prabhakaran tamilar yeluchi in vadivam



பழ.நெடுமாறன் அவர்கள் எழுதிய “பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்” நூலின் வெளியீட்டு விழா சென்னை தியாகராயாநகர் தியாகராயார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய அய்யா பழ.நெடுமாறன் அவர்கள் தனக்கும் சகோதரர் வைகோ, கொளத்தூர் மணி ஆகிய தங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த பல இரகசியங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளதை தெரிவித்துள்ளார்.
நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் தொகுப்புரையினை முனைவர் த.செயராமன் நிகழ்த்த வரவேற்புரையினை செ.ப.முத்தமிழ் மணி நிகழ்த்தினார் தொடர்ந்து தலைமையுரையினை உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் நிகழ்த்தினார். பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் நூலினை ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுவைக்க வருகை தந்த தமிழ் உணர்வாளர்கள் பிரதிகளை பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்வில் தொடர்ந்து கருத்துரையினை தமிழ்தேசியக்கட்சி செயலாளர் கணக்காயர் மு.பாலசுப்பிரமணியம், மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலன் ,உலகத்தமிழர் பேரமைப்பு பொருளாளர் சா.சந்திரசேகரன் ஆகியோர் நிகழ்த்த வாழ்த்துரையினை திருச்சி கே. சௌந்தரராசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் நல்லக்கண்ணு, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த்தேச பொதுவுடைமைக்கட்சித் தலைவர் பெ.மணியரசன், ஆகியோர் நிகழ்த்தினார்கள், நிகழ்வில் சிறப்புரையினை வைகோ நிகழ்த்தினார். ஏற்புரையினை நூலாசிரியர் பழநொடுமாறன் அவர்கள் நிகழ்த்தினார்.
தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், தன் கைப்பட எட்டப்பன் கருணாநிதியை பற்றி நெடுமாறன் ஐயாவிற்கு எழுதிய கடிதம். ((நூல் :- பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் ஆசிரியர் : பழ . நெடுமாறன்) பக்- 113 23-7--97 தமிழீழம் அன்பிற்கும் மதிப்பிற்குரிய அண்ணாவிற்கு நான் நலமாயுள்ளேன்.அது போல் நீங்களும் நலமேயிருக்க தமிழ் அன்னையை வேண்டுகிறேன். இப்போது இங்கு மருந்து போருட்கலுக்குத்தான் தட்டுப்பாடு அண்ணா அரும் பெரும் சேவியர் மூலம் ஒழுங்கு செய்த மருந்து பொருட்கள எமக்கு கிடைத்தன .நான் அதற்குரிய ஒரு நன்றி கடிதம் அவருக்கு கொடுத்துள்ளேன் அண்ணா. அதை நீங்களே அவரிடம் நேரில் கொடுத்து விடுங்கள்.மருந்து பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு 50 லட்சம் வரையிலான பணம் தமிழ் நாட்டு போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளது .எமக்கு இங்கு இருக்கும் எவ்வளவோ பண கஷ்டத்தின் மத்தியிலும் மருந்து பொருட்கள் வாங்க அனுப்பிய பணம் தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞ்சர் ஆட்சியிலேயே பறிக்கப் படுவதுதான் வேதனையை தருகிறது .ஆனாலும் உங்கள் உதவி எமக்கு ஒரு நம்பிக்கையையும் ஆறுதலையும் தருகிறது .எங்களுக்கு இப்போதைக்கு தேவையானது மருந்து பொருட்கள் தான் தொடர்ந்தும் இது போல மருந்து பொருட்கள கிடைக்க உதவி செய்யுங்கள் அண்ணா இங்கு எமது போராட்டத்திற்கு உதவியாக இருக்கும் அண்ணா இப்படிக்கு வே .பிரபாகரன்

No comments:

Post a Comment