malaysia pinag PROF. DR. P. RAMASAMY,மலேசியா பினாங்கு பேராசிரியர் பழனி ராமசாமி





மலேசியா பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர் பழனி ராமசாமி..
தமிழ் இளையோர்களின் வழிகாட்டியாக திழ்பவர்..
உலக தமிழ் செம்மொழி மாநாட்டினை புறக்கணித்து அதை எதிர்த்தவர்..
தமிழர் பிரச்சணைகளுக்கு எதிராக பல காலங்களாக குரல் கொடுத்து வருபவர்...

2 comments:

  1. சோனியா, கருணாநிதியிடமும் போர்க்குற்ற விசாரணை-பினாங்கு துணை முதல்வர்

    கோலாலம்பூர்: இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அதிபர் மற்றும் அவரது தம்பிகள் தவிர, இந்தியத் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங் , காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரும் சர்வதேச அரங்கில் விசாரிக்கப்பட வேண்டும் என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி வலியுறுத்தினார்.

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய ஜனநாயக நடவடிக்கைக் கட்சியின் தலைவரும், பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வருமான பேராசிரியர் பி. ராமசாமி கூறியதாவது:

    இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தத்தின், இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தனர். சர்வதேச போர் நெறிமுறைகளை காலில் போட்டு நசுக்கிவிட்டு தமிழர்களை இனப் படுகொலை செய்தது இலங்கை ராணுவம். இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

    இலங்கை இராணுவத்தால் அங்கு நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு, இந்தியாவே உறுதுணையாக இருந்துள்ளது. இந்தியாவின் விரலசைவுக்கு ஏற்பவே இந்தப் போர்க்குற்றங்கள் அரங்கேறியுள்ளன. இதனை ராஜபக்சேவே கூறியுள்ளார்.

    எனவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் , தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோரது பங்களிப்பும் இதில் இருப்பது உறுதியாகிறது. எனவே இவர்களுக்கு எதிராகவும், போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை, அமெரிக்கக் காங்கிரஸ் உறுப்பினர்கள், ஐ.நா. செயலர் ஆகியோர் வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள் இந்தியத் தலைவர்கள் மீதான போர்க் குற்றங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்", என்றார்.

    ReplyDelete
  2. I always salute our prof ramasamy for his daring voice for ilankai tamils struggle and for his open support for LTTE. keep it up prof.

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails