Vijay,Shankar,Ashokan,norway,dharmapuri,pennagaram

ஜீ.வி-யில்


அறிவுமதியுடன் விஜய் அசோகன்

திடீரெனக் கிளம்பும் தர்மபுரி தமிழர்! தனித் தமிழீழம் சாத்தியமே

தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் முடிந்து, அரசியல்ரீதியான
போராட்டங்களின் மூலமாக நாடு கடந்த தமிழீழத்தை அமைக்கிற முயற்சிகள் தீவிரமாகியிருக்கிறது! பன்னாட்டுத் ஈழத் தமிழர்கள் தங்களுக்குள் தேர்தல் நடத்தி, நாடு கடந்த தமிழீழ பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் தொடங்கி விட்டார்கள்.

கடந்த 18-ம் தேதி நார்வே நாட்டில் ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நடந்தது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் அசோகன் என்ற மாணவர் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால், ''ஈழத் தமிழர் அவைக்கு தமிழ்நாட்டுத் தமிழன் பிரதிநிதியாக இருப்பதா? ஈழத்தில் பிறந்தவர்களுக்கு பிரதிநிதியாகும் சக்தி இல்லையா?'' என சிங்கள மீடியாக்கள் இதை வைத்து உசுப்பல் வேலை தொடங்கிவிட்டன! டெல்லியில் இலங்கையின் தூதராக இருந்த சுதிஷ்வர சேனபிரான் ஒருபடி மேலே போய், ''விடுதலைப் புலிகளின் பணத்தை நிர்வகிக்கும் ஆசையில்தான் தமிழ்நாட்டுத் தமிழன் நார்வே ஈழத் தமிழர் அவைக்கு போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறார்'' என குற்றம்சாட்டி இருக்கிறார்!

இந்நிலையில், நாம் நார்வேயில் இருக்கும் விஜய் அசோகனை தொடர்புகொண்டு

பேசினோம். ''நான் தர்மபுரி மாவட்டம் பெண்ணகரத்தை சேர்ந்தவன்.
ரெண்டு வருடங்களுக்கு முன்புதான் ஆராய்ச்சிப் படிப்புக்காக நார்வே வந்தேன். ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரும் சுமக்கும் மாபெரும் வலி, ஒரு தமிழனாக என்னையும் வதைத்துக் கொண்டிருக்கிறது. ரத்தத்தை கொடுத்தும் சுதந்திரக் காற்றை ஈழத் தமிழர்களால் சுவாசிக்க முடியவில்லை. அதனால் அரசியல்ரீதியான பலத்தில்தான் ஈழத்தின் சுதந்திரத்துக்கு ஒளி கொடுக்க முடியும். ஆகவே, நார்வே ஈழத் தமிழர்கள் அவைக்கான தேர்தலில் போட்டியிட்டேன்.அவர்கள் என்னை பெருவாரியான வாக்குகள்வித்தியா சத்தில் தேசியபிரதி நிதியாக்கி இருக்கிறார் கள்...'' என்றவரிடம் அடுத்த கேள்விகளை வைத்தோம்.

''தமிழ்நாட்டு தமிழரான நீங்கள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதற்கு விமர்சனங்கள் எழுந்திருக்கிறதே?''

''தமிழ்நாட்டு தமிழர்களின் ரத்தத்தில் தமிழ் ரத்தம் ஓட வில்லையா? தமிழர்களிடம் துண் டாடும் வித்தைகளைவிதைத்ததே, சிங்கள இனவெறியர்கள் தான். ஈழத்தில் உக்கிரமான போர் நடந்த போது, தமிழகத்தின் உதவியையும்உறுதுணை யையும் ஈழத் தமிழர்கள் பெரிதாக எதிர்பார்த் தார்கள். அவர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து தமிழ்நாட்டில் எத்தனையோ பேர் தங்கள் உயிரையே தீக்குத் தின்னக் கொடுத் தார்கள். ஈழத் தமிழன் வீழ்ந்தாலும், வெந்தாலும் தமிழ்நாட்டுத் தமிழன்கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டும் என நினைக்கிற அரக்க சக்திகள்தான், வேண்டுமென்றே நமக்குள் துண்டாடலை நடத்திக் கொண்டிருக் கின்றன!''

''நீங்கள் புலிகளின் பணத்தை நிர்வகிக்க நினைப்பதாக இலங்கையின் முன்னாள் தூதர் குற்றம்சாட்டி இருக்கிறாரே?''
''சிறிதளவும் உண்மையோ, அடிப்படையோ இல்லாத குற்றச்சாட்டு இது. அவர் அப்படி சொல்லியதைக் கேட்டு விவரமறிந்தவர்கள் சிரிப்பார்கள்!''

நாடு கடந்த தமீழழம் சாத்தியம்தானா?''

''ஆயுதம் தாங்கி எந்தளவுக்கு போராட முடியுமோ போராடிப் பார்த்துவிட்டார்கள். சிங்கள ராணுவத்துக்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமான தாக்குதல்களை நடத்தி, தமிழ் மக்களின் வாழ்வுக்கு வழி செய்த அவர்களின் வீரியப் போராட்டத்துக்குப் பலன் கிடைக்காமல் போய்விட்டது. ஆயுதம் தாங்கிய போராட்டங்களுக்கு இனரீதியான வதைப்புகள் தான் காரணம் என்பதை உலக மனசாட்சியால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதனால் அரசியல் சார்ந்த பக்குவங்களைக் கையாண்டே தமிழீழத்தை நம்மால் உருவாக்க முடியும். எத்தனையோ நாடுகள் இந்த வகையில் சுதந்திரத்தை எட்டி இருக்கின்றன.

நார்வே ஈழத் தமிழர் அவை மூலமாக நாடு தழுவிய கட்டமைப்பொன்றை உரு வாக்குவதற்கான ஆரம்ப முன்னெடுப்புகள் 2008-ம் ஆண்டே எடுக்கப்பட்டிருக்கின்றன. நார்வேயில் உள்ள தமிழர்களிடத்தில் நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பில் 99 சதவிகிதத்தினர் சுதந்திரமும் இறையாண்மையும் பொருந்திய தமிழீழத் தனியரசு அமைவதையே வலியுறுத்தி இருந்தார்கள். அவை மூலமாக நார்வே அரசுக்கு அனைத்துவிதமான வலியுறுத்தல்களையும் செய்வோம். நார்வேயில் சில இடங்களில் மட்டுமே வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக தமிழர்கள் இருந்தாலும், இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு காது கொடுக்கத் தயாராக இருக்கின்றன. அதன் மூலமாகவே தமிழீழக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்துவோம். ஒவ்வொரு திசையிலும் இத்தகைய கோரிக்கைகள் உரத்து முழங்கப்பட்டால் கண்டிப்பாக தமிழீழம் சாத்தியம்தான்!''

ஆரம்பம்தொட்டே ஈழ விவகாரத்தில் சமாதானம் ஏற்படுத்துவதற்காக போராடிய நார்வே அரசு, இறுதிக்கட்ட போரின்போது அமைதியாகி விட்டது ஏன்? குறிப்பாக, மே 18-ம் தேதி நடந்த பெருந் துயரங்களுக்கு நார்வேயைச் சேர்ந்த எரிக் சோல்ஹைமும் ஒருவகையில் காரணமாகிவிட்டார் எனச் சொல்லப்படுகிறதே?''

''இந்தக் கருத்து நார்வேயிலும் நிலவுகிறது. கடைசி நேரத்தில், எரிக் செய்த சில குளறுபடிகளால்தான் புலிகள் ஏமாந்து போனார்கள் என இங்கு பிரசாரமே நடக்கிறது. அதேபோல், நார்வே அரசும் சிங்கள அரசுக்கு தொடர்ந்து சில உதவிகளை வழங்கிக் கொண்டுதான் இருந்தது. ஆதிக்க அரசுகளுக்கு தலையாட்டியதால் தமிழர்களின் துயரங்களை நார்வேயால் தடுக்க முடியவில்லை. ஈழத்தில் வீழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் ரத்தத் துளி நார்வே மீதும் படிந்திருப்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை!''

''பிரபாகரன் உயிரோடு இருப்பதாகவும் கொல்லப்பட்டு விட்டதாகவும்... குழப்பம் நீடிக்கிறதே?''

''தலைவர் இருந்தாலும் மடிந்தாலும் தமீழத்தைக் கட்ட எல்லாவித போராட்டங்களையும் அவர் நடத்தினார். அவருடைய பெருங்கனவு தனித் தமிழீழம்தான். அதை நிறைவேற்ற எல்லோரும் கைகோத்தால் அதுவே அந்த தமிழ் வீரனுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்!''

விலை போன புலி?
'மாவீரர் தினத்தன்று பொட்டு அம்மான் பேசுவார். பிரபாகரனே பேசுவார்' என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் கூடியிருக்க... இப்போது 'சிங்கள தாக்குதலில் இருந்து இறுதி யுத்தத்தில் தப்பிச் சென்ற புலிகளின் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த ராம் பேசுவார்' என்று ஒரு தகவல் வெளியானதும், அந்த இயக்கத்தின் வெளியக பணிப்பிரிவு பொறுப்பாளரான கதிர்காமத்தம்பி அறிவழகன் கடுப்போடு எதிர் அறிக்கை விட்டார். 'யுத்தம் முடியும் நிமிடம் வரையில் இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்த ராம் மற்றும் நகலன் ஆகியோர் எப்படி திடீரென 'இன்னொரு கருணாவாக' மாறிப்போனார்கள்?' என்று அறிக்கையில் கேட்டுள்ள அறிவழகன்.. 'ஆயுத யுத்தம் முடித்து, உளவியல் போரை தொடங்கி இருக்கிறது சிங்கள அரசு. ராம் மூலமாக நம் இயக்கத்துக்குக் கேடான கருத்துகளை சாமர்த்தியமாகப் பரப்பி, எதிர்கால போராட்டத்தை முடக்கும் தந்திரம்தான் இது!' என்று அறிவழகன் சொன்னதைத் தொடர்ந்து.. 'என்னதான் நடக்கிறது? யாரைத்தான் நம்புவது?' என்று உலகெங்கிலும் உள்ள புலி விசுவாசிகள் மத்தியில் அதிர்ச்சி ப்ளஸ் குழப்பம்!
thanks: vikatan.com, bala UTMA

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails