maaveerar naal 2011,Trichy, Tiruchirapalli,tamilnadu




மாவீரர் தினத்தையொட்டி அஞ்சலி செலுத்துவதற்காக திருச்சி மாவட்டத்தில் ஈழ விடுதலை ஆதரவு கட்சிகளான புதிய தமிழகம் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் பாசறை, பெரியார் தத்துவ மையம், ஆதி தமிழர் பேரவை ஆகியவை இணைந்து, திருச்சி மாநகரில் அஞ்சலி செலுத்துவதற்காக 5 இடங்களுக்கு மேல் 10 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டு காவல்துறைக்கு கடிதம் கொடுத்திருந்தனர்.

ஆனால், சம்மந்தப்பட்ட காவல்நிலைய இன்ஸ்பெக்டர்கள் நாங்கள் அனுமதி கொடுக்க முடியாது என்றும், மாவட்ட காவல்துறை ஆணையரை சந்தித்து அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டனர். மாநகர காவல்துறை ஆணையரோ மேலிடத்தில் இருந்து ஈழ சம்மந்தமான பிரபாகரன் படங்களை வைக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளதால், அனுமதி கொடுக்க முடியாது என மறுத்ததோடு, மாநகர துணை காவல்துறை ஆணையரை பாருங்கள் என்று கூறியதும், அவரை சந்தித்தால், நாட்களை கடத்தி குறிப்பிட்ட தேதிக்கு முதல் நாள் அனுமதி கிடையாது என்று தெரிவித்துவிட்டார் என்று ஈழ ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்சி ரயில்வே ஜென்ஷன் அருகே உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தின் உள்ளே மாவீரர் தினம் கொண்டாட முடிவு செய்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிக்காக வடிவமைக்கப்பட்ட பேனர் பெரியதாக இருந்ததால், அலுவலகத்தின் உள்ளே எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆகையால் அலுவலகத்தின் வெளியே பேனரை வைத்து அஞ்சலி செலுத்தினர். அப்போது வந்த காவல்துறையினர் அலுவலக வாசலில் பேனர் வைத்திருப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று 30 பேரை கைது செய்தனர்.

புறநகர் மற்றும் மாநகர புதிய தமிழகம் மாவட்டச் செயலாளர்கள் ஐயப்பன் மற்றும் சங்கர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்நாடன் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails