கணவன் இறந்திட்டால் என்ன
என் மகன் இருக்கிறான்.
அழைத்துச்செல்லுங்கள் அவனை
போர்முனை நோக்கி..
என்றபோது
...புன்முகம் மாறாது
புறப்பட்ட மகனையும்
இன்முகம் மாறாது
அனுப்பிய தாயையும்
புறநானூற்றில் கண்டேன்.
—–000—–
நின் புதல்வனை
தமிழ் காக்க அனுப்பி
தமிழன் மானம் காக்க
வளர்த்து
ஈழம் முழுக்க
வீரம் விளைய
தேசியத் தலைவனாய்
புறமுதுகு காட்டாத
புறநானூற்று வீரத்தை
பார் போற்ற-உம்மால்
இந்நூற்றாண்டில்
கண்டேன்!
தமிழுக்கு தலைவனை தந்தவளே…எம் தாயே …இன்று உம் உயிர் பிரிந்திருக்கலாம்..
இத்தரணி உள்ளவரை,தமிழது உள்ளவரை,உம் நினைவுகள் மறையாது..நிறைந்திருக்கும்
எங்கள் நெஞ்சங்களில்!!
No comments:
Post a Comment