


தோழர் புதுக்கோட்டை முத்துக்குமார் கொல்லப்பட்டார். காரைக்குடியில் சிதம்பரம் தோற்க்கடிக்கப்பட்ட பரப்புரைக்கு துணை நின்றவர், இடம், பொருள், உணவு,உதவிகள் அனைத்தும் செய்த அற்புதமான தோழர். நல்ல நண்பர். ஒரு வருடத்திற்கு முன்பு தான் அவர் திருமணம் நடந்தது. நீண்டகால போராட்டத்திற்கு பிறகு இல்லவால்க்கைக்கு வந்தவர். சிறந்த சமரசமில்லா தமிழ்தேசியவாதி.
’நாம் தமிழர் கட்சி’ முத்துக்குமார் வெட்டிக்கொலை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார். இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர். இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின்
மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார். சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.
கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும், சீமானுக்கு பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.இந்த நிலையில் இன்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
சீமான் அவர்களே உங்களுக்கு என்னுடைய பகிரங்க கேள்வி புதுக்கோட்டை வடகாடு முத்துக்குமாரின் கொலைக்கு நீ என்ன செய்தாய்? உங்கள் கட்சியில் இருந்த அவர், உங்களை வைத்து பல கூட்டங்களை துடிப்புடன் செய்த அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். அவசர அவசரமாக புதைத்துவிட்டு வந்ததன் மர்மம் என்ன?..பல ஊர்களில் இருந்து உணர்வாளர்கள் வந்துகொண்டிருக்க இங்கு யாரும் வரவேண்டாம் எனவும், எல்லாம் திரும்பி போய்விடுங்கள் என்றும் அலைபேசியில் கூறியதன் உள்நோக்கம் என்ன?..உன்னை நம்பி வரும் தொண்டனுக்கு இதுபோல் நடந்தால் இதுதான் கதியா?...உனக்கு அரசியல் நடத்த தெரியுமா?...போராட தெரியுமா?...உனது வீரமெல்லாம் ஒலிபெருக்கிக்கு முன்பு மட்டும்தானா?...தேர்தல் வரும் இவ்வேளையில் அவ்வுணர்வாளர்க்கு நடந்த இந்த கதிக்கு யார் காரணம் என்று போராட தெரியாத உனக்கு இந்த தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும்... உங்கள் அரசியல் செயல்பாடுகள் இப்படி இருந்தால் உங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் வளரவே முடியாது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கீழ் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு என்ன அரசியல் கற்றுகொடுக்கிறீர்கள்..
ReplyDeleteஇவ்வாறு ஒரு செய்தியை இனையத்தில் படித்தேன்
மிகவும் அதிர்ச்சியளிக்கிரது..
நாம்தமிழர் கட்சியும் மற்ற அரசியல் கட்சிபோல் செயல்படுகிறது...
http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=48814