காசி ஆனந்தன் உயிர்த்தெழுவோம்! மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவோம்!








உயிர்த்தெழுவோம்! மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுவோம்!

காசி ஆனந்தன்



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

வாழத்துடித்தெழுந்த ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...





கடல் அலையைக் கட்டிப்போட கயிறு உண்டா...!

விடுதலையை தடுக்கும் வேலி உலகில் உண்டா...!



இன்னொரு கோலம் எடுக்கும் தமிழீழம்

மின்னல் வெடிக்கும்! மீண்டும் புயல் அடிக்கும்!

எத்தனை பெரிய மலை எனினும் கற்பாறை மொத்தமும் உடைத்தெறி!

எரிமலைத் தீ மூச்சு விடும்!

விடுதலையை தடுக்கும் வேலி உலகில் உண்டா...!

கடல் அலையைக் கட்டிப்போட கயிறு உண்டா...!



புத்தனை வணங்கும் சிங்களவன் போர்முனையில்

எத்தனை தமிழர் உயிர்பறித்தான் எண்ணிப்பார்...! எண்ணிப்பார்...!

பால்குடித்த பாதியிலே பச்சை குழந்தை ஒன்று

கால் சிதறி கை சிதறி களத்தில் விழி மூடிற்றாம்.

பெண் ஒருத்தி களத்தில் தலையிளந்து கிடந்தாளாம்.

அண்ணன் தங்கையிருவர் அணைத்தபடி சாய்ந்தாராம்.

கொள்ளைக் கனவுகள் கொண்டிருந்து தாயொருத்தி

பிள்ளை வயிற்றோடு பிணமாக போனாலாம்...!

நெருப்பு குளித்து உயிர் நீத்த ஒரு கிழவன்

கறுப்பு கரிவிறகாய் கடல் மணலில் கிடந்தானாம்!

பதுங்கு குழி மீது படை வண்டி பாய்ந்து வர

பிதுங்கு விழியோடு பிணங்கள் குவிந்தனவாம்!

அருமை தமிழ் உயிர்கள்! ஆருயிர்கள்! இன்னுயிர்கள்!

இருபதினாயிரம் உயிர்கள் ஒரு நொடியில் இல்லையாம்!



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

இந்த பழியனைத்தும் சிங்களவன் தலை மீது வந்து விழாது என்று

நினைத்தாயா?

வந்து விழும்! வந்து விழும்!



முள்ளி(வலை) வாய்க்கால் முற்றத்தில் நாளை விடிவெள்ளி முளைக்கும்

வெளிச்சம் தெரியும் பார்!

ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...



கொடியவன் சிங்களவன் கொலை வெறியை முல்லை போர் முடிவில் உலகம்

முழு அளவில் தெரிந்துள்ளது...

கூடி கொலை புரிந்த உலகம் தன் குற்றத்தை

மூடி மறைக்க முடியாமல் தவிக்கிறது!

காலம் மெதுமெதுவாய் உலகத்தை கைபற்றி

ஈழம் இருக்குமிடம் இழுத்து வருகிறது...!



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

வாழத்துடித்தெழுந்த ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...



அன்னை மண். உலகம் இரண்டிலும் இனி நாங்கள்

முன்னைவிட ஆயிரம் மூச்சோடு தலைனிமிர்வோம்!

தேம்பலிலும் அழுகையிலும் தேய்வோமா!

எமை எரித்த சாம்பலிலும் நாங்கள் உயிர்த்தெழுவோம்!

ஈழவிடுதலை போர் தொடுப்போம்! தொடர்வோம்!

தமிழர் வாழ உலகனைத்தும் எரிமலைகள் வளர்த்தெடுப்போம்!



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

வாழத்துடித்தெழுந்த ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...



கொலைவெறியன் சிங்களவன் நம்மை கொச்சை படுத்துகிறான் பழையபடி

கொழும்பில் பறைத்தமிழா என்கின்றான்!

"கொட்டியா" என நேற்று நடுங்கியவன்

உன் வீட்டில் கட்டடா சிங்க கொடியென்று அதட்டுகிறான்!

கிளிநொச்சி பேர்கேட்டு கிலி கொண்டு ஓடியவன்

தமிழச்சி மார்புகளை தடவி சிரிக்கின்றான்!



பற்றித் தமிழ்பெண் தாலி பறிக்கின்றான்!

நெத்தி பொட்டழித்து நெருங்கி உரசுகிறான்!

மீண்டும் தமிழன் மிக மலிந்து போய்விட்டான்!

கொடுமை பெருகுவதால் கொதிக்கும்; தமிழர் சினம்

விடுதலை நெருப்பில் எண்ணெய் விடும் என்பதனால்!



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

வாழத்துடித்தெழுந்த ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...



எங்கள் தமிழீழ எழில் நிலத்தில் தீ வைத்த சிங்களவனோடு

சேர்ந்தென்ன வாழ்க்கை!

தாய்க் குலத்தின் தமிழ்பெண் குலத்தின்; உடல் சிதைத்த நாய்க்குலத்தோடு

இனி என்ன நட்புறவு!

குலை குலையாய் தமிழர்களின் குடும்பங்களை அழித்த

கொலைவெறிக் கும்பலோடு இனி என்ன கொண்டாட்டம்!

வேலிகட்டி தமிழர்களை மாடுகளைபோல் அடைத்த

காலிப்பாயலோடு இனி என்ன கை குலுக்கல்!

வெள்ளைக் கொடி பிடித்த நடேசன் மேல் குண்டுகளை அள்ளி பொழிந்தவனோடு

இனி என்ன அரவணைப்பு!



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

வாழத்துடித்தெழுந்த ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...



ஈழத்தலைவன் இணையில்லா தமிழ்த்தலைவன்!

காலத்தால் வந்த கண்மணியாம் நம் தலைவன்!

தீயும் புயலுமாய் திகழும் பெருந்தலைவன்!

தாயும் தந்தையுமாய் தாங்கும் அருந் தலைவன்!

நாஞ்சுக்கழுத்தை நமக்களித்த போர்த் தலைவன்!

நெஞ்சு நெருப்பாக்கி நிலம் வளர்த்த உயர் தலைவன்!

தன் குழந்தை துப்பாக்கி தங்கவைத்த தனித்தலைவன்!

மங்கையரை புலிகளாய் மாற்றிவைத்த மணித்தலைவன்!

தமிழரிலே வான்படை தந்த முதல் தலைவன்!

குமுறி எழும் கடலுக்கு மாற்றான பதில் தலைவன்!

சிங்களர் படை நடுங்க சிலிர்த்தெழுந்த புலித்தலைவன்!

தங்கத் தலைவன், தமிழ்வேந்தர் வழித் தலைவன்!

ஆயிரம் களம் கண்ட ஆற்றலுடைத் தலைவன்!

தாயகம் தன்னுயிராய் ஏற்ற படைத் தலைவன்!

பொங்குபோர்த் தலைவன்! புறத்தலைவன்! மறத்தலைவன்!



உங்கள் தலைவன்! உயிர்த் தலைவன்!

இருக்கின்றான் நம்பியிருங்கள்

தலைனிமிர்வோம் தலைனிம்ர்வோம்



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

வாழத்துடித்தெழுந்த ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...



வானம் உள்ளவரை! ஈழத் தமிழ் மண்ணில் மானம் உள்ளவரை!

புலிக்கொடியும் வாழ்ந்திருக்கும்!

துயிலார் உள்ளவரை ஈழத்தமிழ் மண்ணில் அயாலார் உள்ளவரை!

ஆயுதமும் வாழ்ந்திருக்கும்!

வீரம் உள்ளவரை ஈழத்தமிழ் மண்ணில் போர்கள் உள்ளவரை

புலிப்படையும் வாழ்ந்திருக்கும்!

ஈழம் உள்ளவரை ஈழத்தமிழ் மண்ணில் காலம் உள்ளவரை

காப்பரனும் வாழ்ந்திருக்கும்!



ஈழத் தமிழினமே! ஈழத் தமிழினமே!

வாழத்துடித்தெழுந்த ஈழத் தமிழினமே!

நேற்று நீ வீழ்ந்தாய் நினைத்தாயா..!

எவன் சொன்னான்...

காற்று திசை மாறி உள்ளது கவலை விடு...கவலை விடு...



இன்னொரு கோலம் எடுக்கும் தமிழீழம்

மின்னல் வெடிக்கும்! மீண்டும் புயல் அடிக்கும்!



உயிர்த்தெழுவோம்! ஈழத்தமிழினமே உயிர்த்தெழுவோம்!

உயிர்த்தெழுவோம்! ஈழத்தமிழினமே உயிர்த்தெழுவோம்!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails