அண்ணன் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 57வது பிறந்தநாள்வீரத் திருமகனே வாழ்க நீ பல்லாண்டு..

சீர் ஓங்கும் நீலக் கடலும் வாவியும் சேர்ந்திளங்கும்
தமிழீழத்தின் வல்வெட்டி துறையினிலே
வந்து உதித்த நாயகனே..

கார்திகைப் பூவோடு கூடவே பிறந்தீர்
காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர்.
தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை
களமாட விட்டீர்..

தர்ம யுத்த கதைகளை நாம் கற்கும் போது
எல்லாம் வெறும் புராணமாய் நாம் அறிந்தோம்
ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய்
நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம்
என நாம் உணர்ந்தோம்..

மலையென எதிரி எம் குகை புகுந்தாலும்
இறப்பொன்று நாளை நம் இருப்பிடம் வந்தாலும்
வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன்
உங்களின் வழி தொடர்ந்திருப்போம்..

வையகத்து நதியாக வந்த எங்கள் அண்ணனே
பாசத்தின் உறைவிடமாக வந்தவனே ..
பார் போற்றும் எங்கள் தலைவனே ..
தமிழ்த்தாயின் உயிர் மகனே..
தமிழர் அவர் உயிர் பேறே வாழ்க பல்லாண்டு
புவி வாழும் வரை வாழ வாழ்த்துகின்றோம்...

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails