naam tamilar katchi gobichettipalayam







ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளயத்தில் சீமானை தமிழகத்தின் தலைவனாக அடையாளம் காட்டிய மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து வைக்கப்பட்டு இருக்கும் நாம் தமிழர் கட்சி பதாகை..

1 comment:

  1. வித்யாசாகர்September 2, 2010 at 10:35 AM

    சிறை; கொடுத்துவைத்தது சீமானே..............!

    இளமை கனவுகளை ஈழத்தில் தொலைத்தவரே,

    விடுதலையின் எழுச்சிக்கு எட்டுதிக்கும் பறந்தவரே,

    ஈழதேசம் என் நாடென்று எல்லை தமிழனுக்கும் சொன்னவரே,

    எம்மின மக்களுக்காய் தன்னலம் துறந்தவரே,

    அண்ணன் தம்பி நீயென்று என் சனத்தொட வாழ்பவரே,

    லட்சியம் ஒன்றென்று சத்தியம் காத்தவரே,

    கத்தி கத்தி பேசி பேசி எம் அடையாளம் மீட்டவரே,

    சுட்டெரிக்கும் வார்த்தையினால் எதிரியை சுண்டி; சுண்டி எறிந்தவரே,

    எரிக்கும் கனல் பேச்சாலே எமக்கு சுதந்திர தாகம் கொடுத்தவரே,

    பணம் பார்க்கும் திரையில் கூட பாடம் சொல்லி தந்தவரே,

    மொழிக் குற்றம் முதல் குற்றமென எம் காதுகளில் அறைந்தவரே,

    அண்ணன் தம்பி பாசம் ஊட்டி இளைய பட்டாளம் வலைத்தவரே,

    தமிழென்னும் அமுதுக்கு தவமாய் கிடப்பவரே.........

    சீமானே..... சீமானே............

    வடுகப் பட்டியிலிருந்து வாட்டிகன் சிட்டி வரை தமிழர் உள்ளம் நிறைந்த சீமானே - இளையோர் சொல்லி மகிழும் சீமானே....

    உனை சிறைக்கம்பி என்ன செயும் - பார் உன் நரைமுடிக்குக் கூட பயந்து போகும் சீமானே..........

    மண்டைக்கேறிய பயமும் கட்டிப் போடும் சூழ்ச்சியும் - உனை ஆயுள் முழுக்க என்ன அடக்கியா போட்டு விடும் சீமானே.....?

    அடக்க இயலா எழுச்சியின் பெருந்........... 'தீ' ............ நீயென அறியாமலா இருந்துவிடும் சீமானே......?

    நீ கிளறிவிட்ட சுதந்திர புரட்சி - இனி நீ சொல்லாமலும் சுடர் விட்டெழும் சீமானே.......

    மேஜை தட்டி தட்டி நீ பேசிய தமிழ் கையினை தூக்கி தூக்கி மேலே நிறுத்திய உன் தமிழ் உனை காக்கும் பொருட்டே விரைவில் ஓடிவரும் சீமானே..................

    பொருள் படைத்தவர் அழைத்ததை எல்லாம் உதறிய உன் மனமும் உண்மையும் உனை எப்பொழுதுமே காக்கும் சீமானே..............

    எங்கள் இதயம் முழுதும் நீயிருக்க உனக்கு சின்ன சிறையென்ன அந்தமானில் கூட வைக்கட்டுமே சீமானே; அந்த - அந்தம்மான் கூட - உனைபெற்று தனை திருத்திக் கொள்ளும் சீமானே........

    உன்னோட தமிழ் கேட்டு அந்நிய மொழியை அறுத்துக் கொண்டதெம் தமிழ்மக்கள் சீமானே..........

    திருத்திக் கொண்ட மொழியின் - மண்ணின் - நன்றிக் கடலெனப் பொங்கி - உனை வெல்லும் பலம் கொள்ளச் செய்யும் சீமானே......

    உன் அன்பில், அக்கரையில், வேகத்தில், விவேகத்தில்.. உடைபடும் சிறை - பார் சீமானே.........

    விரைவில் - வெற்றி கொள்ளுமுன் லட்சியமென்பேன் - காரணம் லட்சியத்தில் எனக்கும்; தமிழர்க்கும்; பங்குண்டு சீமானே!! ------------------------------------------------------------------------------------------------- வித்யாசாகர்

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails