


பேரறிவாளன் கல்வி பாசறை
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, சுமை தூக்கும் தொழிலாளியான திரு.பூ.கா.பொன்னப்பன் அவர்களால் தொடங்கப்பட்டது தான் பேரறிவாளன் கல்வி பாசறை . இவர் தனது கூலித் தொழிலின் மூலம் கிடைக்கும் பணத்தில் பெரும் பகுதியை ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக கைஏடுகளையும் , கரும்பலகை யும் , மாணவர்களுக்கான உபகரணங்களையும், பேரறிவாளன் கல்வி பாசறையின் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக வழங்கிவருகிறார்.மேலும் இவரது நண்பர்களை எல்லாம் இணைத்து குருதிக் கொடை வழங்கிவருகிறார்.
தோழர் பொன்னப்பன் அவர்கள் மிகச் சிறந்த தமிழ் உணர்வாளர் ,பெண்ணாடம் ஐயா கு.கலியபெருமாளின் பற்றாளர்,மிகச்சிறந்த போராளி ,எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நல்ல மனிதர்.இவரைப் போன்ற மனிதர்களை நாம் ஊக்கப்படுத்துவோம் ,பாராட்டுவோம்,இணைந்து செயல்படுவோம்.
நீங்களும் அவசியம் ஊக்கப்படுத்துங்கள்.
பேரறிவாளன் கல்வி பாசறை நிறுவனர் : திரு.பூ.கா.பொன்னப்பன்,9789183545
No comments:
Post a Comment