கல்லறையில் கருத்துரிமை
’தமிழக மீனவர்கள் சிங்களப்படையால் தாக்கப்பட்டால் ஒரு சிங்களன் இனி தமிழ்நாட்டில் உயிருடன் நடமாட முடியாது’,இந்திய அமைதிப்படை ஈழத்தில் எம் மக்களை துன்புறுத்தியது’ என்ற எழுச்சி உரையினை அடிப்படையாக வைத்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து தமிழக அரசு வேலூர் சிறைச்சாலையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் சீமானின் விடுதலையை வலியுறுத்தி ஒரு நூல் பரபரப்பாக வெளிவந்துள்ளது.இதில் தமிழ்நாட்டில் இதுகாறும் வரை கருத்துரிமை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை விரிவாக விளக்கும் கட்டுரைகளும்,சீமானின் கைது சட்ட ரீதியாகவும் நியாயப்படியும் தவறு என நிரூபிக்கும் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும் சீமான் தமிழக அரசால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் கைது செய்யப்படுவதற்கு காரணமான பேச்சு,மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி முன்பு இந்திய அமைதிப்படை குறித்து சட்டமன்றத்தில் எழுப்பிய கடுமையான விமர்சனங்களின் தொகுப்பு ஆகிய அனைத்தும் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.ரூ.50 விலையுள்ள சமூக விழிப்புணர்வு பதிப்பகத்தின் இந்த நூல் தமிழ்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக விழிப்புணர்வு பதிப்பகம்.,68,எல்டாம்ஸ் சாலை,தேனாம்பேட்டை
This comment has been removed by a blog administrator.
ReplyDelete