என்பது தமிழீழ விடுதலையின் ஆணிவேர். ஆனால் இன்று எம் ஆணிவேர்களின் துயிலுமில்லங்கள் இனவாத சிங்கள அரசினாலும் அவர்களின் அடிவருடிகளினாலும் சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்டமை நாம் அனைவரும் அறிந்து உண்மை.

சிங்கள அரசின் எத்தகைய ஈனச்செயல்களாலும் ஈழத்தமிழினம் அடிபணிந்து அடிமைகளாய் வாழமாட்டோம் என்பதை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையினரால் 27.11.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 9.15 மணியளவில் சுவிஸ் நாட்டின் வோ மாநில இவர்டோன் நகரில் தாயக விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்கள் மாமனிதர்கள் நாட்டுப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரினதும் நினைவு தாங்கிய நினைவுக்கல் திறந்துவைக்கப்பட்டது.

maaveerar naal 2011,tamilar panpattu naduvam,facebook friends,chennai,south india



27 11 2011 சென்னையில் தமிழர் பண்பாட்டு நடுவம், தமிழர் முன்னேற்ற கழகம் மற்றும் முகநூல் நண்பர்கள் ஏற்பாடு செய்த மாவீரர் நாள் நிகழ்வு எளிமையான முறையில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி நடைபெற்றது .

சென்னையில் பல இடங்களில் தமிழக அரசு தீவிர கண்காணிப்பில் பல மாவீரர் நகழ்ச்சியை ரத்து செய்தது இருந்தும் சில இடங்ககளில் உள் அரங்கங்களில் மாவீரர் நாள் தமிழ் உணர்வாளர் களினால் உணர்வோடு அனுசரிக்கப்பட்டது .

மாவீரர் கையேட்டில் கொடுத்துள்ளபடி அகவணக்கம் மலர் வணக்கம் உறுதி மொழி மற்றும் வீரவணக்க உரைகள் நடத்தப்பட்டது. கலந்து கொண்ட தோழர்களுக்கு நம் வாழ்த்துக்கள்.

maaveerar naal 2011,Trichy, Tiruchirapalli,tamilnadu




மாவீரர் தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி மாவட்டத்தில் ஈழ விடுதலை ஆதரவு கட்சிகளான புதிய தமிழகம் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் பாசறை, பெரியார் தத்துவ மையம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை இணைந்து, திருச்சி மாநகரில் அஞ்சலி செலுத்துவதற்காக 5 இடங்களுக்கு மேல் 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர்.

ஆனால், சம்மந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது என்றும், மாவட்ட காவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டனர். மாநகர காவல்துறை ஆணையரோ மேலிடத்தில் இருந்து ஈழ சம்மந்தமான பிரபாகரன் படங்களை வைக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளதால், அனுமதி கொடுக்க முடியாது என மறுத்ததோடு, மாநகர துணை காவல்துறை ஆணையரை பாருங்கள் என்று கூறியதும், அவரை சந்தித்தால், நாட்களை கடத்தி குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாள் அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டார் என்று ஈழ ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்சி ரயில்வே ஜென்ஷன் அருகே உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தின் உள்ளே மாவீரர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட பேனர் பெரியதாக இருந்ததால், அலுவலகத்தின் உள்ளே எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகையால் அலுவலகத்தின் வெளியே பேனரை வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது வந்த காவல்துறையினர் அலுவலக வாசலில் பேனர் வைத்திருப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று 30 பேரை கைது செய்தனர்.

புறநகர் மற்றும் மாநகர புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர்கள் ஐயப்பன் மற்றும் சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்நாடன் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

maaveerar naal 2011,chennai koyambedu,tamilnadu, india



விடுதலை களத்தில் இன்னுயிர் நீத்த போராளிகளின் நினைவு நாளான 27.11.2011 அன்று சென்னை கோயம்பேடு அருகே வீரநங்கை செங்கொடி அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாவீரர் நாள் நடைபெற்றது.

maaveerar naal 2011,cuddalore subbaraya chettiar mahal,tamilnadu



கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முதலில் இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. பின்னர் பல நிபந்தனைகளுடன் அனுமதி கொடுத்தது.

பேராசிரியர் தீரன் பேசுகையில், பால் விலை, பேருந்து கட்டணம் உயர்ந்துவிட்டது. நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சனைகள் இருக்கிறது. முதல் அமைச்சர் அவர்கள் நிர்வாகத்தை பாருங்கள். நிர்வாகத்தை பார்க்காமல் நாங்கள் என்ன செய்கிறோம். எங்களுக்கு தடை விதிப்பது, போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். உங்களுடைய பணிகளை மக்களுக்காக பிரச்சனை பாருங்கள் என்றார்.

சீமான் பேசுகையில், சீமான் ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவான். பிரபாகரன் படம் இருக்கும் சட்டையுடன்போவேன். சட்டயை கழட்டச் சொன்னால் சட்டையை கழட்டுவேன். உள்ளே உடம்பில் பச்சை குத்தியிருப்பேன். அப்ப வெளியே போகச் சொல்ல முடியுமா? என்றார்.

maaveerar naal 2011,பிரான்ஸ் ஒபேவில்லியஸ்



பிரான்ஸ் ஒபேவில்லியஸில் இடம்பெற்ற மாவீர் நாள் நிகழ்வு!

பிரான்ஸ் ஒபேவில்லியஸ் பகுதியில் லெப்.கேணல் நாதன், கப்படன் கஜன் ஆகிய மாவீரர்களின் கல்லறைகள் அமைந்துள்ள பகுதியில் மாவீரர் தினத்தின் ஆரம்ப நிகழ்வுகள் இன்று சிறப்பாக இடம்பெற்றன.

அங்கு விசேடமாக அமைக்கப்பட்டிருந்த மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக சுடர் ஏற்றப்பட்டது.

மாவீரர்களின் கல்லறைகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது

maaveerar naal 2011,yalpanam,tamil eelam



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழீழ மண்ணுக்கும், மக்களுமாக உயிர்நீத்த மாவீரர்களுக்கு மாணவர்கள் தமது அஞ்சலிகளை எணர்வெழுச்சியுடன் செலுத்தியுள்ளனர்.

maaveerar naal 2011,pudukkottai thoppukkollai,tamilnadu


தமிழ்நாடு இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம்
28 11 2011
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொள்ளை இலங்கை தமிழர் முகாமில் மாவீரர் தினம் மெழுகுவர்த்தி ஏந்தி கொண்டாடப்பட்டது. அகல் விளக்கு ஏற்றி சுமார் 500க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.

maaveerar naal 2011,periyar thidal ariyankuppam Pondicherry













மாவீரர் வீரவணக்க நாள்,
தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் ஈந்த புலி மாவீரர்களுக்கு வீரவணக்க நாள் புதுச்சேரி அரியாங்குப்பம் பெரியார் திடலில் 27.11.2011 அன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாலை 06.11 மணிக்கு நடைபெற்றது.
வீரவணக்க நாள் புதுவை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் லோகு.அய்யப்பன் சுடர் ஏற்றித் துவக்கிவைத்தார். இந்நிகழ்விற்குப் பெருந்திரளாக பெண்கள், சிறுவர்கள் மற்றும் ஆண்கள் என ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வீரவணக்க முழக்கமிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தினர்.
தமிழ் உணர்வாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வீரவணக்கம் செலுத்தியது பொதுமக்களிடையே மற்றுமல்லாது புதுச்சேரி காவல்துறையினரின் கவனத்தை ஈர்த்தது. அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தியது ஈழ விடுதலைக்கான வித்து முளைத்து தமிழ் நாட்டில் மரமாகிக்கொண்டிருப்பதைக் காட்டியது.
வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்ட தோழமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள்: மக்கள் சனசக்தி தோழர். புரட்சிவேந்தன், கிராமப்புற சுற்றுச்சூழல் இயக்கம் தோழர் சந்திரசேகர், புரட்சியாளர் அம்பேத்கர் மக்கள் படை தோழர். சி.மூர்த்தி, மதிமுக தோழர். செல்வராசு. மாணவர் கல்வி அறக்கட்டளை தோழர். வேல்முருகன், பியுசிஎல் தோழர் அபிமன்னன், தமிழினத் தொண்டியக்கம் தோழர் அரிமாப்பாண்டியன், எழுத்தாழர் சங்கம் தோழர். சீனு தமிழ்நெஞ்சன், செந்தமிழர் இயக்கம் தோழர் ந.மு. தமிழ்மணி, புரட்சிப் பாவலர் இலக்கியப்பாசறை தோழர் தமிழ்ச்செல்வன், மற்றும் பெரியார் திக செயலாளர் தோழர் விசயசங்கர் , அமைப்பாளர் தோழர் தந்தை பிரியன், துணைத்தலைவர் தோழர். வீராசாமி, தோழர்கள்: ராசேந்திரன், சார்லஸ், ரவிச்சந்திரன், இளங்கோ, எத்திராஜ்.

வீரவணக்க நிகழ்ச்சி இரவு பத்துமணிவரை நடைபெற்றது.

jayalalithavin thuglak tharbar



மாவீரர்நாள் நிகழ்வுக்கு அனுமதி கொடுத்துவிட்டு கூட்டம் நடக்கும் சில மணி நேரங்களுக்கு முன் நிகழ்வு ஏற்பாடுகளை செய்த மதிமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் உட்பட நூற்றுக்கணக்கானோரை கைது செய்து நிகழ்ச்சியை முடக்கிப்போட்டது ஜெயலலிதா-வின் அடக்குமுறை ஆட்சி.. இலட்சக்கணக்கில் பணம் செலவழித்து ஏறக்குறைய பணிகள் நிறைவடையும் நேரத்தில் இந்த அராஜக செயலை செய்திருக்கிறார்கள்..