


பலர் படிப்பிருந்தும்,சீட் கிடைத்தும் தகுதியிழக்கயிருந்தவர்கள்.
குடிசை வீட்டில் எரிந்த சிமிலி விளக்குகளில் படித்து,
படிப்பையே கேள்வி குறியாக்கியவர்கள் ...
இன்று வெளிச்சம் அமைப்பால் வாழ்கை வெளிச்சம் பெற்றவர்கள்.
சகமனிதனை மனிதனாக நேசிக்கிற மனிதர்கள் உருவாக்குகிற
வெளிச்சத்தின் வழிகாட்டுதலில் உதயமாகிறது பலர் வாழ்கை பயணம்...
தோழர்களே!
சமூகத்தின் அவலங்களை கண்டுகொதிக்கும் நீ நானும் தோழர்கள் தான்..
நீங்கள் பாக்கெட்டில் பணமில்லாமல் என்றைக்காவது சாப்பிட போகாமல் பச்ச தண்ணியில் வயிறை நிறப்பி வாழ்கையை நடத்தியதுண்டா…
பர்சை தவறவிட்டுவிட்டு பணமில்லாமல் பஸ்ஸில் பயணம் பண்ணியிருக்கிறீர்களா…
ஊர் திருவிழாவில் உறவுகளை தொலைத்துவிட்டு விழிகளை நம்பி அழுது நின்றிருக்கிறீர்களா…
இந்த அவலங்களை அனுபவித்த நீங்கள்..
காலேஜி பீஸை இன்சால்மெண்ட்ல கட்டுவதற்கு டைம் கேட்டதுண்டா..அதையும்
கட்டமுடியாமல் காலேஜி பீஸ்கட்ட முடியாத உனக்கெல்லாம் எதுக்குடாண்ணு
அசிங்கப்பட்டதுண்டா….ஹால்டிக்கட் கொடுக்காமல் ஆப்சண்ட் போட்ட கல்லூரியை
நியாயம் கேட்ட போது கல்லூரி நிர்வாக உங்களைப் பார்த்து “நா” கூசாமல் அவன்
லீவு போட்டுட்டான் ,அவன் பரிச்சை எழுத வரவில்லைன்னு சொன்னதுண்டா…
சுதந்திரம் வாங்கி 63இய கடந்த போதும் வீட்டுல அப்பா-ஆத்தா யாரும்
பள்ளிகூடம் பக்கம் கூட போகாத கூலிகளாய் கிடக்க..நீங்கள் கரணட் இல்லாத
வீட்டில் படித்து கல்லூரி கனவு கண்டதுண்டா..வலிகளும் வேதனைகளும்
அனுதினமும் ரணமாய் வலிக்க…..
இது போன்ற ஏழைகள் படிக்க நினைப்பது தப்பா தோழர்களே…
இது போன்ற 486 மாணவர்களை பிச்சை எடுக்கும் நிலை வந்தபோதும் பிச்சை எடுத்தும் வெளிச்சம் படிக்க வைக்கிறது…
Phone: 044-64996340, +919500162127:
Email; edu.dignity@gmail.com,velicam.students@gmail.com
No comments:
Post a Comment