
தமிழர்களின் ஒளிவிளக்கு எமது தலைவரின் அன்னை இயற்கை எய்தி உள்ளார். சுமார் 20 மாதங்களாக அலைக்கழிக்கப்பட ஒரு பரிசுத்தமானவரின் உயிர் துடிப்பு நின்று விட்டது. தனது மகனின் தலைமையில் ஈழ அரசாங்கம் அமைந்து விட்டது என்று எண்ணி தமிழகத்தில் இருந்து 2002 இல் ஈழம் வந்தனர். தனது மகனின் தலைமையில் உலகுக்கே முன்மாதிரியான அரசாங்கம் ஈழத்தில் நடைபெறுவதை கண்டு பூரிப்படைந்தனர். குறிப்பாக திரு.வேலுப்பிள்ளை தனது மகனின் பணிகளை கண்டு பூரித்தே போனார். யுத்தம் வந்தது, இயக்கம் சொன்னது இந்தியாவுக்கு புலம் பெயருங்கள் என்று, மறுத்தனர் நாங்கள் கடைசி வரை தம்பி கூடவே இருக்க விரும்புவதாக கூறினர். கிளிநொச்சி வீழ்ந்தது, புலிப்படை தம்பிகள் இருவரையும் தோள்களில் தூக்கிகொண்டு ஒவ்வொரு இடமாக சென்றனர். இறுதியில் தேசிய தலைவரின் எண்ணப்படியே சரண் அடைய வைக்கப்பட்டனர். சிங்கள காடையர்களின் அரசு அவர்களை கொடிய வெலிக்கடை சிறையில் அடைத்தது, சித்திரவதை செய்தது. அசரவில்லையே, ஒரு வார்த்தை சொல்லவில்லையே. திரு. வேலுப்பிள்ளை மாவீரர் ஆனது தெரியாமலேயே சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் பார்வதி அம்மா, துரோகிகளால் அலைக்கழிக்கப்பட்டார். இன்று காலை நம்மை விட்டு பிரிந்தார். தமிழர்களே அழாதீர்கள், உணர்ச்சி பெறுங்கள். பார்வதி அம்மாவின் நெஞ்சுறுதியை பெறுவோம்.
எங்கள் போராட்டம் ஓயாது
எங்கள் லட்சியம் தோற்காது
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரனே எங்கள் தலைவர்
.
No comments:
Post a Comment