
உலகிற்கும் உணர்த்துவோம்
ஓர் குடையின் கீழ் நாம் ஒன்றினைவோம் .
எமது உயிரிலும் மேலான எமது செல்வங்களுக்கு மதிப்பளிக்கும் நாளான மாவீரர் நாளினை நாம் என்று நடைபெறுவது போல் இந்த ஆண்டும் நாம் இனிதே அவர்களுக்கான மதிப்பினை நாம் கொடுப்போம்
மாவீரர் தினம் ஒன்றே எங்கள் பலத்தின் வெளிப்பாடு ! மாவீரரை மதித்து ஓரிடத்தில் ஒன்றிணைவீர் !
மாவீரர் ,அவர் மரணத்தால் மரணிக்க முடியா மாபெரும் பிறவிகள் ! மண்ணுக்காய் உயிரை அவர் உவகையோடு தந்தவர் !
உயிருக்கு அஞ்சி நாம் உடல் காக்க பிற நாடு வரை ஓடியபோது , எதிரிக்கு இங்கே இடம் இல்லை என்று உடலை குண்டை தந்தவர் !
பொன்னுக்கும் பொருளுக்கும் என்று வாழும் உலகில் சுதந்தரம் ஒன்றே மேல் என்று வாழ்ந்து சென்றவர் !
அவர்தம் நாளில் பிரிந்து நிற்பதா ? ஏன் ? தேசிய தலைவரின் அணியில் ஒன்றாய்தானே நின்றோம் ! விரும்பியோ விரும்பாமலோ இன்று ஏன் பிரிவு ? வெற்றியில் கைதட்டினோம் , ஆர்ப்பரிதோம் அல்லவா ! களத்தில் சிங்களவன் மண்ணின் மைந்தர்களை ஆயுத பலத்தால் அடக்க கூடாது என்று குளிரிலும் கூதளிலும் உழைத்த பணத்தை வாரி வழங்கினோம் அல்லவா ? ஏன் வழங்கினோம் ! புலத்தில் நின்ற செயல்பாட்டாளர்களுக்கு நாம் கொடுத்தது களத்தில் நிற்கும் உயிருக்கு ஆயுத பலம் சேர்க்க அல்லவா ? இன்று புலத்து தலைமைகளின் பரிவுக்க அப்பால் நாம் அதே களத்தில் மாண்ட வீரர்களுக்காக ,மக்களாக இணைந்து நிற்க வேண்டாமா ? யார் ஒருங்கமைத்தாலும் நாங்கள் ஒன்றாக ஓரிடம் செல்வோம் என உரத்து கூறுவோம் !
புலத்தில் பரந்து வாழும் எம் மக்களினை குறிவைத்தும் எமது தேசிய நாள் ஆனா மாவீரர் நாளினை குழப்புவதும் ஈழ விடுதலையின் என்ன கருவில் இருந்து எமது மக்களினை முற்றிலும் அகற்ற சிங்கள பேரினவாத அரசு இப்போ புலத்தில் கங்கணம் கட்டியுள்ளது பல உருவங்களில் பல நாடுகளில் மிகவும் சாதுரியமாக காய் நகர்த்தி வருகின்றது நாம் இவற்றினை எளிதில் அறிவது கஷ்டம் தான் எமது விடுதலை பெரும் விருட்சம் முன் இது எமது கண் தூசு தகுந்த நேரத்தில் கண்டறிந்து நாம் விழித்து கொள்வது தான் எமது அடுத்த நகர்வுக்கான வழியாகும் இவற்றினை மனக்கண்ணில் நிறுத்து எமது
தெய்வங்களுக்காக நாம் எல்லோரும் ஒன்றாக கை இணைந்து நிற்போம் ! தலைமைகள் உடைந்தாலும் நாங்கள் வழி தவறாமல் நடப்போம் ! தேசிய தலைவரும் மாவீர தெய்வங்களும் மட்டுமே எங்களை வழி நடத்தட்டும் ! பலவித மினஞ்சல்களும் இணையதளங்களும் பலவித கருத்துகளை கூறினாலும்,எமது செல்வங்களை நாம் மனம் திறந்து கூப்பிடும் நாளினை சிறப்புற நாம் நடத்துவோம் என்றும் எமது செல்வங்கள் விட்டு சென்ற பாதையினை நாம் நிறைவேற்றும்
முதலில் மெய்பொருளை கண்டறிவீர் ! தலைமைகள் பிரிந்தாலும் வடிவங்கள் மாறினாலும் எம்மை எல்லாம் இலக்கை நோக்கி நகர வைக்கும் அந்த பலத்தை தரும் எங்கள் மாவீரரின் ஆத்மாக்கள் என்றைக்கும் எம்மை வழிதவறாமல் காக்க வைக்கட்டும் !
இந்த மடல் யாருடைய தலைமையையும் எதிர்த்து எழுதப்பட்டதல்ல , ஒரே இடத்தில் ஒற்றுமையாக நடாத்தப்பட வேண்டும் என்ற நோக்கோடு மட்டுமே எழுதப்பட்டது !
மாவீரரே உங்கள் மீது நாம் உறுதி எடுத்து கொள்கின்றோம் நீங்கள் எந்த இலக்கினை நோக்கி பயணித்தீர்களோ அந்த இலக்கினை நாம் ஆடையும் வரை நாம் ஒரு பொது ஓயாமட்டோம்
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !
No comments:
Post a Comment