
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது : எஸ்.எம்.கிருஷ்ணா
புதுடெல்லி, ஆகஸ்ட் 27, 2010
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை ராணுவ தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியது :
"கடந்த 2008-ம் ஆண்டில் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது நடத்திய தாக்குதல் குறித்து 15 வெவ்வேறு சம்பவங்கள் பற்றிய தகவல் வந்தது. இதில் 6 மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், 17 மீனவர்கள் படுகாயமடைந்ததாகவும் தெரியவந்தது. ( இதனுடன் சேர்க்க :: இது மிக குறைந்த எண்ணிக்கை என்று சிங்களவர்களிடம் தெரிவித்தோம். இது நாங்கள் கொடுத்த பயிற்சிக்கு இழுக்கு )
சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதலிலும் தமிழக மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இலங்கை ராணுவத்திடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்து வருகிறது. ( எண்ணிக்கை குறைந்ததற்கு மிகவும் வருந்துகிறோம் என்றார்கள் )
தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வலியுறுத்தப்படுகிறது. தற்போது இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. ( நான் சென்ற வருடம் பத்திரிக்கை மட்டும் படிக்கும் வழக்கம் உள்ளவன் , தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் ) நடந்து முடிந்த ஒருசில தாக்குதலுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க முடியாது என்று கூறியுள்ளது. ( பிற தாக்குதலுக்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார்களாம். )
ஆனால், நாம் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு முன்னுரிமை அளித்து இலங்கை ராணுவத்திடம் அவ்வப்போது பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். ( என்ன பேச்சுவார்த்தை என்பது எப்போதும் எனக்கு விளங்கியதே இல்லை. ஏன் என்றால் பேச்சுவார்த்தை தொடங்கியதும் நான் தூங்கி விடுவேன் )
மனிதாபினமான அடிப்படையில் இலங்கை கடலோர காவல் படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறோம். ( கெஞ்சி மன்றாடி கேட்டு வருகிறோம். அடுத்த முறை ராஜபக்ச காலை பிடித்து கதறுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறோம், ஏன் என்றால் இந்தியா ஒரு வல்லரசு என்று பேசிக்கொண்டு இருக்கிறோம் )
கடந்த 2008-ம் ஆண்டு போடப்பட்ட கடலோர எல்லை குறித்த ஒப்பந்தத்தின்படியே தமிழக மீனவர்கள் செயல்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலிலும் அவர்கள் தாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளோம். (நாங்கள் அணு ஆயுதம் எல்லாம் வைத்திருக்கிறோம் என்பதை கொஞ்சம் நீங்கள் கவனத்தில் எடுத்து எங்களுக்கு குறைந்த பட்ச மரியாதை தர வேண்டுகிறோம் ) இதனை இலங்கை அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளோம். (ஊருக்குள்ள எங்களை ரவுடி என்று கூப்பிட சொல்லி இருக்கும் இந்த நேரம் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால் யாரும் எங்களை மதிக்க மாட்டார்கள் என்று உங்கள் காலில் விழுந்து கேட்டு கொள்கிறோம்)
இதைத்தொடர்ந்து தற்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவமும் கடலோர காவல் படையும் தாக்குதலை நிறுத்தியுள்ளன, ( தாக்குதல் என்பதை நாம் ஒத்து கொண்டாலும் , இதை மீறி நீங்கள் தாக்கினால் எமது கடற்படையை நாங்கள் மீன்பிடிக்க அனுப்புவோம் என்பதை மிக தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்) " என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
( வாழ்க இந்திய சனநாயகம், வாழ்க இந்தியர்கள் )
No comments:
Post a Comment