மரண தண்டனை எதிர்ப்பு - தொடர் முழக்கப் போராட்டம்! பாரிமுனைக்கு வாருங்கள்! வைகோ அழைப்பு



மூன்று இளம் தமிழர்களின் உயிரைக் காக்க, குற்றமற்ற நிரபராதிகளை, தூக்குக் கயிற்றில் இருந்து விடுவிக்க, பதறித் துடிக்கும் ஆயிரமாயிரம் இளயதலைமுறையினரும், மனிதஉரிமைக்குப் போராடும் தன்னலம் அற்ற சகோதரர்களும், சகோதரிகளும், ஆகஸ்ட் 18 காலை ஆறு மணிக்கு, தலைநகர் சென்னையில் இருயது இருசக்கர வாகனங்களில் புறப்பட்டு,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் வழியாக, வேலுhர் வரையிலும் பயணத்தை நடத்துகின்றனர்.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் சார்பில், மனித உரிமை காக்கும் இப்பயணத்தை, கட்சி, சாதி,மத எல்லைகளைக் கடயது, துன்பத் தணலில் துடிக்கும் தமிழ் இனத்தின் ஆவேச வெளிப்பாடாகச் செய்கிறார்கள். நம் அன்புநிறைச் சகோதர்கள், பேரறிவாளன், சாயதன், முருகன் ஆகியோர், ஜனநாயகத்தின் மென்னியை முறித்த தடா சட்டத்தின்கீழ் கைது செய்யப்ப்டடு, போலீசாரின் கொடிய சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தால் தண்டிக்கப்பட்டனர். இருபது
ஆண்டுகள் சிறைக் கொட்டடியில், துன்ப முட்களில் வாடி வதங்கி வாழ்வின் அற்புதமான வாலிபப் பருவத்தை, கண்ணீரோடே கடயது விட்டனர். மரணக் கொட்டடியிலேயே 13 ஆண்டுகள் போய்விட்டன. குற்றமற்ற நிரபராதி, தன் தலை மீது மரணம் எனும் கொடுவாள், துhக்குத்தண்டனை வடிவில் தொங்கிக் கொண்டு இருக்க, ஒவ்வொரு நாளும் அனுபவித்து
உள்ள மனத்துன்பம் மரணத்தைவிடக் கொடுமையானது. மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேர்களுள், நளினி, தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டார். அதே மனிதாபிமான அளவுகோல்தானே இந்த மூவருக்கும் பொருந்தும்?
தமிழ்நாட்டின் கடந்த 17 ஆண்டுகளாக, எந்தச் சிறையிலும், எவரும் தூக்கில் இடப்படவில்லை. எனவே, இம்மூன்று நிரபராதி தமிழர்களின் உயிரை அழிக்காதீர்கள்; அவர்களைத் தூக்கில் போடாதீர்கள். மத்திய அரசு நினைத்தால், எந்த நேரத்திலும் இம்மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியும். எனவே, மூவர் உயிரைக் காக்கவும், நெஞ்சைப் பிளக்கும் வேதனையைத் துடைக்கவும், தக்க
நடவடிக்கை எடுத்திட, தமிழக அரசை வேண்டுகிறோம்.

அறவழியில், அமைதி வழியில், மனக்குமுறலோடு மரண தண்டனையைத் தடுக்கப் பயணிக்கும் 4000 இளம் தமிழரின் குறிக்கோள் வெற்றி பெறட்டும். அவர்கள் பயணிக்கும் பாதையில், அவர்களின் கோரிக்கைக்கு மக்கள் மன்றத்தில் ஆதரவு திரளட்டும்.
உயிர் காக்க நடைபெறும் இயத எழுச்சிப் பயணத்தில், தமிழ் இன உணர்வு கொண்டோரும், மனித உரிமை காப்போரும் பங்கு ஏற்க வேண்டுகிறேன். 18 ஆம் தேதி வியாழக்கிழமை, பொழுது விடியும் நேரத்தில், சென்னையில் இருயது புறப்படுகிறார்கள். துன்ப இருளில் தவிக்கும் மூன்று உன்னதமான உயிர்களுக்கும் விடுதலைப் பொழுது விடியட்டும். அதுபோலவே, ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை, காலை 10 மணிக்கு பாரிமுனையில், மூன்று இளயதமிழரின் உயிரைக் காக்க, மரண தண்டனையைத் தடுக்க, கட்சி எல்லைகளைக்கடந்து, மனிதநேயப் பற்றாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும் நூறாயிரமாகத் திரண்டு, தொடர் முழக்க அறப்போராட்டம் நடத்திட உள்ளனர்.

மரணப் படுகுழியில் இலட்சக்கணக்காக ஈழத்தமிழர்கள் துடிதுடிக்கக் கொல்லப்பட்டு, அதனைத்தடுக்க, தங்கள் சாவின் மூலமாகவாவது வழி பிறக்காதா? என்று, முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர், தங்கள் தேகத்துக்கு நெருப்பு மூட்டிக் கருகிச் சாம்பலானார்கள்.தமிழர் மனங்கள் உடையது நொறுங்கி, அழுது புலம்பும் இயத வேளையில், குற்றமற்ற மூன்று தமிழ் வாலிபர்கள் கொல்லப்படுவதோ? துhக்கில் இடப்படுவதோ? இதை நம் வாழ்நாளில் காண்பதோ? என்று வேதனைத் தீயில் துடிதுடிக்கும் தமிழ் நெஞ்சங்களே, மனித உரிமைக்காப்பாளர்களே, 20 ஆம் தேதி, தலைநகர் சென்னை பாரிமுனை அழைக்கிறது; தவறாது வாருங்கள். மரண தண்டனையைத் தடுக்க வாருங்கள். மாணவக் கண்மணிகளே வாருங்கள்; தொழிலாளத் தோழர்களே வாருங்கள்.

பகுத்தறிவுப் பகலவனின் வழிவந்த குடும்பத்துப் பிள்ளை பேரறிவாளனின் உயிர் தூக்குக்கயிற்றிலா?
கதறித் துடிக்கும் அவனது அருமைத் தாயார் அற்புதம் அம்மாளின் துன்ப ஓலமும்,கதறலும், பதைபதைக்கச் செய்கிறதே?
நம் பிள்ளைகள் மூவரின் உயிர் காக்க வாரீர்!தூக்குத் தண்டனையைத் தடுத்து நிறுத்த, மத்திய அரசு முன்வரட்டும்;
மாநில அரசு அந்நிலையை உருவாக்கட்டும்! என்ற ஆவேச முழக்கம் எழுப்பிட வாரீர் என இருகரம் கூப்பி வேண்டுகிறேன்!

தாயகம்
சென்னை - 8
15.08.2011
வைகோ
பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails