
வீரமுனைப் படுகொலைகள்,
1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில்
வீரமுனை என்னும் கிராமத்தில் 400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர் .
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக
வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை,
மல்லிகைத்தீவு,மல்வத்தை, வளத்தாப்பிட்டி,சொறிக்கல்முனை,
அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள்
தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை ஸ்ரீ சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் பாடசாலை வளவினுள்ளும் 1990 ஜூன் மாதம் முதல்
ஜூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர் .
இக்காலகட்டத்தில் , ஆகஸ்ட் 12ம் நாளன்று இவற்றினுள் புகுந்த கும்பல்
ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கிப்
படுகொலை செய்தனர்.இதிலும் அதிகமானோர் காயமுற்றனர். அவ்வேளையில்
கடத்தப்பட்டோர் பற்றி இன்றுவரை தகவலில்லை .
No comments:
Post a Comment