



கனடா,யோர்க் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாம் எமது புதிய 2010 – 2011 வருடத்திற்க்கான அங்கத்துவ அட்டையானது, எமது தாய் நாடான தமிழீழத்தின் கொடியை ஒருபுறமும், அதன் தேசியச் சின்னமான கார்த்திகைப்பூ மற்றும் எமது மாணவர் அமைப்பின் சின்னத்தை மறுபுறமும் கொண்டுள்ளது
அத்துடன், எமது மொழி, தொடரும் விடுதலை வரலாறு மற்றும் இன அடையாளங்களை முன்நிறுத்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ மண்ணுக்காய், நாம் விரைவில் விடுதலை கண்டு, எமது தாய் நாட்டில் வாழ வேண்டும் என்ற கனவுடன் தமது உயிர் நீத்த வீர வேங்கைகளை நினைவுபடுத்தும் கார்த்திகைப்பூ, மற்றும் தமிழீழத்தின் அழகையும் அதன் தனித்துவத்தை குறித்து நிற்கும் தமிழரின் தேசியக் கொடியாம் தமிழீழக் கொடி போன்றவை இவ் அங்கத்துவ அட்டையில் கொளவிக்கப்பட்டுள்ளன.
இன்றைய நாளில் கொடிய இலங்கை அரசானது தனது தொடர் இன மற்றும் கலாச்சார படுகொலைகளை ஈழத் தமிழர்மீது ஏவிவிட்டுள்ளது.
இவ் இலங்கை அரசு இது மட்டுமல்லாது, இழிவுத்தனமான செயல்களான, மாவீர துயிலும் இல்லங்களை சிதைத்தல் மற்றும் தமிழர் வாழ்வாதாரங்களை திட்டமிட்ட முறையில் அழித்தல் ஆகியவற்றை நடாத்தி, தமிழர்களை அடிமைவாழ்க்கைக்கு உள்ளாக்கியுள்ளது.
இவ்வேளையில் யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவராகிய நாம், எமது அடையாளங்களை பாதுகாப்பதன் மூலமே எமது இனத்தின், அதன் பழமை வாய்ந்த வரலாற்றின், மற்றும் தொடரும் ஈழம் நோக்கிய் போராட்டத்தின் உத்வேகத்தை பாதுகாக்கலாம் என்று திடமாக நம்பி இவ் அங்கத்துவ அட்டையை வெளியிட்டுள்ளோம்.
No comments:
Post a Comment