thenmerku paruvakatru seenu ramasamy
தமிழ்நாட்டு உறவுகள்
சிறந்த திரைப்படத்திற்கு கிடைத்த இந்திய தேசிய விருதை தேசத்தாய் பார்வதியம்மாவிற்கு சமர்பித்தார் இயக்குநர் சீனுராமசாமி.
கடந்த ஆண்டு வெளியான படங்களில் சிறந்த தமிழ்ப்படமாக தென்மேற்கு பருவக் காற்று திரைப்படம் தேசிய விருதிற்கு தெரிவாகியுள்ளது.இந்திய தேசிய விருது கிடைத்ததையடுத்து கருத்துத் தெரிவித்த அதன் இயக்குநர் சீனுராமசாமி தமிழர்களின் வாழ்வுக்கு கிடைத்த விருதெனக் குறிப்பிட்டார்.
அத்துடன் இவ் உயரிய விருதை என் அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதி அம்மாளுக்கும் சமர்பணம் என தெரிவித்துள்ளார்.
இந்தியளவில் தயாராகி வெளிவரும் திரைப்படங்களில் சிறந்தவற்றை தெரிவு செய்து அதனடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படுகின்றன. இந்திய அரசின் மத்தரிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திரைப்பட விழாக்கள் இயக்குநகரம் சார்பில் இந்த விருதுகள் ஒவ்வோராண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு கடந்த ஆண்டு தாயராகி வெளிவந்த படங்களின் அடிப்படையில் விருதுகளிற்கு தெரிவானவர்களது விபரம் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் மொழியில் வெளிவந்த படங்களில் சிறந்த படமாக இயக்குநர் சீனுராமசாமி இயக்கிய தென் மேற்கு பருவக்காற்று திரைப்படம் தெரிவாகியுள்ளது.
நிலம் கைவிட்ட மனிதர்களின் வாழ்க்கையினை மையமாக கொண்டு தமிழர்களின் வாழ்க்கையினை அப்படியே பதிவு செய்தமைக்காக இந்த விருது கிடைத்துள்ளதாக தெரிவித்த இயக்குநர் சீனுராமசாமி இந்த விருதினை எனது அம்மாவிற்கும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பார்வதியம்மாளுக்கும் சமர்ப்பிக்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த படத்தை உருவாக்கியதற்காக இந்திய அளவில் அவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதையும் விட உயர்வான எண்ணத்தை கொண்டுள்ள சீனுராமசாமியை உலகத்தமிழர்கள் வாழ்த்தி வணங்க வேண்டும்.
விருதுகள் பெறவேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு படைப்பாளிக்கும் இருப்பது இயல்பு. அதுதான் அவர்களது சிறந்த படைப்பிற்கு வழங்கும் அதியுச்ச களரவமாக இருக்க முடியும்.
அந்தவகையில் இந்தியளவில் கிடைக்கப்பெற்ற தேசிய விருதை அதுவும் இந்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட விருதை உலகத்தமிழர்களால் தேசத்தாய் என போற்றப்படும் பார்வதியம்மாளிற்கு சமர்ப்பணம் செய்து உண்மையான தமிழனாக உயர்ந்து நிற்கின்றார் இயக்குநர் சீனுராமச்சந்திரன் அவர்கள்.
விருதுகள் கிடைத்ததும் பலர் தமது திறமையின்பாற் தற்பெருமைகொண்டு அந்த மயக்கத்தில் மிதப்பதையே விரும்புவார்கள். ஆனால் விருதுகளைவிட உணர்வுதான் முதன்மையானது என சிலர்தான் வெளிப்படுத்தி வருகின்றனர்.
உலகளாவிய உயரிய விருதான ஒஸ்கார் விருதை பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலகின் சிறந்த படைப்பாளிகள் சூழ்ந்து நின்ற அந்த மேடையில் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று தனது தாய் மொழியாம் நம் தமிழ் மொழியில் தெரிவித்து தமிழ் மொழிமீதான பற்றுதலையும் பாசத்தையும் எவ்வித பாசாங்குத்தனமும் இல்லாது வெளிப்படுத்தியிருந்தார்.
அதே போன்று கடந்த ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டடிருந்த உயரிய விருதை முள்ளிவாய்க்காலில் எமது இனம் செத்துக் கொண்டிருக்கையில் இந்த விருது வேண்டாம் எனக் கூறி திருப்பியனுப்பி தமிழனின் தன்மானத்தை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குநர் இமையம் பாரதிராசா அவர்கள்.
பின்னாட்களின் கருணாநிதியின் சாணக்கியத்தனத்தில் தனது தன்மானத்தை மனதுக்குள் மோதவிட்டு இன்றுவரை செயலற்று இருப்பது துரதிஸ்ரமாகும். அதுசரி கருணாநிதியின் சாணக்கியத்தனம் எல்லாம் தமிழர்களிடத்தும் தமிழ்மொழியிடத்தும் தானே செல்லுபடியாகும். அதற்கான பலனைத்தானே இப்போது ஆர அமர இருந்து மீளமுடியதா மனவேதனையுடன் அனுபவித்து வருகின்றார்.
ஆறுதல் தேடி தமிழகம் வந்தபோது நயவஞ்சகத் தனத்தால் விமான நிலையத்தில் வைத்தே பல மணிநேரம் காத்திருக்க வைத்து எமது தேசத்தாய் பார்வதியம்மாளை தள்ளாத வயதிலும் திருப்பியனுப்பியிருந்தது தமிழினத்தை அழித்தொழித்த சோனியா கருணாநிதி கும்பல்.
இன்று சோனியா கருணாநிதி கும்பலால் வஞ்சிக்கப்பட்ட தேசத்தாய்க்கு இந்திய அரசு வழங்கிய விருதையே சம்ர்ப்பணம் செய்து உண்மைத் தமிழ்மகனாக உயர்ந்து நிற்கின்றார் இயக்குநர் சீனுராமசாமி அவர்கள்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் உலக மேடையில் தாய் மொழியில் முழங்கியதைப் போன்று இயக்குநர் சீனுராமசாமி அவர்கள் தேசியவிருதை பெறும்போது அந்த மேடையில் வைத்து தேசத்தாய் பார்வதியம்மாளிற்கு இவ்விருதை சமர்ப்பிக்கின்றேன் என கூற வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.
தேசத்தாய் பார்வதியம்மாளிற்கு தனது விருதை சம்ர்பணமாக்கி உண்மைத் தமிழனாக உயர்ந்து நிற்கும் இயக்குநர் சீனுராமசாமியை உலகத் தமிழர்களாகிய நாமும் வாழ்த்துவோம்.
இதே போன்று ஈழத்தமிழ் எழுத்தாளரான வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களிற்கும் சிறந்த வில்லன் நடிகருக்கான தேசியவிருது கிடைத்துள்ளது. ஆடுகளம் என்ற திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஈழத்தமிழர் வ.ஐ.செ.ஜெயபாலன் அவர்களிற்கு இந்த விருது சிறப்புப் பரிசாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment