thileepan loyola


திலீபன் ஒரு சாதனை தமிழன் :

மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ......
மாணவர்களுக்கு அரசியல் வேணாம்....
பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா.....
உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா....
படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா....

இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது..

திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன்
இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும்
தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல...
அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று.......

அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும்
என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன்
இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு
பிள்ளையார் சுழி இட்ட லயோலா கல்லூரி மாணவர்கள்
8 பேர் என்பதை யாரும் மறுக்க முடியாது...

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல்
இன்றையதினம் தமிழ்நாடு முழுதும் நடைபெறும்
மாணவர் போராட்டத்துக்கு ஆணி வேராய் இருக்கும்
லயோலா மாணவர்கள் 8 பேரில் ஒருவரான
தம்பி திலீபனை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம்...

தாயின் கருவில் இருக்கும் போதில் இருந்தே
தமிழை சுவாசமாய் சுவாசித்தவன் தான் இந்த திலீபன்...

அதற்கு ஆதாரமாய் பின்வரும் தகவல்கள் ...

1330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூ.10,000 பெற்ற திருக்குறள் திலீபனின்
கவனகம் மற்றும் நினைவாற்றல் நிகழ்ச்சி

பதினாறு கவனக நிகழ்ச்சி 1. குறள்கவனகம் 2. பறவைக்கவனகம் 3. எண்கவனகம் 4. விலங்குக்கவனகம் 5. எழுத்துக்கவனகம் 6. நூல்கவனகம் 7. கூட்டல்கவனகம் 8. மலர்க்கவனகம் 9. பெயர்க்கவனகம் 10. பழக்கவனகம் 11. ஆண்டுக்கவனகம்12. நாடுகள்கவனகம் 13. மாயக்கட்டகவனகம் 14. வண்ணக் கவனகம் 15. தொடுகவனகம் 16. ஒலிக் கவனகம

திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சி 1.முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் 2. குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல் 3. குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல

1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல்

கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லுதல்

பிறந்த தேதி
முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும் உடன் கிழமையைச் சொல்லுதல்.

உலக நாடுகளின் பெயரைச் சொன்னால் தலைநகரத்தின் பெயரைச் சொல்லுதல்...

இத்தனை திறமைகள் உள்ள மாணவன் தான்
தற்போது லயோலா உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட
திலீபன்..

திலீபனையும் அவனது குடும்பத்தையும் கண்ட பின், பழகிய பின்,
நிச்சயமாக இது பெற்றோர்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும் போராட்டம் என்பது தெளிவானது...

மேலும் பல விஷயங்கள் திலீபனை பற்றி
விரைவில் நான் எனது பக்கத்தில் வெளியிடுவேன்.
திலீபனை நாம் உலகறிய எடுத்து செல்ல வேண்டும்
அதற்கு என்னால் ஆன உதவி செய்ய வேண்டும்
அது தான் எனது ஆசை..

சாதாரண மாணவன் அல்ல திலீபன்
அவனை பற்றிய பல சாதனைகளை
உங்களுக்கு நான் காணொளியாக
விரைவில் தருகிறேன்
உங்கள் அன்பான ஆதரவினை
அந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்து
உலக அரங்கில் எடுத்து செல்லுங்கள்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails