jegan and devaki walk for justice from murugathasan ground to european union headquarters (842KM)






சிவந்தன் ஏந்திய தீ தொடர்கிறது! பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கி...சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம். தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும் தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம்.
எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரி, ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடரப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்ததிலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வகையில் உற்சாகம் வழங்கி உதவி புரிந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கிய நடைப்பயணம்.
இந்த நீதிப் பயணத்தை முதியவர் ஜெகன் (அவுஸ்திரேலியா) அவர்களும், தேவகி அவர்களும் முன்னெடுத்துள்ளனர்.
நீதிப்பயணமானது 28.08.2010 அன்று ஜெனீவாவில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஊடாக 26.09.2010 தியாகதீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவு நாளன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையக முன்றலில் நிறைவுக்கு வரவுள்ளது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார் எங்கள் திலீபன் அண்ணா.
உலகத் தமிழ் உறவுகளே! அனைவரும் ஒன்று திரளுவோம்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails